Brokkan script. படத்தின் விமர்சனம்

கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகி ஒரு ட்ராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். இந்த ஏஜென்சி சிங்கப்பூரில் இருக்கிறது. நாயகிக்கு அந்த ஏஜென்சி வருடத்திற்கு ஒரு இலவச விமான டிக்கெட் கொடுக்கிறார்கள். அப்படி நாயகிக்கு சென்னைக்கு வர டிக்கெட் கிடைக்கிறது, அப்படி சென்னை வந்த நாயகி தன் நண்பரை சந்திக்கிறார். அப்படி சந்திக்கும் இடத்தில் ஒரு மர்ம நபர் நாயகியை பற்றி விசாரிக்கிறார்.

சில நாட்கள் கழித்து சிங்கப்பூர் செல்லும் அந்த நபர், நாயகியை நேரில் சென்று சந்திக்கிறார். அதே சமயம் உடல் உறுப்பு திருட்டு குறித்து சில விஷயங்களும் நடக்கிறது. நாயகியின் அப்பா வேலை இழந்து கஷ்டப்படும் சமயத்தில். நாயகியும், அவரின் தம்பியும் ஆளுக்கொரு வீட்டில் சென்று திருட முயற்சிக்கின்றனர். அப்படி இவர்கள் போட்ட திட்டத்தின்படி, வீட்டில் திருடிவிட்டு தப்பித்தார்களா? இல்லையா? என்பதும் மேலும் திடுக்கிடும் சில திருப்பங்களே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜோ ஜியோவானி சர்ஜீத் சிங் நடித்து இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு

சில வருடங்களுக்கு முன்பு எடுத்து இப்போது தான் திரைக்கு வந்துள்ளது. நடிகர் நடிகைகள் பற்றி..
ரியோ ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர் சைக்கோ வில்லனிடம் சிக்கி தவிக்கும் போது ரசிக்க வைக்கிறது. அடுத்து அவரின் அக்கா வாக வரும் நபீசா நடிப்பு நன்றாக இருக்கிறது. நேர்மை நாணயம் மற்றும் கதாபாத்தில் நடித்திருக்கிறார். கேம் விளையாட்டு மற்றும் வேன் எடுத்து கொண்டு பறப்பது என துறு துறு நடிப்பு
அடுத்து ஜோ ஜியோ வாணி சர்ஜித் சிங் இவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் போலீஸ் க்கு டிமிக்கி காட்டி ஓடும் போது கலகலப்பு. ஒரு படம் என்பது தயாரிப்பாளர் கனவு அந்த கனவு நிகழலாம் அதனால் தான் படத்துக்கு ப்ரோக்கன் ஸ்கிரிப்ட் என்று பெயர் வைத்தனர் போலும் படத்தில் உடல் உறுப்பு திருட்டு பற்றி விழிப்புணர்வு உள்ளது . ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும். நோய்வாய்ப்பட்ட மனித ர்களிடம் எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும். ‌. படத்தில் கேம் விளையாட்டு கேம் விளையாட்டு ரசிக்க வைக்கிறது ஆஸ்பத்திரி காட்சிகள் திடுக்கிட வைக்கிறது கிளைமாக்ஸ் காட்சி வியக்க வைக்கிறது ஜோவின் நடிப்பு இயல்பாக இருக்கிறது கதையில் திருப்பம் கிளைமாக்ஸ் காட்சிதான் நடித்த அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறது சைக்கோவாக வரும் அந்த வில்லனின் முகம் உடல் மொழி அவரின் நடைபாவனை பயம் கொள்ள வைக்கிறது நபிஸாவின் அழகான முகம் இனிமையான பேச்சு இனிமையான பேச்சு கதைக்கு முக்கியத்துவம் உள்ளதாக உள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட தரமான படம்