சாரா”திரைப்பட விமர்சனம்…

“சாரா”திரைப்பட விமர்சனம்…

 

 

நடித்தவர்கள் : –

சாக்ஷி அகர்வால், செல்லக்குட்டி, யோகி பாபு, ரோபோ சங்கர், விஜய் விஷ்வா, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்…

 

டைரக்டர் :- செல்லக்குட்டி.

 

இசை: கார்த்திக் ராஜா.

 

ஒளிப்பதிவு:-

ஜெ.லக்ஷ்மன்குமார்.

 

படத்தொகுப்பு :-

ஜான் ஆபிரகாம்.

 

தயாரிப்பாளர்கள் :- விஸ்வா ட்ரீம் வேர்ல்ட் – ஸ்ரீ பட்டவன்

 

பிரபல கட்டிடப் பொறியாளரான நாயகி சாக்‌ஷி அகர்வால், கட்டுமான

 

நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதுடன், அதே நிறுவனத்தில்

 

பணியாற்றும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார்.

 

இருவருக்கும் திருமணமாக இருக்கும் நிலையில்,

 

சாக்‌ஷி அகர்வாலை கட்டுமான நிறுவனத்தின்

 

காவலாளி ரோபோ சங்கர் கொலை செய்ய முயற்சிக்கிறார்.

 

ஆனால், அவருக்கு முன்னதாக, மற்றவர்களுக்கு கோமாளியாக தெரியும், சாதாரண

 

கட்டுமான தொழிலாளியாக பணியாற்றும்

 

செல்லகுட்டி, விஜய் விஸ்வா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோரை கடத்தி விடுகிறார். அவர்

 

அப்படி செய்தது ஏன்? என்ற கேள்விக்கான விடையை பலவித

 

திருப்பங்களோடு சொல்வது தான் “சாரா” திரைப்பட கதைக்களம்.

 

கதையின் நாயகியாக சாரா கதாபாத்திரத்தில்

 

நடித்திருக்கிறார். சாக்‌ஷி அகர்வால், கொடுத்த

 

வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

சாக்‌ஷி அகர்வாலின் காதலராக நடித்திருக்கிறார்

விஜய் விஸ்வா,

 

ஹீரோவாக எண்ட்ரிக் கொடுத்துடன், அதன் பிறகு அவரது நிலை பாவம்… பரிதாபம்.

 

ஆடை, தோற்றம் மற்றும் தன்னை கோமாளியாக

வருகிறார்.

 

அறிமுகமாகும் இயக்குநர் செல்லகுட்டி, அடுத்த காட்சிகளில் அவர் எடுக்கும்

 

விஸ்வரூபம் திரையரங்குகளில் அதிர வைக்கிறது. படத்தின் ஹீரோயின்,

 

ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களை ,

 

அனைத்தும் அவர் நடத்தியிருக்கிறார். ஷோ செம அதிரடி. அதிலும், ஒருவித

 

சத்தம் போட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தும் அவரது மேனரிசம்

 

நிச்சயம் டிரெண்டிங், தற்போது சோசியல் மீடியாக்களில் உலா

 

வரும் நடிப்பு அரக்கனையும் மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

 

யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கிறது. வழக்கம் போல் யோகி பாபு

 

உடல் கேலி செய்யும் வசனங்களை பேசினாலும், சில வசங்களினால் நிச்சயம் சிரிப்பு

 

வருகிறது. ரோபோ சங்கர், தங்கதுரை ஆகியோர் திரை

 

இருப்பு, அவர்கள் பேசும் வசனங்களும் சிரிக்க வைக்கிறது.

 

அம்மாவாக நடித்திருக்கிறார். அம்பிகா, வில்லனாக நடித்திருக்கும்

 

ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில்

 

பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை கேட்கும்படி இருக்கு இசையமைப்பு .

 

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மன் குமார்

 

கதைக்கு ஏற்பகாட்சிகளை படமாக்கி

இருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் இயக்குநரின்

 

கதையை சிறப்பான வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கிறார். செல்லகுட்டி, சஸ்பென்ஸ் திரில்லர்

 

கதையை நட்பு மற்றும் காதலுடன்

சேர்த்து கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.

 

இயக்குநர் செல்லகுட்டி, தான் சொல்ல நினைத்த கதையை சற்று

 

தடுமாற்றத்துடன் சொல்லி ஒரு நடிகராக பலவிதமான

 

அலப்பறைகள் செய்து, பார்வையாளர்கள்

 

மனதில் நிற்கிறார்.

 

பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் என அனைத்து கோமாளிகளையும்

 

தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிரடியான நடிப்பை வெளிப்படுத்துடன்

 

செல்லகுட்டி, இயக்குநராக வெற்றி பெற விட்டாலும்

 

ஒரு நடிகராக நிச்சயம் டிரெண்டாக வாய்ப்புகள் இருக்கிறது.

 

படம் பார்த்தத்தில், “சாரா” நிஜமான நடிப்பின் அரக்கனை

 

அடையாளம்

தெரியவைத் திருக்கிறது. இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…