மத்தகம் விமர்சனம்

அதர்வா, ஜெய்பீம் மணிகண்டன் நிகிலா விமல் நடித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளிவந்து உள்ள வெப் தொடர் மத்தகம்.

இதன் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

மத்தகம் என்றால் யானையின் நெற்றிப் பகுதி என்று பொருள்.பிரசாத் முருகேசன் இந்த தொடரை இயக்கி உள்ளார்.
ஒரு வெற்றி படத்துக்கு என்னென்ன தேவையோ அதை படமாக்கிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

ஸ்க்ரீன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த தொடரை தயாரித்துள்ளது.
இதன் கதை என்ன?

இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் ஒரு லோக்கல் தாதாவை கைது செய்கிறார்கள்.
அந்த ஆரம்ப காட்சியில் செம பரபரப்பை ஏற்படுத்தியது கதைக்களம்

தாதா படாளாம் சேகர் என்ற தாதாவிற்காக வேலை செய்வதாக சொல்கிறான். காவல் துறையின் ஆவணங்களின் படி படாளாம் சேகர் இறந்து விட்டதாக இருக்கிறது. படாளம் சேகர் திரைமறைவில் இருந்துகொண்டு ஒரு பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்கிறான்.
அந்த பிறந்த நாள் எதிர்பாராத விதமாக போலீஸ் டிபார்ட்மெண்டில் கசிந்து விட அதன் பின் செம

இதற்க்காக சென்னையில் உள்ள முக்கிய தாதாக்களை ஒருங்கிணைக்கிறான்.

இந்த நாளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்ப டுவதாகவும், தலைவர் திமிங்கலம் வரப்போவதாகவும் மற்ற தாதாக்களிடம் சொல்கிறான்.

படாளத்தை பின் தொடர்ந்து தாதாக்களை கண்டு பிடித்து அழிக்க முயற்சிசெய்கிறார் காவல் துறை அதிகாரி அஸ்வத்.
இவர் தான் அதர்வா செம கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்

திரில்லர் வகைகளில் சைக்கோ திரில்லர், மெடிக்கல் கிரைம் திரில்லர், ஆக்ஷன் திரில்லர் என பல வகை திரில்லர் வகைகள் உள்ளன. மத்தகம் இது வரை அதிகம் சொல்லாத கேங்ஸ்டர் திரில்லர் வகையை
சேர்ந்தது
. தொடர் தொடங்கியமுதல் எபிசோட்டின் முதல் காட்சியிலிருந்து பரபரப்பாக நகர தொடங்கி விடுகிறது

. கதை ஒரு நேர்கோட்டில் பயணித்தாலும் எங்கேயும் சுவாரசியம் குறையவில்லை

.ஒவ்வொரு காட்சியையும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார் டைரக்டர்.

தேவையில்லாத ஒரு காட்சியோ, கேரக்டரோ இல்லை. ஒடிடி யில் மட்டுமே தொடராக ரசிக்கும் படியான திரைக்கதையை விரிவாக தந்துள்ளார் இயக்குநர்.

ஒரு நேர்மையான காவல் அதிகாரியாகயும், ஒரு சரராசரி குடும்ப தலைவனாகவும் சிறந்த நடிப்பை தந்துள்ளார் அதர்வா.
அவர்
நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் நன்றாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தியுள்ளார். நிகிலா அன்புக்கு ஏங்கும் ஒரு மனைவியாக உள்வாங்கி உணர்வுகளை தந்துள்ளார்.

இந்த கதாபாத்திரம் இவருக்காகவே வடிவமைப்பு செய்ய பட்டது போல் தெரிகிறது

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவருகிறார் மணிகண்டன்

.அறிவை பயன்படுத்தி தாதா வேலையை செய்யும் மாறுபட்ட படாளம் சேகர் காதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார் மணிகண்டன்.

மூணார் ரமேஷ், தில்னாஷ் இராணி, கெளதம் மேனன் உடப்பட அனைவரும் சரியான நடிப்பை தந்துளார்கள். எட்வின் சாகோவின் ஒளிப்பதிவு தொடரை சில படிகள் மேலே உயர்த்த உதவி உள்ளது.சிறந்த ஓ டி டி தொடர் படங்களின் வரிசையில் மத்தகம் தொடருக்கு முக்கிய இடம் உள்ளது.

அதிகம் ரத்தம் சிந்ததாத இந்த கேங்ஸ்டர் திரில்லர் கதையை குடும்பத்துடன் ரசிக்கலாம்.

ஒரு மூளையில் நம்பி வேலை செய்யும் தாதா அதை சாமர்த்தியமாக கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி இந்த இருவருக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் செம விறுவிறுப்பு செம பரபரப்பு மத்தகம் மொத்தத்தில் கிரைம் தொடர் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் ஹாட் ஸ்டார் ஓட்டிட்டியில் கண்டு களியுங்க