இயக்குனர் சாய்மோரா இயக்கத் தில் தொடு தூரம் என்ற படத்தின் பூஜை பிரசாத் லேபில் நடைபெற்றது இயக்குனர் இதற்கு முன் ஏழு படங்களை எடுத்து வெற்றிகரமாக ரிலீஸ் செய்து சாதனை படைத்துள்ளார் அதேபோல இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று இதில் கலந்துகொண்ட பிரபல விஐபிகள் அவரை பாராட்டினார்கள் இந்த விழாவில் மதுவந்தி அவர்கள் குத்து விளக்கு ஏற்ற ஒய் ஜிமகேந்திரன் அவர்கள். இயக்குனர் பேரரசு அவர்கள் கஞ்சா கருப்பு அவர்கள் இப்படத்தின் நாயகன் விஜய் விஸ்வா ஒய் ஜி மதுவந்தி ஆதேஷ் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
இயக்குனர் பேரரசு பேசும்போது தொடுதூரம் படம் சின்ன படம் அல்ல மக்கள் பாராட்டினால் எந்த படமும் பெரிய படம்தான் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் சினிமா இண்டஸ்ட்ரியை காப்பாற்றி வருவது சின்ன படங்கள் தான் நிறைய புதுமுக நடிகர்களை புதுமுக இயக்குனர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது பெரிய பட்ஜெட் படங்களை அவரது ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் சின்ன பட்ஜெட் படத்துக்கு நாம் எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் இரண்டு வருடத்திற்கு முன்பு சின்ன படங்களுக்கு அவ்வளவாக வியாபாரம் இல்லை தற்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள் தான் 16 வயதினிலே வரும்போது அதில் நடித்தவர்கள் எல்லோரும் புது முகம் தான் ஒரு தலை ராகம் வரும்போது அதில் நடித்தவர்கள் இயக்குனர் எல்லோரும் புது முகம் தான். புரட்சி செய்த படங்கள் எல்லாமே சின்ன பட்ஜெட் படங்கள் தான் சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வெற்றியை கொடுக்கிறது. இந்த திரைப்படம் குழந்தையை மையமாக வைத்து ஹாரார் படமாக வருகிறது கஞ்சா கருப்பு எங்க ஊரு காரர் அவர் இந்த படத்தில் பேயாக நடிக்கிறார் வித்தியாசமான முயற்சி அன்று முதல் இன்று வரை மாறவே இல்லை இந்த தொடு தூரம் நிச்சயம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று பேசினார்.
அடுத்து பேசிய நடிகர் கஞ்சா கருப்பு ஒய் ஜி ஐயா அவர்கள் நல்ல கதை சொல்லும் கதை அம்சம் படங்களில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் உலக நாயகன் நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர் இதற்கு முன் ஏழு படங்கள் எடுத்து வெற்றி பெற்றவர் எனவே சின்ன படம் என்று எண்ணாதீர்கள் சுப்ரமணியபுரம் சின்ன படம் தான் இந்த தொடு தூரம் வெற்றி அடைந்து விஜய் கிட்டே கால்ஷீட் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேனேஜர் வைத்து அடிபட்டு மிதிபட்டு ஒரு படம் தயாரித்து சிரமப்பட்டு மேலே வந்துள்ளேன் இனிமேலும் படம் எடுப்பேன் இப்பொழுது நல்ல படங்களில் நடித்து வருகிறேன் நான் படிக்காத முட்டாள் என் மனைவி டாக்டர் அது தான் என் அதிர்ஷ்டம் இயக்குனர் அமீர் எனக்கு நல்ல நல்ல விஷயங்களை சொல்லித் தருகிறார் தற்போது இயக்குனர் பாண்டியராஜ் உதவியாளர் ராமு செல்லப்பா இயக்கத்தில் ஓம் காளி ஜெய் காளி என்ற படத்தில் நடித்து வருகிறேன் இதை அமேசன் தயாரிக்கிறது இப்பொழுது நான் சம்பளம் கம்மியாக வாங்கிக் கொண்டிருக்கிறேன் வருங்காலத்தில் நானும் வெற்றி அடைவேன் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.
அடுத்து பேசிய நாயகன் விஜய் விஸ்வா இந்த படத்தின் இயக்குனர் சாய்மோரா எனக்கு மூன்று வருடமாக பழக்கம் அவர் இலங்கை அகதி என்றார் இங்கு எதுவும் இல்லை எல்லோரும் ஒன்று தான் இயக்குனர் ஏழு திரைப்படத்தை எடுத்து ரிலீஸ் செய்து சாட்டிலைட் விற்பனை செய்து விட்டார் எனவே இந்த படம் வெளிவந்து படத்தை பிசினஸ் செயது வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியம் அந்த வகையில் இந்த படமும் வெற்றி அடையும். நான் தற்போது கும்பாரி .பரபரப்பு. வானவன். தரைப்படை போன்ற படங்களில் நடித்து வருகிறேன் இந்த படமும் வெற்றி படமாக அமையும் என்றார்.
அடுத்து பேசிய
பேசிய மதுவந்தி அவர்கள் நான் மகளாக இந்த பூஜைக்கு வந்திருக்கிறேன் சாய் மோரா யார் என்று தெரியாது போன் செய்து இந்த படத்தில் அப்பா நடிக்கிறார் அவருக்கு பெரிய வேஷம் நீங்கள் பூஜைக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அதுதான் வந்தேன் இங்கு வந்து பார்த்தால் ரெட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது கருப்பு அண்ணன் இதில் பேயாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டேன் நான் நடித்த முதல் படம் தர்மதுரை அதில் போலீசாக நடித்தேன் அதில் ஏழுநாள்கால் சீட்டு தான். அந்த படத்தில் நடிக்கும் போது கருப்பண்ணன் ஜாலியாக போராடிக்காமல் பார்த்துக் கொண்டார் மூன்று சீன் தான் அந்த படத்தில் வருவேன் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த படம் இப்பொழுது பிடி சார் என்ற படத்தில் நடித்து வருகிறேன் சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை முயற்சி செய்தால் எல்லோரும் வெற்றி அடைய லாம் இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்றுவாழ்த்தி பேசினார். இயக்குனர் சாய்மோரா பேசும்போது நான் இரண்டாவது தான் படித்து இருக்கிறேன் முயற்சி செய்தால் எல்லோரும் வெற்றியடையலாம் தொடுதூரம் குழந்தையை மையமாக வைத்து உருவாகும் ஹாரர் மூவி இது வெற்றியடையும் என்றார் இந்த படத்திற்கு வந்து வாழ்த்திய பிரபலங்களுடன் கிளாசிக் சினிமாவும் வாழ்த்துகிறது தொடுதூரம் அருகில் தான் இருக்கிறது வெற்றி வசமாகும்