‌’குடும்பஸ்தன்’ திரைப்பட விமர்சனம் …

‌’குடும்பஸ்தன்’ திரைப்பட விமர்சனம் …

 

நடித்தவர்கள் :-

மணிகண்டன், சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர், சுந்தரராஜன், குடசனத் கனகம், நிவேதிகா ராஜப்பன், பிரசன்னா பாலச்சந்திரன் ஜென்சன் திவாகர், அனிரூத் முத்தமிழ், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :- ராஜேஷ்வர் காளிசாமி

 

மியூசிக் :- வைசாக்

 

ஒளிப்பதிவு :-சுஜித் .என்.சுப்ரமணியம்.

 

படத்தொகுப்பு :- கண்ணன் பாலு.

 

தயாரிப்பாளர்கள்:- சினிமாக்காரன் – எஸ்.வினோத் குமார்.

 

வேறு சாதியைச் சேர்ந்த நாயகன்

 

மணிகண்டனும், மற்றொரு சாதியை சேர்ந்த நாயகி சான்வி மேக்னாவும் காதலிக்கிறார்கள்.

 

இவர்களது காதலுக்கு இரண்டு தரப்பு குடும்பத்தவர்களும்.

 

எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் அதனால் வீட்டை இவர்கள் தங்கள்

 

விட்டு வெளிவந்தது இருவரும் பதிவுத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.

 

திருமணமாகி சில நாட்களில் குடும்ப சுமைகளை சுமக்க வேண்டும் என்று

 

வேலைகளை செய்ய தொடங்கிறார். குடும்ப பொறுப்பு அதிகமாக குடும்பஸ்தனாக மாறி

 

மணிகண்டனுக்கு பொருளாதாரத்துக்கு பணம் தேவை அதற்கு

 

குடும்ப நடத்த பணம் முக்கியம் அதற்கு நம்ம வேலைசெய்ய

 

வேண்டும். வேலைக்கு தேடி அலைந்தது மிச்சம்

எப்படியாவது தனது வேலையில்

 

முன்னேற்றம் எற்பட குடும்பத்தின்

 

தேவைகளை பூர்த்தி செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நொடிக்கு நொடி

 

ஓடிக்கொண்டிருக்கும் வேலையில்

மணிகண்டன், திடீரென நண்பருக்காக கோபத்தில் மேனஜரை அடிக்க வேலை இழக்கிறார்.

 

அது குடும்பத்தில் தெரிந்தால் சிக்கலாகிடும்

 

என்பதால், வீட்டில் சொல்லாமலேயே வேறு

 

வேலை தேடுகிறார். அதனால் குடும்ப செலவுகளை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்குகிறார். அதை

 

எதிர்பார்த்தது போல் வேலை கிடைக்காமல் போகிறது, தன் வாங்கிய கடனை

 

திருப்பிக் கொடுக்க முடியாமல் ஓடி ஒளிந்து ஓடுவதும் அதே சமயம்

 

தனது கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கான

 

முயற்சிகளில் ஈடுபடுவதும் என்று பொருளாதார ரீதியான

 

பிரச்சனை சிக்கல்களில் சிக்கித் தவித்து பணம் மட்டுமே வாழ்க்கை

 

இல்லை என்ற மனநிலையுடன் சுயமரியாதை மற்றும்

 

தன்னம்பிக்கையுடன் நடக்கிறார் மணிகண்டன், தனது

 

குடும்பத்தாரின் நடவடிக்கையால் பணம் தான்

 

வாழ்க்கை, என்ற மனநிலைக்கு

வருகிறார்.

 

அவரது மனமாற்றம் அவரது பிரச்சனைகள் தீர்வுக்கு வந்ததா? இல்லையா?,

 

அவரது மனமாற்றம் சரியானதா ? தவறான தா?, என்பதை விளக்கும் நகைச்சுவையாக

 

சொல்வதே தான் குடும்பஸ்தன்

 

மணிகண்டன் நடிக்கும் கதாபாத்திரங்களில மிக

 

எதார்த்தமாக கையாண்டு அதை

 

மக்களிடம் சேர்ப்பதில் கெட்டிக்காரராக மணிகண்டன், நடித்துள்ளார் கதையின்

 

கதாநாயகனாக நடித்தாலும், அதே பாணியிலான

 

கதைக்களத்தில் மற்றும் கதாபாத்திர தேர்வு கதை தேர்வில்

 

மிக தெளிவாக இருக்கிறார். தான் நேசித்த பெண்ணை காதல்

 

திருமணம், அதை தொடர்ந்து குடும்பத்தில் எழும் எல்லா பிரச்சனை,

 

பொருளாதார பிரச்சனைகள், அதை சமாளிப்பதற்கு

 

மேற்கொள்ளும் முயற்சிகள், அதுல

 

ஏற்படும் வெற்றி தோல்விகள் என பல இன்றைய இளைஞர்கள்

 

கடந்துள்ளருக்கும் அல்லது கடக்க முடியாமல் இருந்து

 

இருபவர்களின் பிரச்சனைகளை காட்சிகளை

 

அமைத்து, அதை தனது உடல் மொழி மற்றும் இயல்பான நடிப்பு மூலம்

 

படம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து ரசிக்க சிந்திக்க வைக்கும் மணிகண்டன்,

 

சில இடங்களில் தான் அடுத்து என்ன செய்யப் போகிறேன், என்பதை

 

படம் பார்ப்பவர்கள் புரிந்துக்கண்டு நம்மை

 

சிரிக்கும் அளவுக்கு தனது கதாபாத்திரத்தில் ரசிகர்களிடம் தனி

 

அழுத்ததை பதிய வைத்து அவர்களின்

 

முழு கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா, தமிழ் சினிமாவில் புதுமுகம் என்ற அடையாளம் தெரியாமல் நன்றாக சிறப்பாக

நடித்திருக்கிறார்.

