: வெப் திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்
. எம். முனிவேலன் தயாரிப்பில் ஹரூன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்இப்படம் எப்படி இருக்குனு பார்க்கலாம்!
ஆரம்ப காட்சிகளில் கவர்ச்சி காட்சிகள் பப்’பார்ட்டி என படம் கலகலப்பாக செல்கிறது.
சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை சுவாரஸ்யம் என்று காட்சிகள் மாறும் போது வெப்பம் அதிகமாக இருக்கிறது வெப் சூடு ஏற்றுகிறது.
கதை என்ன வாங்க பார்க்கலாம்
ஐடி வேலை, வீக் எண்ட் பார்ட்டிக்காகவே வேலை செய்வது, மது,போதைப் பொருள்கள் என வாழ்க்கையை ஓட்டி வரும் மூன்று பெண்கள், டீட்டோலரான தங்கள் மற்றொரு தோழியையும் குடிக்க வைத்து ஒரு நாள் இரவு கார் ஓட்டிச் செல்கின்றனர். அடுத்த நாள் காலை மூவரும் போதை தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது நட்டி நட்ராஜின் கஸ்டடியில் பாழடைந்த வீட்டில் இருக்கின்றனர்.
இது ஏன் என்ன ஆச்சு
நட்டி நட்ராஜ் – அவரது பெண் உதவியாளர் இருவரும் சேர்ந்து இந்தப் பெண்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு கொடுத்து, போதை மருந்து செலுத்தி, தூங்க வைத்து தொடர் டார்ச்சர் செய்கின்றனர். ஏற்கெனவே இந்த வீட்டில் மற்றொரு பெண்ணையும் கட்டி வைத்து அடித்து துன்புறுத்துகிறார். இடையே மொட்டை ராஜேந்திரன் கலாட்டா வேறு
நட்டி வில்லன் பாணியில்
இடையில் சில கொலைகளையும் செய்கிறார். இந்த சூழலில் நட்டி எதற்காக இப்பெண்களைக் கடத்தினார்? இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? சைக்கோ வில்லன் நட்டியின் பின்புலம் என்ன? இந்தப் பெண்கள் எப்படி அங்கிருந்து தப்பித்தார்கள் என்பனவற்றை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்கள்
நட்டி
நடிப்பு
எப்படி
சைக்கோ வில்லனை ஒத்த கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ஹீரோவா, வில்லனா எனக் குழம்ப வைக்கும் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ். சைக்கோ வில்லனாக ஆய்.. ஊய்.. என ஒரே மாதிரியான ரியாக்ஷன் கொடுத்து முதல் பாதியில் கவனம் ஈர்க்கிறார். இரண்டாம் பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறார்.நடிப்பதற்கு நல்ல ஸ்கோப்
நான்குஇளம் பெண் கள் படம் முழுக்க கவர்ச்சியாக நடித்து உள்ளனர்
மது, போதை என சுதந்திரமாக அலப்பறை பண்ணி திக்குத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட நான்கு பெண்கள் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கவர்ச்சி யோடு
நட்டி கதாபாத்திரத்துக்கு பயப்படாமல் திமிராக எதிர்கொள்வது, தன் அம்மாவை மிஸ் செய்து அழுவது என ஷில்பா மஞ்சுநாத் சில காட்சிகளில் ஸ்கோர் செய்து நம்மை ஆறுதல்படுத்துகிறார்.
சைக்கோ வில்லனிடம் இருந்து கடத்தப்பட்ட பெண்கள் தப்பிக்க முயற்சி எடுப்பது, சண்டை போடுவது, சரணடைவது என முதல் பாதி முழுக்க ஒரே வீடு ஒரே படுக்கையில் முக்கல் முனகல் என போகிறது
ஈவு இரக்கிமின்றி கொடுமைப்படுத்தும் சைக்கோ வில்லன் என்பதை நிறுவவதற்காக நட்டியை முதல் பாதி முழுக்க பயமுறுத்த வைத்துக் கொண்டே இருப்பது சலிப்பு! அவர் யாருன்னு தெரியுமா எனத் தொடங்கும் ஃப்ளாஷ்பேக் நம் பொறுமையை வெகுவாக சோதித்த பின் தான் வருகிறது.
பல படங்களில் பார்த்த உணர்வு ப்ளஸ் அண்ட் மைனஸ்
படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் மொட்டை ராஜேந்திரன் திடீரென படத்தில் தோன்றி காமெடி செய்கிறார் அதுவும் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.
இசை கார்த்திக் ராஜா ஓகே. ! போதை, ராஷ் டிரைவிங் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் வழக்கம்போல் பெண்களுக்கு மட்டுமே வகுப்பெடுப்பது ஆண் மையப் பார்வையை மட்டுமே நிறுவுகிறது.
படத்தில் ஒளிப்பதிவு படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் திருப்பம் அந்த ஒரு திருப்பு முனை யை மட்டும் நம்பி முழு நீள கதை என்பது விட இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். லவ் மொத்தத்தில் வெப் இளைஞர்கள் விரும்புவார்கள்