பூர்வீகம்’ திரைப்பட விமர்சனம்

 

பூர்வீகம்’ திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள்:-கதிர்,
மியாஸ்ரீ, போஸ்வெங்கட் , இளவரசு, சங்கிலி முருகன், ஸ்ரீ ரஞ்சினி, சூசன், யு.எஸ்.டி.சேகர், பாசங்க சிவகுமார்
மற்றும் பலர்நடித்துள்ளனர்.

டைரக்டர் : – ஜி.கிருஷ்ணன்.‌ டிஎப்.டச்.

மியூசிக்: – சாணாக்யா

ஒளிப்பதிவு :-விஜய்
மோகன்.

தயாரிப்பாளர்கள்: – பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி – டாக்டர்.ஆர் . முருகானந்தம்.

ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் போஸ்

வெங்கட் தன்னுடைய மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நல்ல

படிக்க வைத்து, அரசு அதிகாரியக்க ஆசைப்படுகிறார்.

தனது கிராமத்து சொந்தங்களை‌ தள்ளி விட்டு நகர வாழ்க்கையில் தனது

மகனை செயல்‌ படுத்த ஆசைபடுகிறார். அவரது ஆசைப்படி, தனது

மகன் நன்றாக படித்து அரசு அதிகாரியாக வந்து, வசதியான வீட்டு பெண்ணை திருமணம்

செய்துக் கொண்டு,

சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் சிறப்பாக உயர்ந்தாலும்,

ஒரு தந்தையாகிய போஸ் வெங்கட்டால் மகனின் சில மகிழ்ச்சியில்

பங்கேற்க முடியாமல் போகிறது, அவரிடம்

உரிமையாக சொந்தங்களோடு உறவாட முடியாத சூழலும் உருவாகிறது.

நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது மகனையே இழக்கும்
தறுவாயில்

நிலைக்கு தள்ளப்பட்டு போஸ் வெங்கட்டின் நிலைமை மாறியதா?,

பூர்வீகத்தை விட்டுவிட்டு படிப்புக்காகவும், பணிக்காகவும் நகர வாழ்க்கையில் ஈடுபட்டு,

தனது பெற்றோரைகளை மறந்துபோகும் மனநிலைமைக்கு ஆளாகிறார்.

கதிர், மனம் மாறிவிட்டாரா?

இல்லையா? என்பதை முழுமையாக இளைய சமுதாயத்தினருக்கான

வாழ்வியல் படமாக சொல்வதே இந்த ‘பூர்வீகம்’. கதைக்களம்.

தந்தை சொல்றபடி வாழும் கிராமத்து இளைஞர் மற்றும் பெற்றோரை

கவனிக்க முடியாமல் தவிக்கும் நகரத்து

குடும்பத் தலைவர் என இரண்டு கதாபாத்திரத்தில்

நடித்திருக்கும் கதாநாயகன் கதிர், இரண்டு

கதாபாத்திரங்களில் நடிப்பில் வேறுபாட்டைவித்தக காட்டியுள்ளார்,

தனது உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மியா ஸ்ரீ குடும்ப பாங்கான

முகத்தோற்றம், எளிமையான அழகோடும் கிராமத்து பெண் வேடத்திற்கு

கச்சிதமாக பொருந்துகிறார்.

அவரது வெகுளித்தனமான நடிப்பில் அவரது கதாபாத்திரத்தில்

கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும்

போஸ் வெங்கட், நகர வாழ்க்கை வேகத்துடன் மகனை படிக்க

வைத்தும், அவர் தன்னிடம் இருந்து விலகும் போது அதை

எதிர்க்க முடியாமல் தவிக்கும் இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

போஸ் வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும

ஸ்ரீரஞ்சனியும் நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார்.

சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் என மற்ற வேடங்களில்

நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த

வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சாணக்யாவின்

இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமத்து

மண்வாசனை மணத்தோடு

இனிமையாக இருக்கிறது. பின்னணி

இசை மாலை நேரத்து காற்றாக சுகம் தரும்படி

இசை‌யை பயணிக்க வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் விஜய் மோகன், கிராமத்து அழகையும்,

மக்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்

கிறார். அதே சமயம், காட்சிகளில் இருக்கும்

வண்ணங்களை சரியான முறையில் கையாள வில்லை.

எழுதி இயக்கி இருக்கும் ஜி.கிருஷ்ணன், டி எப்.டி ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தேவையான

ஒரு விஷயத்தை, சிறப்பாக இல்லாமல் கமர்ஷியலாக,

எல்லா தரப்பினரும் ரசிக்கும்படியும் கொடுத்திருக்கிறார்.

படிப்பிற்கும், தொழிலுக்கும் பூர்வீகமா விட்டுவிட்டு

நகரத்திற்கு வரும் இளைஞர்களை, தங்கள் கலாச்சாரங்களை, உறவுகளின்

மேன்மையாக மறந்து போகும் போது, வாழ்க்கையில்

எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுத்துகிறது

என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும்

இயக்குநர் ஜி.கிருஷ்ணன், விவசாயத்தின் முக்கியத்துவத்தை

உயர்ந்த குரலில் சொல்லி மக்களை யோசிக்க வைத்திருக்கிறார்.
கலாச்சாரம், காதல்,

திருமணம், உறவுகளின் முக்கியத்துவம் என்று பார்வையாளர்களுக்கு கிராமத்தில் பயணித்த

உணர்வை கொடுத்த வகையில் காட்சிகளை கையாண்டிருக்கும்ஆ

இயக்குநர் ஜி.கிருஷ்ணா, சில இடங்களில் காட்சிகளை நகைச்சுவையாக காமெடியாக

சித்தரித்து முழு படத்தையும் சிரிக்க வைத்து ரசிக்கவும் வைத்திருக்கிறார்.

பெரிய கருத்துக்களை சொன்னது அதை கையாண்ட விதம்

குறைகளை மறந்து படத்தை பாராட்ட வைத்துவிடுகிறது.

‘பூர்வீகம்’ தனது சொந்த மண் மீது தான் பெரிய விவசாயம் இருப்பதே சொர்க்கம் இருப்பதை உணர்ந்துள்ளார்.