டபுள் டக்கர் டிரெய்லர் தொகுப்பு. சந்திரசேகர்.
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ள ஃபேன்டசி ஆக்ஷன் படம் ‘டபுள் டக்கர்’. மீரா மஹதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏர் ஃபிளிக் நிறுவனம் தயாரித்துள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
படத்தின் இயக்குநர் மீரா மஹதி கூறியதாவது: யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் பத்து குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். வளர்ந்துவரும் நாயகர்கள் சிலரிடம் கதை சொல்ல முயன்றேன். அவர்கள் யாரும் குறைந்த மரியாதையைக் கூட கொடுக்கவில்லை. ஐந்து நிமிடம் மட்டும் கொடுங்கள் என்றேன்.யாரும்கொடுக்க முன்வரவில்லை. பிறகு மைம் கோபி சார் தான் தீரஜிடம் சாரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர் என்னை ஐந்து நிமிடத்தில் இம்ப்ரஸ் செய்ய முடியுமா? என்று கேட்டார். கதை சொன்னேன். முடிக்கும் போது ஒரு மணி நேரம் ஆனது ஆரம்பிக்கும் போது சிறிய படமாகத்தான் இருந்தது. படத்தில், வரும் அனிமேஷன் பகுதிகளை ஏற்கெனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன். பிறகு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். இவ்வாறு மீரா மஹதி கூறினார்.
மிஷ்கின், சார் இந்த நிகழ்ச்சி வந்தது பெரும் மகிழ்ச்சியா இருக்கு நடிகர் தீரஜ், இணை தயாரிப்பாளர் சந்துரு மற்றும் படக்குழுவினர்கள் பேசினார்கள்.