லவ் படத்தின் விமர்சனம்

லவ் படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க நடிகர் பரத் தற்போது தனது 50வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் RP.பாலா இயக்கத்தில் பரத் நடித்திருக்கும் இந்த லவ் திரைப்படம் மலையாளத்தில் இதே பெயரில் வெளிவந்த லவ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். தனது RP ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் RP.பாலா மற்றும் கௌசல்யா பாலா இணைந்து தயாரித்திருக்கும் இந்த லவ் திரைப்படத்திற்கு PG.முத்தையா ஒளிப்பதிவில், அஜய் மனோஜ் படத்தொகுப்பு செய்ய தினேஷ் மோகன் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். ஸ்டன்னர் சாம் அவர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது லவ் திரைப்படத்தின் நடன இயக்குனராக சந்தோஷ் பணியாற்ற பாடல்களை AA PA ராஜா எழுதி இருக்கிறார். கடைசியாக பரத் நடிப்பில் வெளிவந்த மிரள் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை வாணி போஜன் லவ் திரைப்படத்திலும் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆனி போப், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரோனி ரபேல் இசை அமைத்திருக்கிறார். இந்த லவ் திரைப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
சலூன் கடை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பரத் தன் அப்பாவின் கம்பெனியை பார்த்துக் கொண்டிருக்கும் வாணி போஜன் இருவரும் திருமணத்திற்காக சந்தித்து பேசுகிறார்கள் அப்போது வாணி போஜனன் அப்பா போன் செய்து ராதாரவி அஜய் செட்டாக மாட்டான் அவன் கேரக்டர் சரியில்லை நீ வந்துவிடு என்று வாணி போஜனை அழைக்கிறார் ஆனால் வாணி போஜன் அப்பா பேச்சையும் மீறி. பரத்தை திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறார் திருமணமான பின் ஒரு வருடம் கழித்து வாணி போஜன் குழந்தைக்கு தாயாகிறார் வீட்டிலேயே குடித்துவிட்டு வேலை விட்டு இல்லாமல் தண்டசோறாக வாழ்ந்து வருகிறார் பரத். இவர்கள் இருவருக்கும் ஒரு பிரச்சனை மூலம் சண்டை ஏற்படுகிறது அந்த சண்டையில் நடந்த விபரீதம் என்ன அதன் பின் நடக்கும் சுவராசியமான திரைக்கதை தான் இந்த லவ்
: காதலுக்கு கண் இல்லை என்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது திருமணத்திற்கு முன் ஒருவன் உதவாக் கரையாக இருந்தால் திருமணத்திற்கு பின் திருந்தி விடுவான் என்பது நியதி அதற்குப் பின்னும் அவன் முட்டாளாகவே வாழ்ந்து வந்தால் அந்த திருமணம் சரிஇல்லைஎன்பது அர்த்தம் இதைதான்
படம் வலியுறுத்துகிறது. ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் பிளாட் ஒன்று இது தான் கதை களம். வாணி போஜனும் பரத்தும் படம் முழுக்க அந்த பிளாட்டில் தான்தங்குகிறார்கள் இருவருக்கும் சன்டை. அந்த சன்டை க்கு காரணம். ஒரு தவறு படம் முழுக்க எப்படி அலைய வைக்கிறது இருவரையும் காலாகிறது மன அழுத்தம் கொண்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார் பரத் நாயகியாக வாணி போஜன் அழகான முகம் ஸ்டைலான நடிப்பு பணக்கார பெண்ணுக்கு உண்டான தோற்றம் காதலன் மீது காட்டும் பாசம் மனைவியான பிறகு உரிமைக்காக போராடும் போராட்டம் தாய்மை அடைந்த பின் காட்டும் பரவசம் என படம் முழுக்க வாணி போஜன் ஆக்கிரமித்துக் கொள்கிறார் அவர் கண்ணாடி போட்டிருக்கும் போதும் அழகாக இருக்கிறார் மனைவியாக நடிக்கும் போதும் அழகாய் இருக்கிறார் படத்தில் அவர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.விவேக்
பிரசன்னா வரும் காட்சிகள் கலகலப்பு பரத்திடம் அவர் செய்யும் கலாட்டா ஏகப்பட்ட காமெடி அதே போல் டேனியல் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது அவரிடம் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. அது படம் பார்ப்பவர்களுக்கு புரியும் ஒரு காட்சியில் வந்தாலும் மிடுக்காக இருக்கிறார் ராதாரவி மிரட்டலாக நடித்திருக்கிறார் தன் மகளுக்கு அநியாயம் நடந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று பொங்கி எழுகிறார். ஒரே வீடு இதை வைத்துக்கொண்டு இயக்குனர் ஆர் பி பாலா கச்சிதமாக படத்தை எடுத்திருக்கிறார் அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலை தூண்டுகிறார் ஒரே பிளாட்டில் நடப்பதால் கதைஎங்கும் நகராமல் சீராக செல்கிறது.
: ரோணி ரெபல் பின்னணி இசை மிரட்டுகிறார் மெலடி என இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கிறது பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது ஒரே வீடு லைட்டிங் கோனம் எல்லாம் நன்றாக இருக்கிறது பளிச்சென்று இருக்கிறது காதல் காட்சிகளும் ஒளிப்பதிவாளர் புகுந்து விளையாடி இருக்கிறார். இயக்குனர் ஆர் பி பாலா கச்சிதமாக படத்தை கொண்டு சென்றுள்ளார் கிளைமாக்ஸ் கட்சியில் பெண்களின் அனுதாபத்தை பெறுவது போல் காட்சி அமைப்பு வசனம் வைத்துள்ளார் இது படத்திற்கு மிகவும்பிளஸ்சாக அமையும் இவர் நிறைய படங்களுக்குபணியாற்றிய அனுபவம் ஒரு வெற்றி படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்ற ஐடியலாதெரிந்து வைத்திருக்கிறார் மொத்தத்தில் இந்த லவ் சக்தி வாய்ந்தது மிரட்டக் கூடியது எதிர்பாராத திருப்பம் கொடுக்க கூடியது எல்லா வகையிலும் காதல் சக்தி வாய்ந்தது என்பதை இந்த படம் சொல்கிறது இயக்குனர் ஆர் பி பாலாவுக்கு தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்