” நிர்வாகம் பொறுப்பல்ல” திரைப்பட



விமர்சனம்…
நடித்தவர்கள் :- எஸ்.கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன்,
லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா
வெங்கடேசன். மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- எஸ்.கார்த்தீஸ்வரன்.
மியூசிக்: ஸ்ரீகாந்த் தேவா.
ஒளிப்பதிவு :-
என்.எஸ்.ராஜேஷ்.
படத்தொகுப்பு:-
சஜின்.
தயாரிப்பாளர்கள்:-
டி.ராதாகிருஷ்ணன்
இந்த படத்தில் நாயகன் கார்த்தீஸ்வரன், பல
வழிகளில் தனியார் ஃபேங்க்கில் சில முறை கேடுகள் செய்து அதன் மூலம்
மோசடி செய்து குறைந்த பட்சம் ரூ.5.ஆயிரம் கோடி சம்பாதித் திருக்கிறார்.
அந்த மூலம் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு
பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக்
கொள்கிறார். அவர் நாயகனை தொடர்ந்து பாலோ செய்துக்
கொணஂடிருந்த போது
திடீரென்று
போலீஸிடம் சிக்கிக் கொண்ட
கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? இல்லையா?, அவர் செய்த மோசடிகள்
எத்தனைகள் என்ன ? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்கிறார், அவர்
இப்படி செய்வதற்கு என்ன காரணம் ?, என்பதை ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதைக்களம்.
இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.கார்த்தீஸ்வரன்
கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
எல்லோரிடம் அப்பாவி முகம், வைத்து சாதுவான தோற்றம் என்று
சாதாரணமாக வலம் வந்த கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும்,
அடங்கப்பா யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியம் ரகங்களாகவும்,
எல்லாருக்கும் அதிர்ச்சியளிக்
கின்றன. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன்,
பலவித கெட்டப்புகளில் தோன்றியதுடன், அவற்றுக்கு
பொருத்தமாக கனகச்சிதமாக செய்திருக்கிறார்.
அவர் செய்தது . இல்லாதது சற்று வருத்தமளிக்கிறது.
இருந்தாலும், ஒரு நடிகராக நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் கனகச்சிதமாக சரியாக செய்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார்
ஸ்ரீநிதி இன்ஸ்பெக்டர் ரோல் கம்பீரமாகவும்,
கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார்.
கார்த்தீஸ்வரனின் மோசடி குழு உறுப்பினராக
நடித்திருக்கும்
ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா
வெங்கடேசன் என அனைவரும் கொடுத்த
வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ், காட்சிகளை
கலர்புல்லாகவும், தரமாகவும் படமாக்கியிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைவரையும் ஆட்டம் போட வைக்கின்றன.
பின்னணி இசை அளவுக்கு மீறிய அதிகமன சத்தம் குறைத்து இருக்கலாம்
படத்தொகுப்பாளர் சஜின்.சி, இயக்குநரின் வரிசைப்படி
காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார். எஸ்.கார்த்தீஸ்வரன், மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்
போன் தருவதாக கூறி கார்ப்பரேட் நிறுவனம் மூலம் நடத்திய மோசடி
முதல் தற்போது நடக்கும் ஆன்லைன் மோசடிகள் வரை, அனைத்து விதமான மோசடிகளையும்
அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பல வழிகளில், பலர் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்பாக செய்திகள் வெளியானாலும்,
மக்கள் ஏமாறுவதும், அவர்களை தொடர்ந்து ஏமாற்றுவதும்
நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு காரணம் என்ன ? என்பதை கமர்ஷியலாக
காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன், இத்தகைய
மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் என்ன செய்ய
வேண்டும், என்பதையும் சொல்லியிருக்கிறார்.
இயக்குநர்.அவர் எடுத்த
மேக்கிங், காட்சிகளை கையாண்ட விதம் ஆகியவற்றில் சில குறைகள்
இருந்தாலும், தான் கதையை ச்சொல்ல வந்தக் கதை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும்
சொல்லியிருக்கிறார். இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன்,
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால்,
நிச்சயம் இன்னொரு சதுரங்க வேட்டை படத்தைப் பார்த்த மாதிரி ஆடியிருக்கலாம்.
படம் பார்த்தத்தில், ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தில்
தனது திறமையை கொண்டு பல விதத்தில் மோசடி செய்து கேம்
ஆடியிருக்கிறார். நம்ம ஊர் கேம் லீடர்.அனைவரும் பார்த்து மகிழ்யுங்கள்.