LGM விமர்சனம்

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் படம் “எல்.ஜி.எம்” (Lets Get Married) இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா , யோகி பாபு, ஆர்ஜே விஜய், இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எல்.ஜி.எம் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் இசையமைத்தும் உள்ளா ரமேஷ் தமிழ்மணி. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
15, கோடி பட்ஜெட்டில் உருவான படம் இந்தியா முழுவதும் 2300 ஸ்க்ரீனில் வெளியாகிறது.தோனிதயாரிப்பில் முதல் படம் சிக்சர் அடித்துள்ளது.

படத்தின் கதை என்ன

இதெல்லாம் எங்க நடக்கும் என நினைக்க வைக்கும்.கதை இன்னொரு பக்கம் இப்படியெல்லாம் நடந்தா நல்லாருக்கும்ல என ஏங்க வைக்கும் அளவுக்கு லாஜிக் உள்ளது.!

இரண்டு வருட டேட்டிங்கிற்கு பிறகு ஹரிஷ் கல்யாணும், இவானாவும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்பா இல்லாமல் தனியாளாக ஹரிஷ் கல்யாணை வளர்க்கும் அம்மா நதியாவோ எதிர்ப்பே இல்லாமல் சம்மதிக்கிறார். ஆனால் திருமண சம்பந்தம் பேச போன இடத்தில், ஒரு பிரச்சினை. கல்யாணத்திற்கு பிறகு மாமியாருடன் இருப்பது சிக்கல் என இவானா தெரிவிக்கிறார். இதனால் திருமண பேச்சு நின்று போகிறது. ஆனாலும் ஹரிஷ் கல்யாணை விட மனசில்லாமல் நதியாவை பற்றி புரிந்து கொள்ள ஒரு ட்ரிப் ஒன்றை இவானா பிளான் செய்ய அதை ஹரிஷ் கல்யாண் செயல்படுத்துகிறார். இந்த ட்ரிப் ஒர்க் அவுட் ஆனதா.. மாமியார் நதியாவுடன் மருமகள் இவனா ஒன்று சேர்ந்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.
மாமியார் மருமகள் பிரச்சனை உலகம் முழுவதும் உள்ளது இதை ஒரு கதைக்களமாக கையெடுத்தது பாராட்டுக்குரியது

நடிப்பு எப்படி?

இவானாவிடம் இளமை பொங்குகிறது நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் எதையும் செய்து பார்க்க வேண்டும் என்று துணிச்சல் திருமணத்திற்கு நோ சொல்லும் தைரியம் புதுமை பெண்ணாக அருமையாக நடித்தி ருக்கிறார் இவானா நதியா இன்னும் இளமை மாறாது அழகான அம்சமான அம்மா நதியா பப்பில் குடித்துவிட்டு நடனமாடும் அந்த இடத்தில் நாயகி யார் நதியாவா அல்லது இவானாவாஎன்று கேட்கத் தோன்றுகிறது நதியா அவரின் பார்வை உறுதி நடிப்பில் தெளிவு அம்சமான தேர்வு ஹரிஷ் கல்யாண் இரண்டாம் பாதியில் சிறப்பு தோற்றத்தில் வருவது போல நினைக்க வைக்கிறது. திக்கி திக்கி பேசுகிறார் இயல்பாக பேசவில்லை எல்லா இடத்திலுமே அவருக்கு ஒரு தடுமாற்றம் இருக்கிறது கதாபாத்திரத்துக்காக அப்படி பேசுகிறாரா இல்லை இயல்பாகவே அப்படித்தானா ஒரு கலகலப்பு இல்லையே. இருந்தாலும் நன்றாக இருக்கிறது. இவானா இன்னும் 2 படங்கள் நடித்தாலும் நமக்கு “லவ் டுடே” படத்தின் நிகிதா கேரக்டர் தான் கண்முன் வந்து போகிறது. நதியா முதல் பாதியில் வயதான அம்மாவாகவும், இரண்டாம் பாதியில் இளம் வயது அம்மாவாகவும் காட்சியளிக்கிறார் (வயசே ஆகாது போல..!). இதேபோல் யோகிபாபுவின் காமெடி நன்றாகவே வேலை செய்துள்ளது. படத்தின் மிகப்பெரிய பலம் யோகி பாபு தான் டிரைவர் மாதவனாக வந்து செம காமெடி செய்கிறார் காத்தாடி ராமமூர்த்தி கலாய்க்கும் போது தியேட்டரை விழுந்து விழுந்து சிரிக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் புலிக்கே டப் கொடுக்கும் காமெடியனாக ரசிக்க வைக்கிறார்

படத்தின் நிறை குறை என்ன?

அடிப்படையில் எல்.ஜி.எம் படத்தின் கதை இன்றைக்கு சர்வ சாதாரணமாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் பயம் கொள்ளும் ஒருவித பிரச்சினையைத் தான் கொண்டுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் இதைத்தான் சொல்லி பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் முதல் பாதி ரசிக்க வைத்தது. சிந்திக்க வைக்கிறது இரண்டாம் பாதி கிளைமாக்ஸ் ரசிக்க வைக்கிறது

காதல்,சென்டிமென்ட் போன்றவை ரசிகர்களுக்கு மனநிறைவை தருகிறது. பாடல்கள் நன்றாக இருக்கிறது இயக்குனர் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கதையை எடுத்திருக்கிறார் மாமியார் மருமகள் பிரச்சனை எல்லா வீட்டிலும் இருக்கிறது எல்லா குடும்பமும் ஒன்று சேர்ந்து பார்க்க வேண்டிய படம் ஒளிப்பதிவு செம ரிச் ஆக இருக்கிறது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது எடிட்டர் கிளைமாக்ஸில் வரும் அந்த சாமியார் ஜோக் கோஜி கேரக்டரையும் அந்த போர்சனையும் அப்படியே அழகாக தூக்கி இருந்தால் இன்னும் படம் டிரிம்மாக இருந்திருக்கும் நதியாவும் இவானாவும் வரும் கார் ரிப்பேர் ஆகி விட அவர்கள் எங்கு போவது என்று விழிக்கும் பொழுது வில்லன்கள்கையில் மாட்டி இருந்தால் படம் இன்னும் கொஞ்சம் நீளம் குறைந்திருக்கும் காட்சிகளையும் குறைத்து இருக்கலாம் மொத்தத்தில் இந்த படம் தோனிக்கு ஒரு வெற்றிப் வித்தியாசமான புதுமையான தரமான படத்தை கொடுத்ததற்கு இயக்குனரை பாராட்டலாம்