Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினில் ..
தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது..
எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது, நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு நீண்ட கால நண்பர். துரை அண்ணனிடம் பேசினேன் ஆனால் முதலில் நம் நட்பு கெட்டுவிடும் என மறுத்தார். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து ஒப்புக்கொண்டார். யாரை கதாநாயகனாக்கலாம் என்று கேட்ட போது சுந்தர் சி அண்ணாவைச் சொன்னார். உடனே நம் படம் கண்டிப்பாக ஹிட்டாகுமென சொன்னேன். இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
திரு . J சுரேஷ் பேசியதாவது…
இந்த விழாவிற்கு வர மூன்று காரணம் துரையும் நானும் 20 வருட கால நண்பர்கள், இரண்டாவது இந்தக்கதையை நானும் துரையும் சேர்ந்து தயாரிப்பதாக இருந்தது. இந்தக்கதையை அவர் சொன்ன போதே பிரமித்தேன். என்ன மாதிரியான ஒரு நெரேஷன். மூணாவது காரணம் சுந்தர் சி, அவரை அவ்வளவு பிடிக்கும், அவரோடு நான் சேர்ந்து படம் செய்வதாக இருந்தது, அவரை வேஷ்டியில் பார்க்க மம்மூட்டி போலவே உள்ளது. இந்தப்படத்தின் டிரெய்லர் பாடல்கள் எல்லாம் அட்டகாசமாக உள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். வாழ்த்துக்கள்.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசியதாவது..
மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு இந்த விழாவிற்கு வந்தேன், இயக்குநர் துரை அண்ணன் எனக்கு குரு, அவருடைய நல்ல பழக்கத்தை நான் பின்பற்றி வருகிறேன், சுந்தர் சி சார் உழைப்பு சாதாரணம் இல்லை, 27 வருடம் இந்த துறையில் இருக்கிறார், தலை நகரம் முதல் பாகத்தை விட இந்தபடம் வெற்றி பெறும்
இயக்குநர் சசி பேசியதாவது..
நண்பன் துரையிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய படங்களில் எமோஷன் இருக்க அவருடன் பழகி கதையைப் பகிர்ந்து கொள்வதே காரணம். டிரெய்லரில் ஆக்சன் எல்லா காட்சிகளிலும் இருந்தது. ஆனால் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய எமோஷன் இருக்கும் எமோஷன் இல்லாத கதை கண்டிப்பாக ஜெயிக்காது.
டி எஸ் பி வல்லவன் பேசியதாவது…
துரை மிக இனிய நண்பர் முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். பிரபாகருக்கு இந்த பயணம் நல்லதொரு வெற்றிப்பயணமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது..
சசி சார் எப்போதுமே துரை சார் பற்றி நிறையப் பேசுவார் அவர் நல்ல உழைப்பாளி. துரை சார் பாடலில் ஒரு வாரத்தைக்காக அரை நாள் விவாதிப்பார். அவருடன் தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சி. சுந்தர் சி சாருடனும் தொடர்ந்து பயணிக்கிறேன் மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி.
நடிகை ஆயிரா பேசியதாவது..
ரொம்ப பெருமையாக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை தந்த துரை சாருக்கு என் நன்றிகள். சுந்தர் சி சார் படத்தில் நடிக்கும் போது, நிறைய ஆதரவாக இருந்தார். இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் நன்றிகள்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…
இயக்குநர் துரை மிக எமோஷலான மனிதர், எப்போதும் உரிமையோடு பேசுவார். பழனி படத்திற்குப் பிறகு நேபாளியில் பரத்தை வைத்து மிரட்டியிருந்தார். அப்போது தான் அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என உணர்ந்தேன். துரை எப்போதும் சினிமாவை மட்டுமே நேசிப்பவர். அவர் வெற்றிபெற வேண்டும். இப்படி எல்லோரும் வாழ்த்த இனிதே விழா நிறைவு பெற்றது. படத்தின் இந்தி ரைட்ஸ் தமிழக விநியோகம் மற்றும் எல்லாம் வியாபாரம் நடந்தது எனவே வெற்றி பட்டியலில் தலைநகரம் 2