சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில்!

கவிஞர் ‘சாந்தரூபி’ அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர். ஒரு பாடலின் நிமிடங்கள் எத்தனையோ, அத்தனை நிமிடங்கள் மட்டுமே தனது பாடல் உருவாகும் நேரம் என்கிறார் கவிஞரும், இசையமைப்பாளரும், பாடகியுமான ‘சாந்தரூபி’ அம்பாளடியாள். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் ஆற்றல் கொண்டவர்.

“என்னுயிர்க் கீதங்கள்” என்ற தலைப்பில், 50′ பாடல்கள் இசையமைத்து, இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையில், இயக்குனர்கள் பேரரசு, செந்தில்நாதன், ராசி அழகப்பன், இசையமைப்பாளர்கள் சௌந்தர்யன், ஏ.ஆர்.ரெஹானா, பாடகர் மூக்குத்தி முருகன், கண்ணதாசன் பதிப்பகம் நிறுவனர் காந்தி கண்ணதாசன், பேச்சாளர் ஜான் தன்ராஜ் , கம்பம் குணா ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்! பிஆர்ஓ கோவிந்தராஜ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். நிகழ்ச்சியை நந்தினி தொகுத்து, வழங்கினார்!

அம்பாளடியாளின் தமிழ் புலமையும், குரல் வளமும் கேட்ட அத்தனை இயக்குனர்களும், அத்தனை இசையமைப்பாளர்களும் வியந்து, பாராட்டினார்கள். பாடல்கள் எழுதவும், பாடவும் தமிழ் திரையுலகில் தற்போது வாய்ப்பு பெற்றுள்ளார்! விரைவில் இந்த ஈழத்து குயிலின் குரல், வெற்றிப் படங்களில் ஒலிக்கும்!

இயக்குனர் பேரரசு பேசும்போது…….. தமிழ் நன்றாக எழுதுகிறீர்கள் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது இங்கு தமிழையே தப்பு தப்பாக எழுதுகிறார்கள் எனவே எங்கள் சுவிட்சர்லாந்தே போய்விடுங்கள் அங்கிருந்தே தமிழ் நாங்கள் கேட்டு மகிழ்ச்சியடைகிறோம் என்றார். இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் பேசும்போது தமிழ் எப்பொழுதுமே அழியாது தமிழ் எப்போதுமே ஆகாது தமிழ் சுத்தமாக பேசுபவர்கள் ஈழத்து தமிழர்கள் தான் அவர்கள் எங்கேயுமே ஆங்கிலம் கலக்காமல் தமிழிலே பேசுவார்கள் நான் மாலத்தீவு சென்றபோது என்னிடம் கதைக்க வேண்டும் என்று நாலு மணிக்கு வந்து விடுவார்கள் நான் அவர்களிடம் உங்கள் இருவரும் இருப்பிடம் தேடி நான் வந்து கதைக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைப்பேன் அதேபோல இந்த அம்பாளடியாள் அவர்கள் சுத்த தமிழிலே பாடல் எழுதியுள்ளார்.

அவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் சாதிப்பார் என்றார் அடுத்து சௌந்தர்யன் பேசும்போது பாக்யராஜ் அவர்களும் அன்றைய காலகட்டத்தில் குங்குமம் இதயம் இரண்டு பத்திரிகைகளை வைத்து வசனம் எழுதி இருப்பார் அது பாராட்டத்தக்கது இப்போது அம்பாளடியாள் தாளத்திற்கு ஏற்ப பாடல் எழுதுகிறார் ரசிக்க வைக்கிறது ஈழத் தமிழர்களுக்காக நான் போராட்டத்தில் கலந்து இருக்கிறேன் இப்போது ஈழத் தமிழச்சி ஒரு கவிஞராக வருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றார்….. அடுத்து பேசிய காந்தி கண்ணதாசன் ஈழத்து வானொலி என் அப்பா வை கவிஞர் கண்ணதாசன் என்று சொல்லி பேர் சொல்லி அழைக்க மாட்டார்கள் கவிஞர் என்று தான் சொல்லுவார்கள் அந்த அளவுக்கு என் அப்பாவின் மீது பாசம் கொண்டவர்கள் இந்த இலங்கை தமிழ் வானொலி என் அப்பா வினபாடல்கள் பேமஸ் ஆக்கியது எனவே இந்த சகோதரிக்கு அழைத்ததும் வந்து விட்டேன் என்று பாராட்டி பேசினார்…… அடுத்து பேசிய ஏ ஆர் ரஹ்மான் எனக்கு சகோதரியை நான்கு வருடமாக தெரியும் இலங்கையில் இருந்து அவர்கள் எப்படி சுவிட்சர்லாந்து சென்றார்கள் அவர்கள் வாழ்க்கையில் பர்சனலாக நிறைய வலிகள் இருக்கும் அது எல்லாம் கடந்து கவிதை எழுதி 50 பாடல்களுக்கு பாடல் எழுதி அதை வெளியிடுவது சாதாரண விஷயமில்லை அவருக்கு வாழ்த்துக்கள் என்றார்…… அடுத்து அம்பாள் அடிகள் பேசும்போது இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று தற்பொழுது தமிழ்நாட்டில் இசைத்தட்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன் என் அப்பா கோயில்களுக்கு சென்று நாதஸ்வரம் வாசிப்பார் அப்போதுதான் எனக்கு இந்த இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது எனக்கு நான்கு குழந்தைகள் அவர்களைப் போலவே தமிழையும் நேசிக்கிறேன் இவ்வளவு பெரிய இயக்குனர்கள் வந்து வாழ்த்தியது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது எல்லோருக்கும் நன்றி என்றார்… பிரசாத் லேப் பில் நடைபெற்ற இந்த அற்புதமான இசைத் தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட அனைவரும் ஈழத்து தமிழச்சி சகோதரி சாந்த ரூபி அம்பாளடியாள் அவரையும் அவர்களின் தமிழ் பற்றியும் வாழ்த்தினார்கள் மேடையிலேயே திரையுலகை சேர்ந்த இயக்குனருக்கு அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு தந்தார்கள் எனவே தமிழ் சினிமாவில் பெண் கவிஞர்கள் வரிசையில் இவரும் சாதிப்பார் வாழ்த்துக்களுடன் கிளாசிக்