பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘பாபா பிளாக் ஷீப்’.

இந்த படத்தோட விமர்சனத்தை பார்க்க லாம் வாங்க

படத்தின் கதை என்ன

இன்றைய மாணவ, மாணவியர்களின் தற்கொலை, மன அழுத்தப் பிரச்சினைகள், பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பு, இணையத்தில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகள். அப்புறம் கடைசி பெஞ்சுக்காக அடித்துக் கொள்ளும் மாணவர்கள் பள்ளியில் நடக்கும் காதல் காட்சிகள். மாணவர்களுக்குள் நீயா நானா மோதல். வாத்தியார் பிள்ளை மக்கு இத தாங்க சொல்லுது இந்த ‘பாபா பிளாக் ஷீப்’ படம்.

சுரேஷ் சக்கரவர்த்தி நடத்தி வரும் பள்ளி இங்கு ஒரே வளாகத்தில் குறுக்கே சுவர் எழுப்பி ஆண்கள் பள்ளி, இரு பாலர் படிக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அவர் பொசுக்குன்னு
மண்டைய போட்ட பிறகு பள்ளி யை. நம்ம சுப்பு கைக்கு வருது. ரெண்டையும் ஒன்னா சேர்க்கிறார் ஆனாலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஆண்கள் பள்ளியை சேர்ந்த 5 பேருக்கும், இரு பாலர் பயிலும் பள்ளியை 5 பேருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்படுகிறது. சன்டை யோ சன்டை

என்னங்க சண்டை ன்னா சட்டை கிழியதானே செய்யும் மண்டை ஒடையதானே செய்யும்
அதுவும் நடக்குது

ஒரு நாள் சண்டையில் ரெண்டு குழுவும் ஒன்னாசேர்ராங்க
அதன் பிறகு நட்பு பலம் ஆகிறது .

அப்போது இவர்கள் கையில் பெயர் குறிப்பிடாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக எழுதிய கடிதம் கிடைக்கிறது.

அந்த கடிதத்தை எழுதியது யார்? .. இந்த தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டதா? இதுபோன்ற பிரச்சினைகளுக்கும் என்னதான் தீர்வு? என்பதை தன் பாணியில் பேசியுள்ளார் ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் இயக்குநர் ராஜ் மோகன்.

சரி இந்த படத்தில் நடிச்சவங்க
நடிப்பு எப்படி? பார்க்கலாம் வாங்க

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பார்த்து பழகிய பல முகங்கள் படம் முழுவதும் வருவதால் ரசிகர்கள் படத்துடன் எளிதாக கனெக்ட் ஆகி விடுவார்கள். ஓரளவு கதையில் எல்லோருக்கும் பங்கு கொடுத்து குட் மார்க் வாங்குகிறார் ராஜ் மோகன். கம்பேக் கொடுத்த அபிராமியின் நடிப்பு சூப்பர். கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை அடிப்படையாக கொண்டு காட்சிப்படுத்தப்பட்டாலும் அந்த காட்சிகள் நன்றாக இருக்கிறது மனதை கவரும் வண்ணம் இருக்கிறது என்பதை சொல்லி தான் ஆகனும்

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர ஒரு கதை உள்ளதை ஜி.பி.முத்துவை வைத்து சொன்னது சிறப்பு. அம்மு அபிராமி – அப்துல் அயாஸ் இடையேயான காட்சிகள் நன்றாக உள்ளது.
அம்மு அபிராமி நல்ல தேர்வு நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.
ராஜ்மோகன் தனது முதல் படம் என தெரியாத அளவுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். முதல் பாதி முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்கள் அட்ராசிட்டி, பள்ளி கால வாழ்க்கை, பள்ளிக்காதல், வகுப்பறை அலப்பறைகள் பற்றி பேசி கலகலப்பாக மாறியுள்ளது

பாய்ஸ் ஸ்கூலுக்கு ஒரு உருப்படாத கேங்கும், கோ எஜுகேஷனுக்கு ஒரு உருப்படாத கேங்கும் கடைசி பென்சுக்காக சண்டை போடுவதையே இடை வேளை வரை கொண்டு சென்றுள்ளனர் இயக்குனர் முற்பட்டுள்ளார் விருமாண்டி, சமுத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த அபிராமியை வைத்து ஒரு குட்டி மெசேஜ் போர்ஷனை அழகாக செய்துள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வது போலவும் அபிராமி கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இறுதியில் என்ன ஆகிறது என்பதுடன் இந்த படத்தை முடித்துள்ளனர். கிளைமாக்ஸ் டூவிஸ்ட் நன்றாக உள்ளது

2K கிட்ஸ் வாழ்க்கையை சொல்கிறேன் என சொல்லிவிட்டு ஆர்ஜே விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, அபிராமி உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ்களுக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் மாட்டி விட்டு விட்டாரோ இயக்குநர் என என்ன தோன்றுகிறது. படத்தின் ஆரம்பத்தில் அந்த பள்ளியை பற்றி சொல்லும் டீச்சராக வரும் இயக்குநர் ராஜ்மோகன் அதற்கு பிறகு அந்த பள்ளியில் இருந்தே கடைசி வரை காணாமல் போகிறார். மொத்தத்தில் இந்த பாபா பிளாக் ஷிப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ளது அவர் செல்போனில் இருக்கும் சில்மிஷ படங்களை பற்றி படம் பேசுகிறது அவர்கள் கடைசி பெஞ்சுக்காக எப்படி படிக்காமல் வருகிறார்கள் என்பதையும் சொல்கிறது இந்த படம் அம்மு அபிராமியின் அழகான கண்கள் படம் முழுக்க பேசுகிறது காதலுக்கு அழுத்தம் கொடுக்காமல் தற்கொலைக்கு தீர்வு சொல்ல முயன்று இருக்கிறது இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு கதை அதை படமாக்கிய விதம் அதற்கு மெருகூட்டும் இசை ஒலி ப்பதிவு என எல்லாமே நன்றாக இருக்கிறது விக்னேஷ் நடிப்பு நன்றாக இருக்கிறது நாயகன் துரு துரு என வருகிறார் அவருக்கு நிறைய படம் வரும். போஸ் வெங்கட் நடிப்பு நன்றாக இருக்கிறது தன் மகனை கண்டித்து வளர்த்ததால் மகன் இப்படி ஆகிவிட்டானே என அவர் புலம்பி அழுது கண்ணீர் சிந்தும் காட்சிகள் பெற்றோர் மனதிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் மொத்தத்தில் அந்த பாபா பிளாக் ஷிப் ஒரு நல்ல காமெடியான கலகலப்பான இன்றைய இளைஞர்களுக்கு தேவையான நல்ல படமாக வந்துள்ளது

பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைக்க தனியார் பள்ளிக்கு அனுப்பினால் கடைசி பெஞ்சை பிடிக்க போட்டிப் போடும் மாணவர்கள் கடைசியில் எங்களை திட்டாதீங்க, மனம் விட்டு பேசுங்க இல்லைன்னா தற்கொலை பண்ணிப்போம் என்று சொல்கிறார்கள் அப்படியே பெற்றவர்கள் கஷ்டத்தையும் விசுவலா காட்டிஇருந் தால் நல்லா இருக்குமே பாஸ்