கொலை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது அப்போது தயாரிப்பாளர் தனஜெயன் அவர்களின் புதிய முயற்சியால் விஜய் ஆண்டனியின் வித்தியாசமான கண்ணோட்டத்தால் ஏழு நிமிட மேக்கிங் வீடியோ போடப்பட்டது அந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்த்து பிரபல இயக்குனர்கள் லிங்குசாமி அவர்கள் சசி அவர்கள் சிவி குமார் அவர்கள் விஜய் அவர்கள் மற்றும் உள்ள பிரபலங்கள் அனைவரும் வியந்து போய் பாராட்டினார் விஜய் ஆண்டனியின் ரசிகர்களும் அந்த மேக்கிங் வீடியோ பார்த்து வியந்து போயினர் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தில் இசையமைக்கப்பட்ட பாணி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படம் ஆன புதிய பறவை படத்தில் இடம்பெற்ற மெகா ஹிட் பாடல் ஆன பார்த்த ஞாபகம் இல்லையோ அந்த பாடலை மெலோடி தந்தது ஹாலிவுட் இசை என எல்லாமே வியக்க வைக்க வைத்தது ஒரு மாடல் அழகிகொலை அதை கண்டுபிடிக்கும் விஜய் ஆண்டனியும் ரித்திகா சிங்கும் வித்தியாசமான முறையில் துப்பு துலக்கும் பாணி செம்ம இன்ட்ரஸ்டிங்கா இருந்தது இந்த படத்தில்
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ள படம், ’கொலை’. இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.

விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, ‘’உலகத் தரமான ஒரு படத்தில் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. எந்த படத்துக்குமே முழுப்பொறுப்பு, இயக்குநர்தான். அவருக்குத் தூணாகவும் துரும்பாகவும் இருப்பதுதான் என்னைப் போன்ற டெக்னீஷியன்கள். இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி, இந்திய சினிமாவுக்கு கிடைத்திருக்கிற தரமான இயக்குநர் என்பது ‘கொலை’ படம் பார்க்கும்போது தெரியும்’’ என்றார். இயக்குனர் மிஸ்கின் கொலையை பற்றி ரிசர்ச் செய்து வந்து மேடையில் பேசினார் ஒரு கொலை எப்படி நடக்கிறது அதற்கான வியூகம் என்ன அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன ஆவார்கள் என்பதை பற்றி விளக்கமாக பேசினார் வித்தியாசமான முறையில் நடந்த இந்த கொலை படத்தின் முன்னோட்டம் விழா வெற்றிக்கான சான்றாக இருந்தது பல முன்னணி நிறுவனங்களின் ஆலோசராக இருந்த சினிமாவைப் பற்றி புத்தகம் எழுதி தேசிய விருது பெற்ற தனஜெயன் அவர்கள் இந்த படத்தை எப்படி வெற்றிகரமாக்குவது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார் நூறு சதவீதம் வெற்றி என்பது இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிந்ததுவாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா