ரோமியோ புதியப் பட போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி. தொகுப்பு.
ஆர்.சந்திரசேகர்.

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்து வெளிவரும்.
ரோமியோ’ என்ற புதியப் படம் இந்த கோடை விடுமுறைக்கு வெளியீட உள்ளது.
நம் கவனம் ஈர்க்கும் வகையில் போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி
சென்னையில் ரோமியோ புதியப்பட போஸ்டர் பட நிகழ்ச்சி நடந்தது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிச்சைக்காரன்-2 கொலை, படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ரோமியோ என பேரில் தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். யூடியூப்பில் ‘காதல் டிஸ்டன்ஸிங்’ என்ற தொடரை இயக்கிய இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இந்த படத்தை இயக்குகிறார். பரத் தனசேகர் இசையமைக்கும் படத்தின் படப்பிடிப்பு மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் பலர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. ரொமான்டிக் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்துக்கான போஸ்டரில் விஜய் ஆண்டனி அப்பாவியாக அமர்ந்திருக்க, மனைவி மிருணாளினி மதுவை கோப்பையில் ஊற்றும் வகையிலான போஸ்டர் கவனம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனிக்க சர்ச்சை எற்படுத்தும் வகையில் நாயகி மருணாளினிரவி கையில் மது பாட்டிலுடன் விஜய் ஆண்டனி கையில் பால் செம்புடன் இருக்கும் இந்த போஸ்டர் வலைத்தளத்தில் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன . நிகழ்ச்சியில் மது குடிப்பதில் ஆண் பெண் என்ற வித்தியாசத்தியம் இருக்கக் கூடாது. குடி என்பது எல்லோரும் போதுவானது. யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆண் என்ன பெண் வேறுப்பாடு கிடையாது. இருவருக்கும் ஒரே சமமானது.தான் குடிப்பழக்கம். இரண்டு பேருக்கும் உடல் நலம் கெட்டு போகும். இது தான் அறிவுரைகள் ஆண் பெண்குடியை அதிகரிக்கவில்லை குடியை குடிப்பழக்கம் தவறானது என்று சொல்கிறோம்.நான் முதல் தடவையாக காதல் சப்ஜெக்ட் படத்தில் நடிச்சிருக்கேன். பாருங்கள் ரசியுங்கள்