 

வேறு சாதியைச் சேர்ந்த பெண் இருந்தாலும் என்றாலும் கணவரின்

 

உறவினர்களை கேவலமாக பேசாமல், அதை மிக சாதாரணமாக

அளவில் பதில் தரும்

 

காட்சிகள் முதல், பிரசவ வலியில் தனது மாமியார் மீது

 

தன் கோபத்தை வெளிப்படுத்துவது போன்ற சில காட்சிகளில் சிறப்பாக நடித்து கைதட்டல் வாங்குபவர்.

 

மணிகண்டன் தனது நடிப்பால் படத்தை தாங்கிப் பிடிக்கிறார்.

 

மற்றொரு பக்கம் குரு சோமசுந்தரம் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

 

பணம் தான் முக்கியம் என்ற

 

மனநிலையுடன் வாழும் அவர், தனது சீன பயணத்திற்காக தயாராகும் காட்சிகளும்,

 

அதில் அவர் செய்யும் காமெடி யில்ப், சிரிக்காதவர்களை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.

 

மணிகண்டனின் அப்பாவாக நடித்துள்ள

 

ஆர்.சுந்தரராஜன், தனது வழக்கமான

கோயம்பத்தூர்

 

பாஷையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேசி நடித்திருக்கிறார்.

 

கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும்

 

குடசனத் கனகம், தமிழ் தெரியாதவர் என்றாலும், தனது பார்வை மற்றும்

 

உடல்மொழி மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம்

சேர்த்துவிடுகிறார்.

 

கதாநாயகனின் அக்காவாக நடித்திருக்கும்

 

நிவேதிதா ராஜப்பன், மணிகண்டனின்

 

முதலாளியாக நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரசன்னா

 

பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என படத்தில் நடித்திருக்கும்

 

அனைத்து நடிகர்களும் ஒரு வகையில் பார்வையாளர்களை

 

வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியத்தின் கேமரா

 

கதாபாத்திரங்களை இயல்புத்தன்மை மாறாமல் காட்சிகளை

 

படமாக்கியிருப்பதில் அவர்களின் உடல் மொழியை மிக

 

நேர்த்தியாக காட்சிப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை

 

உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக காட்சி அமைத்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி

 

இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி

 

இசையில் கூட நகைச்சுவை உணர்வு இருக்கிறது.

 

இசையமைப்பாளரின் பாடலில் தனி கவனம் தெரிகிறது.

 

படம் முழுவதும் நிறைந்திருக்கும் கதாபாத்திரங்கள்,

 

அவர்களுடைய பேசும் காட்சிகள் என்று

 

அதை ரசிக்குபடி தொகுத்து படத்தை

 

சிறப்பாக நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கண்னன் பாலு.

 

குடும்பத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆணும்

 

எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு

 

கதை, திரைக்கதை எழுதியிருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும்

 

ராஜேஷ்வர் காளிசாமி, அதை அளவாக

 

கையாண்டு ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

 

பிரசன்னா பாலச்சந்திரனின் வசனங்கள் அனைத்தும்

 

சிரிப்பு சரவெடி காமெடியில் இருக்க

,சாதி பாகுபாடு பற்றிய சில வசனங்கள் வருகிறது கதைக்கு ஒட்டவில்லை

 

இருந்தாலும் அதையும் நாகரீகமாக சொல்வது

 

காலக்கட்டத்தின் உண்மை தன்மையை

 

வசனங்கள் மூலம் வெளிக்காட்டியதற்கு பாராட்டுகள்.

 

பலர் கடந்து வந்த‌ பாதையில் வாழ்க்கை,

 

பலர் கடக்க முயற்சித்திருக்கும்

 

வாழ்க்கை, பார்வையாளர்களை படத்துடன்

 

தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் காட்சிகளை

 

அமைத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ்வர்

 

காளிசாமி, குடும்பஸ்தன்களின் கஷ்ட்டங்களை

 

காமெடியாக சொல்லி சிரிக்க வைத்து படத்தை ரசிக்கவைத்திருக்கிறார்.

குடும்பத்தில் நடக்கும் வழக்கமான சம்பவங்கள், பல

 

படங்களில் பார்த்த காமெடி சம்பவம்‌களை

 

படம் இருந்தாலும், அந்த சூழல்களை இயல்பாக படமாக்கியிருக்கிறார்,

 

அதுல நடிகர்களை இயல்பாக நடிக்க வைத்து சிரிக்க

 

வைத்திருப்பதால், படத்தின் குறைகளை மறந்து

 

பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக படத்தை ரசிக்க முடிகிறது.

 

‘குடும்பஸ்தன்’

திரைப்படம் குடும்பம் கலகலப்பா

 

மகிழ்ச்சியாக இருக்க அனைவரும் திரையரங்குகள் பார்க்க வேண்டிய சிறந்த படம்.