இமெயில் திரைப்பட விமர்சனம் … தொகுப்பு.குங்குமம்‌ சந்திரசேகர்.

இமெயில் திரைப்பட விமர்சனம் … தொகுப்பு.குங்குமம்‌ சந்திரசேகர்.

 

  • நாயகன் அசோக் மற்றும் நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கும் அசோக் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால், தானே நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையை தீர்க்க நினைக்கும் ராகினி திவேதி, அதை எப்படி செய்கிறார்?, அந்த பிரச்சனை என்ன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் இருக்கிறார்கள் . என்பதை பல விஷயங்களை சுருக்கமா சொல்லியிருப்பது தான் ‘இ-மெயில்’.கதை

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அசோக், இதுல தமிழ் இந்தி கலந்து பேசி நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ராகினி திவேதியின் முகம் அவருடைய நடிப்பு இளமையாகவே இருக்கிறது. காதல் காட்சிகள் மற்றும் சூப்பர சண்டைக்காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

மனோ பாலாவின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ஒரு காட்சியில் வந்தாலும் லொள்ளு சபா மனோகரும் சிரிக்க வைக்கிறார்.

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்சியில் சூப்பர்

 

கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஜுபினின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு பலப்படுத்தும். வகையில் பயணிக்கிறது.

ஆன்லைன் விளையாட்டுகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மையப்படுத்திய கதையை சஸ்பென்ஸாகவும், யூகிக்க முடியாத பல திருப்பங்களுடனும் சொல்லியிருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன், இதன் பாதிப்புகள் நிறைய இருக்கு அதை கொஞ்சம் தெளிவாக இன்னமும் அதிகமா சொல்லி இருந்தால் படம் சிறப்பா இருக்கும்

க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதையை, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நகர்த்தி கொண்டு போகும் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன், அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இருக்கு கமர்ஷியலாக மிக வேகமா நமக்கு கொடுத்து இருக்கிறார்.

இந்த இ-மெயில் படத்தில் இந்த ஜெனரேஷனிலுள்ள மக்களை பார்த்து எல்லா விஷயத்திலும் மிக‌ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எல்லா‌ விஷயத்தில் கவனம் தேவை என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். ரொம்ப கவனமா இருப்பது நல்லது .