ஜப்பான் திரைப்பட‌விமர்சனம்.

ஜப்பான் திரைப்பட‌விமர்சனம்.
ஆர்.சந்திரசேகர்.

கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள ஜப்பான். இந்த படத்தில் சின்ன வயதில் இருந்து கொள்ளையடிப்பதில் நம்பர் ஒன் கில்லாடியா நகை கடைகளை ஓட்டை போட்டு கொள்ளையடித்து. வருகிறார். இது போலீஸாருக்கு தீடீரென்று தகவல் வருகிறது . இந்தியாவில் பல இடங்களில் கொள்ளையடிக்கும் கார்த்தி, பல மாநில போலீஸார்களால் தேடப்பட்டு வருகிறார்.


கோவையில் உள்ள ராயல் தங்க கடையின் சுவரை ஓட்டை போட்டு இருநூறு கோடி மதிக்கும் நகைகளை கொள்ளையடிக்கின்றனர். இதை ஆராயும் போலீசார்கள் , இது ஜப்பான் திருடியது வேலையா ? இருக்குமென புகார்ல ஜப்பானை தேட ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு சமயத்தில் போலீஸிடம் சிக்கும் கார்த்தி, இந்த திருட்டை செய்தது நான் இல்லை. வேறு ஒருவன் என்னை இதுல மாட்டிவிட்டார்கள் என கூறுகிறார். உண்மையில் இந்த திருட்டை செய்வது யார்? கார்த்தி கூறும் அந்த நபர் யார்? கார்த்தி கொள்ளையடித்த நகைகள் எங்கே? என்பதே இந்தப் படத்தின் கதையின் கரு என்ன ? படத்தை வெண்திரையில் காண்போம் .
ஜப்பான் திரைப்படத்தின் மூலம் நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் இவரது நடிக்கும் 25வது திரைப்படமாகும். ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் இந்தபடத்தை இயக்கியுள்ளார். இது ஒரு ஜனரஞ்சகமான படமாகும்.இந்த
படத்தில் சுனில், கே எஸ் ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தி படத்தில் கொஞ்சம் வித்தியாசமான காஸ்டியூம் ஆக்ஷன் நடைஉடை பாவனைகள் லோகல் ரவுடி பேசற ஸ்லாங்கில் பேசற மொழியின் வித்தியாசம் அவரின் நடிப்பில் தெரிகிறது. தன்னுடைய வாய்ஸை மற்ற படங்களில் நடித்தது போல இல்லாமல் வித்தியாசமா இந்த படத்தில் வாய்ஸ் பேசி இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம், பாடல்கள், பின்னணி இசை என ரசிகர்களின் கவனத்தையும் மனத்தையும் இழுத்துள்ளது.
ஜப்பான் திரைப்படம் நவம்பர் மாதம்‌ வருகிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். தேவை‌யா இல்ல காட்சிகளை பிலோமின்ராஜ் குறைத்து இருக்கலாம் .
14- ந்தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வெளிவருகிறது.
ஜப்பான் கதாபாத்திரத்தில் சிகை அலங்காரம், உடல்மொழியில் குரலிலும் மாற்றம் காட்டி வித்தியாசமா கார்த்தி நடித்திருக்கிறார். நாயகியாக வரும் அனு இம்மானுவேல் பொம்மையாக சும்மா வந்து போகிறார். இயல்பான நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாகை சந்திரசேகர் நடிச்சிறார். ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரம். கே.எஸ். ரவிகுமார், விஜய் மில்டன், சுனில், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் பாத்திரம் இயல்பா நடித்திருக்கிறார்கள்.‌ ஜப்பான் ஒரு பொழுது போக்கு படம்