
தமிழ்க்குடிமகன் விமர்சனம்
ஆர். சந்திரசேகர்
மனிதசாதி என்ற கோட்பாட்டை அடிப்படையா கொண்டு சித்திரக்கப்பட்டபடம் தமிழ்க்குடிமகன். தான் என்ன தொழிலை செய்யவேண்டும். அதை வைத்து என்ன கருத்துக்கள் இருக்கு . தான் என்ன சாதியை சார்ந்த தொழிலை செய்ய வ்வெண்டும் அதை மறுக்கும் ஒருவன். அவன் சந்திக்கும் பிரச்சனைகளை மைய்ய புள்ளியா வைத்து எடுக்கப்பட்ட படம் தமிழ்க்குடிமகன்.
இசக்கி கார்வண்ணன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஊரில் யாரவது இறந்து விட்டால் அவர்களுக்கு ஈமசடங்குகள் செய்யும் பரம்பரை தொழிலை செய்து வருபவன் சின்னசாமி. அந்த தொழிலை தான் ஏன் செய்ய வேண்டிய கட்டாயம் ஒன்றும் அவசியம் இல்லை .என்ற நோக்கத்தோடும் கருத்தோடு செயல் படுகிறார் . தனக்கு பிடித்த பால் வியாபாரத்தை செய்கிறார். பிறகு அவர் அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார். அந்த வேலையில் ஊரில் உள்ள ஒருவர் இறந்து விடுகிறார்.அந்த இறந்தவரின் ஈமசடங்குகளை செய்ய மறுத்து விடுகிறார் சின்ன சாமி. இதனால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பகை வலுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த இறந்தவரின் மகன் லால் சின்ன சாமியின் குடும்பத்தை அழிக்கவும் பழிவாங்க நினைக்கிறார்.
இதனால் சின்னசாமி நீதிமன்றதை போகிறார். நீதி மன்றம் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை தருகிறது. இந்த என்ன தீர்ப்பு சாதி மீதான பரம்பரை அழுக்கை எப்படி சுத்தம் செய்வது. என்பதை நீதிமன்றத்தில் தீர்ப்பை நல்வழிப் படுத்தி சொல்லப்படுக்கிறது. தமிழ்க்குடிமன் திரைப்படத்தில் சொல்லப்படுகிறது.
படத்தில் காமெடி சண்டைகாட்சிகள் எதுவும் இல்லாமல் எடுத்துகொண்ட கதை களத்தை எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் ஒரே நேர்கோட்டில் சிறப்பா சொல்லி இருக்கிறார் இயக்குநர்.படத்தில் முதல ஆணவக்கொலை, கிராமத்தில் வாழும் சாதிய கட்டமைப்பு தொழிலுக்கும் சாதிக்கும் உள்ள உறவு போன்ற என்னென்ன விஷயங்களை இருப்பதை படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சாதி என்ற மரமே தொழில் என்ற விதையில் இருந்து தான் வளர்கிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் . நீண்ட இடைவெளிக்கு பின் சேரன் திரையில் தோன்றி நடித்திருக்கிறார் போராட்ட குணமும் அமைதியும் கலந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார். லால் சாதி உணர்வுள்ள ஒரு மனிதரை கண் முன் வாழ்ந்து காட்டியுள்ளார். எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி ஒரு இடது சாரி சிந்தனை கொண்ட மனிதரை நினைவு படுத்துகிறார். .
சேரனின் மனைவியாக பிரியங்கா, தங்கையாக தீப்ஷிகா, அவரைக் காதலிக்கும் துருவா, சின்னச்சாமிக்கு ஆதரவாக நிற்கும் வேல ராமமூர்த்தி, போலீஸ் அதிகாரி சுரேஷ் காமாட்சி, வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகர், ரவிமரியா, நீதிபதியாக ராஜேஷ் அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் இனிமை . சாதிய பிரச்சனைகளில் அடிக்கடி சொல்லப்படும் பெயர் திருநெல்வேலி மாவட்டம். இதை கதை களமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த படம் சொல்லும் தீர்வை விட முன் வைக்கும் முறையே சரியே . தமிழ்க்குடிமகன் படத்தில் சேரன் எப்படி சமாளிக்கிறார் . என்பது தான் தன் மகனுக்கு ஸ்கூலில் சேரவதற்கு சாதியே வேண்டாமென்றும் சர்பிகேட் டில் ஆண்,பெண் என்று குறிப்பீட வேண்டுமென வாதாடுகிறார் . அதுல ஜெயித்தரா என்பதை மீதி கதையை வெண்த்திரையில்காட்சியில் காண்க.