ஜோஷ்வா திரைப்பட விமர்சனம் தொகுப்பு .ஆர்.சந்திரசேகர்.

ஜோஷ்வா திரைப்பட விமர்சனம் தொகுப்பு
.ஆர்.சந்திரசேகர்.


அமெரிக்க சிறையில் இருக்கும் மெக்சிககோ சட்டபோதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு எதிரான விசாரணை, நீதிமன்றத்தில் வர இருக்கிறது. அவருக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் குந்தவியை ராஹி போட்டுத் தள்ள திட்டமிடுகிறது. போதை மா ஃபியா. கும்பல் அவரை பத்திரமாகப் பாதுகாக்கும் அருண் அசைன்மென்ட்
சென்னையில் இருக்கிற ஜோஷ்வாவுக்கு வருணுக்கு வருகிறது.

குந்தவி அவரின் முன்னாள் காதலி என்பதால், அதிக அக்கறையுடன் அதாவது, கண்ணை இமை காப்பது போல் காக்க முயல்கிறார். அவரால் அதைச் செய்ய முடிந்ததா இல்லையா? என்பதை ஏகப்பட்ட துப்பாக்கி குண்டுகளுடன் தெறிக்க விட்டு எதிரிகளிடமிருந்து தன்னையும் தன் காதலியும் காப்பாற்றி சொல்கிறார் கதாநாயகனாக அருண்

வழக்கமாக, கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் நிறைய கதையும் கொஞ்சம் ஆக்ஷனும் இருக்கும். இதுல நெடுக ஆக்ஷனையும் காதலையும் தொட்டுக்கொண்டு கொஞ்சம் கதையை பகுந்து இருக்கிறார் கவுதம். ஆக்ஷன் தான் என்று முடிவுசெய்துவிட்டு திரைக்கதையை எழுதியிருப்பார் அதுல கதை அதிக‌ விறுவிறுப்பாக நகர்கிறது.

சில காட்சிகள், வசனங்கள், மேக்கிங்கில் கவுதம் மேக் தெரிந்தாலும் கதையில்‌ விறுவிறுப்பாக ஆங்கிலம் படக்கதை போல் நகர்ந்து போகிறது.

விமான நிலையத்தில், குடியிருப்புகளில், சாலைகளில் குறுகிய தெருக்களில் என எங்கெங்கும் பார்த்தாலும் சுட்டுக்கொண்டே போகிறார், வருண்.

விழுந்துகொண்டே இருக்கிறார்கள் என்ன வென்று கேட்க யாருமில்லை

கான்ட்ராக்ட் கில்லர் வேடத்தில் நல்ல வடிவாக வருணுக்கு அமைந்துள்ளது
அவரது உயரமும் தோற்றமும் ஆக்ஷன்பிளாக்கிற்கு க்ரைக்டான ஷூட் ஆனால், காதல் மற்றும் எமோஷனில் இன்னும் கூடுதலாக நடிக்க வேண்டும், குந்தவியாக வரும் ராஹிக்கு முன்பாதி நேரம் நாயகனுடன் ஓடிக்கொண்டிருக்கிறார். மீதியை காதல் ரொமான்ஸுக்கு செலவிடுகிறார்.

திடீரென்று வரும் கிருஷ்ணாவுக்கும் ஜோஷ்வாவுக்கும் இடையிலான ‘பேக்ஸ்டோரி’ நன்றாக இருக்கிறது என்றாலும் அவர் கேரக்டரை அப்படியே. நாயகனுக்கு உதவும் திவ்யதர்ஷனி, ஓரிரு காட்சியில் வரும் மன்சூரலிகான், விசித்ரா, கடைசி காட்சிகளில் வரும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை செம்மையா செய்திருக்கிறார்கள்.


ஆக்ஷன் கதையின் வேகத்தில் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தனித்து நின்று தெரிகிறது. வித்தியாசமான ஷாட்கள், சில காட்சிகளில் துப்பாக்கி குண்டுகள் தெறிக்கும் போது லைட்டிங் மற்றும் வண்ணங்களில் அவர் அனுபவம் பேசபடுகிறது. கார்த்தியின் இசையில் ‘டப்பாசு நேரம்’ பாடலும் பின்னணி இசையும் கதையை இழுத்து செல்ல உதவியா இருக்கிறது.

படத்தின் ஒரே ஆறுதல், யானி பென்-னின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே. திணற திணற வைக்கு ஆக்ஷனை விரும்புவர்களுக்கு ‘ஜோஷ்வா படம் பிடிக்கும்