ஒரு வழக்கமான whodoneit படத்தைப் போலத்தான் துவங்குகிறது போர் தொழில். திருச்சியில் ஒரு இளம் பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அடுத்த சில நாட்களில் அதேபோல கொலைசெய்யப்பட்ட மற்றொரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக லோகநாதன் (சரத்குமார்) என்ற முசுடு அதிகாரியும் அவருக்கு உதவியாக அப்போதுதான் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்த பிரகாஷும் (அசோக் செல்வன்) நியமிக்கப்படுகிறார்கள்.
படத்தின் இடைவேளையின்போது கொலைகாரனைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அப்படியானால், இரண்டாம் பாதியில் என்ன செய்யப்போகிறார்கள் என்று யோசிக்கும்போதுதான் திருப்பம்.
அந்தத் திருப்பம் வலிந்து திணிக்கப்பட்ட திருப்பமாக இல்லாமல், இயல்பாக இருக்கிறது. முடிவில் கொலைகாரன் யார், அவனது சைக்கோத்தனத்துக்கு என்ன காரணம் என விரிகிறது படம்.
லோகநாதனாக சரத்குமார் வரும்போதே, “ஐயோ, இவர் வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை இருக்கும் போலிருக்கிறதே… அதற்கு ஒரு பிளாஷ்பேக்கும் இருக்கும்போல” என்ற பதற்றம் இயல்பாகவே ஏற்படுகிறது. ஆனால், நல்லவேளையாக அப்படி ஏதும் விபரீதமாக செய்யாமல், நேரடியாக கதைக்குள் புகுந்துவிடுகிறார்கள்.
இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் பாடல்கள் ஏதும் கிடையாது. நகைச்சுவைப் பகுதிகளும் கிடையாது. முழுக்க முழுக்க கதை ஒரே நேர்கோட்டில் நகர்கிறது. படம் நெடுக காட்டப்பட்டிருக்கும் ‘டீட்டெய்லிங்’கில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. படத் தொகுப்பும் பின்னணி இசையும்கூட நன்றாக இருக்கிறது.
ஒரு கொலை த்ரில்லர் படம், பார்ப்பவர்களைத் திடுக்கிட வைத்து வெகு நாட்களாகிறது. அதனை இந்தப் படம் செய்கிறது. மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு இது கடைசிப் படம்.
சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்பாபு, இயக்குநர் விக்னேஷ் ராஜா என படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கு்ம ஒரு ஹாட்ஸ் ஆஃப்! இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. திரையரங்குகளில் பார்க்கத்தக்க படம்தான் இது. கொலை நடந்த இடங்களும் அதற்கான காரணங்களும் திகிலை ஏற்படுத்துகிறது கிளைமாக்ஸ் கட்சியில் ஒரு பதட்டம் ஏற்படுகிறது சைக்கோவில்லனிடம் நாயகியே மாட்டிக்கொள்ளும் போதும் செம விறுவிறுப்பு சைக்கோவின் கை ஓங்க ஓங்க என்ன நடக்குமோ என்ற பதட்டம் நமக்குள் ஏற்படுகிறது இப்படி ஒரு விறுவிறுப்பான திகில் படம் ராட்சசன் படத்திற்கு பிறகு இந்த படம் வழங்கி உள்ளது அருமையான படம் அனைவரும் பார்த்து ரசிக்கலாம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது படத்தில் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்க