(அக்கரன்) திரைப்பட இசை வெளியீட்டு விழா.
தொகுப்பு.சந்திரசேகர்.
குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மையானப் பாத்திரத்தில் நடிக்க,
வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக வந்துள்ளது. திரைப்படம்
“அக்கரன்”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,
நடிகர் எம் எஸ் பாஸ்கர்:-
இப்படத்தைத் தயாரித்த கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்.
ஹரி இசையில் பாடல்கள் நல்லவந்துள்ளது சரவெடி சரவணன் மாஸ்டர் ரொம்ப ஈஸியாக கற்றுக்கொடுத்து காட்சிகளை எடுத்து விடுவார். இந்த படத்தில்
என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் முக்கிய கேரக்டர்
செய்யனும் என்றார்.

சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். கதை படு வில்லங்கமாக இருந்தது. ஆனால் அந்த நடிப்புக்கு நீங்கள் தான்
சரியாக இருப்பீங்க எனச் சொன்னார் . மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும்,
பிரியதர்ஷினியும் என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள்.. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும்
அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர்,
அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது. வாழ்த்துக்கள் நல்ல படம்
ஆதரவு தாருங்கள்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன்.
நான் சினிமாவிற்கு மிகவும் புதியவன் . என்
நண்பர்கள் மூலம் தான் இந்த கதை வந்தது. எனக்கு சினிமா செய்யும் ஐடியா எதுவும் இல்லை.
கார்த்திக்,கருப்பசாமி எனத் திருப்பரங்குன்றம் நண்பர்கள் இணைந்து எல்லோரும் பேசினோம்
உடனே குன்றம் புரடக்ஷ்ன்ஸ் எனப் பெயர் வைத்தோம். படத்தில் உழைத்த அனைவருக்கும் என்
நன்றிகள்.
இயக்குநர் அருண் K பிரசாத் :-
நண்பர் கருப்பசாமி மூலமாகத் தான் எம் எஸ் பாஸ்கரைத் தெரியும்,
அவர் பெயர் சொன்னவுடனே தயாரிப்பாளர் ஆபிஸ் போட்டுத் தந்து விட்டார். படத்தில்
எம் எஸ்.பாஸ்கர் பிரமாதமா நடித்துள்ளார்,
இப்படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ஹரி :-
எம் எஸ் பாஸ்கர் மாதிரி நடிகரோடு படத்தில் வேலை பார்த்தது . பஞ்ச
மகிழ்ச்சி. கார்த்திகேயன் சார், கருப்புசாமி சார், இயக்குனர் அக்கரன் படத்தில் எம் எஸ்
பாஸ்கர் சாருக்கு டைட்டில் சாங் செய்தது. முதன்முதலில்ச் செய்தது. நாங்கள்
என்பது பெருமை. எம் எஸ் பாஸ்கர் சார் இதுவரை பார்க்காத பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை வெண்பா:-
இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம், இந்த
படத்தின் ஆடிசன் சென்றபோது, இயக்குநர் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் இருக்கிறது உங்களுக்கு ஒகே.
என்றார். எனக்குக் கதை மிகவும் பிடித்திருந்தது, நான் இதுவரை லவ், செண்டிமெண்ட் மாதிரியான படங்கள் மட்டுமே செய்து
இருக்கிறேன். இந்தப்
படம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.. எம் எஸ் பாஸ்கர் சார்
நடிப்பிற்கு எல்லோருமே ரசிகர்கள் தான் நானும் அதில் ஒருத்தி. அவருக்கு மகளாக
நடிக்கிறேன் என்றபோது நெர்வஸாக இருந்தது, எங்களுடன் எளிமையாகப் பழகி அழகாகச்
சொல்லித்தந்தார்.
அவருடன் நடித்த அனுபவம் மிக மகிழ்ச்சியாக இருந்தது.
ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இசை எல்லாம் நன்றாக வந்துள்ளது.
நடிகை பிரியதர்ஷினி :-
ஜீவன் மணி எனும் இயக்குநர் என்னை வைத்து ஷார்ட் ஃபிலிம் எடுத்தார் அதன் மூலம் தான் இந்த வாய்ப்பு
வந்ததது. தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும்
என்னுடைய நன்றிகள். . எல்லோரும் திரையரங்கில் பார்த்து
படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் :-
ஒளிப்பதிவாளர்
ஆனந்த் அண்ணா மூலம் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இதற்கு முன்
பாலா சாரின் வர்மா படத்தில் நான் நடித்திருந்தேன் ஆனால் இந்த பையனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை தர
வேண்டும் என ஆனந்த் அண்ணா எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார்.கதையை நம்பி
ஒருமுயற்சியாக இது போன்ற படத்தை தயாரிக்க முன்வந்த
கார்த்திகேயன் சாருக்கு என் நன்றிகள், எம் எஸ் பாஸ்கர் சார் மாதிரி
பெரிய நடிகர்கள் கூட நடிக்கும் போது தான், நாம் பயணிக்க வேண்டிய தூரம்
தெரியும். அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் நன்றி.
நடிகர் விஸ்வநாத் :-
அட்டகத்தி முதல் இப்போது வரை ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் என்
நன்றிகள்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த் அவர் நிறைய பேருக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளது எனக்கு தெரிகிறது. நன்றி. எம்
எஸ் பாஸ்கர் எந்தப்படத்தில் நடித்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவார். அதே போல் உடன்
நடிப்பவர்களுக்கு நல்ல ஸ்பேஸ் தருவார். கபாலி படத்தில் நடித்தபோது ரஜினி சார் உடன் நடிப்பவர்களை
கூப்பிட்டு தனித்தனியாகப் பாராட்டுவார். அதே
போல் எம் எஸ் பாஸ்கர் சாரும் எல்லோரையும் பாராட்டினார். உங்களுடன் நடித்தது மகிழ்ச்சி சார்.