பரம்பொருள் திரைப்படவிமர்சனம்
ஆர்.சந்திரசேகர் .
அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் “பரம்பொருள்”.சிலைகடத்தலை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தின் கதைப்படி,
தனது தங்கையின் ஆப்ரேஷனுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதால், வீடுகளில் புகுந்து திருட்டு வேலைகளை செய்து வருகிறார் அமிதாஷ். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரத்குமார், பணம் ஒன்றே குறிக்கோளாக நினைத்து தனது அதிகாரத்தை வைத்து பல வழிகளில் பணம் சம்பாதித்து வருகிறார். கோடிகளில் பணம் வேண்டும் என்று பணத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறார்.
ஒருநாள், சரத்குமாரின் வீடு என்று தெரியாமல் அவர் வீட்டிற்கு திருடச் சென்று அவரிடம் மாட்டிக் கொள்கிறார் அமிதாஷ்.,
உன் மீது வழக்கு தொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார் சரத்குமார்.
அமிதாஷும் ஓகே எனக் கூற, இவர்களின் கைகளுக்கு 1000 ஆண்டு பழமையான சிலை ஒன்று கிடைக்கிறது. அது பல கோடிக்கு விலை போகும் என அறிந்து, அதை விற்பதற்கு தயாராகிறார்கள்.
12 கோடி ரூபாய்க்கு அந்த சிலையை வாங்குவதற்கு ஆள் கிடைத்த நேரத்தில், சிலை முற்றிலுமாக சேதமடைந்து விடுகிறது. இதனால், இருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இறுதியாக, அமிதாஷ் தனது தங்கையின் மருத்துவ செலவுக்கு பணத்தை கிடைத்தா? சரத்குமாரின் எண்ணம் பலித்தா . என்பதே படத்தின் கதை.,
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் வில்லனாக நடித்த அமிதாஷ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கதையின் போக்கிற்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள சிரமப்பட்ட அமிதாஷ், போக போக கதைக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு முழு ஹீரோவாக ஜொலித்திருந்தார்.
தன் குடும்பத்திற்காக, தன் தங்கைக்காக அவர் படும் கஷ்டங்களை கண்கள் மூலமாக வெளிப்படுத்தும் போது நடிப்பின் உச்சத்தை எட்டி பிடிக்கிறார் ஆக்ஷன் காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார்.
தனக்கான முத்திரை நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் சரத்குமார். அமிதாஷுக்கு இணையாகவே சண்டைக் காட்சியிலும் மிரள வைத்திருக்கிறார்.
காஷ்மீரா கதையின் நாயகியாக வந்திருக்கிறார். மிகவும் வலுவான கேரக்டரை ஏற்று நடித்திருந்தாலும், இன்னும் சற்று மெனக்கெடல் கொடுத்து நடித்திருக்கலாமே என்று தோன்றும் அளவிற்கான நடிப்பையே கொடுத்திருந்தார்.,
இப்படத்தின் மூலக் கதையாக கொண்டு இயக்கியிருக்கிறார். அரவிந்த் ராஜ்.
யுவன் ஷங்கர் ராஜா தனது இசையில் இன்னும் இரண்டு இடங்களில் கேட்க வைத்துவிட்டார்கள். யுவனின் பின்னணி இசையா இது என சந்தேகம் எழும் அளவிற்கு கொடுத்திருக்கிறார் யுவன்.
பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அசத்தியிருக்கிறார். சண்டைக் காட்சி கூடுதல் கவனம்
பெறுகிறது.