சத்தமின்றி முத்தம் தா திரைப்பட விமர்சனம் தொகுப்பு.சந்திரசேகர்.

சத்தமின்றி முத்தம் தா

திரைப்பட விமர்சனம் தொகுப்பு.சந்திரசேகர்.

 

ஸ்ரீகாந்த்-பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘சத்தமின்றி முத்தம் தா’

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘சத்தம் இன்றி முத்தம் தா’.

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார். ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசைக்கு பிரபல பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு – யுவராஜ்.M.படத்தொகுப்புமதன்.G., நடன இயக்கம் – தினேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – ‘மிராக்கிள்’ மைக்கேல், பாடகர்கள் –நடிகை ஆண்ட்ரியா, M.M.மானசி, ஜித்தின் ராஜ், ரவி.G. தயாரிப்பு மேற்பார்வை – A.J.P.ஆனந்த், தயாரிப்பு – கார்த்திகேயன்.S. எழுத்து, இயக்கம் – ராஜ்தேவ்.

மேலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கதைகளான ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ ஆகியவற்றை எழுதியவராவார்.

இந்தப் படம் பற்றி இயக்குனர் ராஜ்தேவ் பேசும்போது, “இது காதலும், சஸ்பென்ஸூம் கூடிய ஒரு திரில்லர் படமாகும். எதிர்பாராத திருப்பு முனைகளுடன் பார்வையாளர்களைபுதுவிதமான ஈர்க்கும் விதமாக இந்த கதை புதிய நடைமுறையில் வித்தியாசமா எடுக்க பட்டுள்ளது. கதாநாயகன் ஸ்ரீகாந்த் இதுவரை ஏற்று‌‌ நடிக்காத வேடத்தில்

புதுவிதமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் மற்றும் ஹீரோயின் பிரியங்கா திம்மேஷ் இருவரும் நடிக்கும் காட்சிகளில் நிச்சயமாக பார்வையாளர்களை முழுவதுமாக ஈர்க்கப்படுவார்கள். நடிகர் ஹரிஷ் பேராடி அவர்கள் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக தோன்றி உண்மையான போலீஸ் அதிகாரிகள்‌ எப்படி சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்வார்கள் அதுபோல் துருவி துருவி விசாரித்து‌ உண்மையை வரவைக்கும் முயற்சியில் பிரமாதமா அசல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.அவருக்கு கிளாப்ஸ் இதன் சரிகமா ஆடியோவில் வெளியாகிய இத்திரைப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.” முத்தம் சத்தோடு கொடுக்க முடியாது…