
நடித்தவர்கள்:-
அருண்குமார்
சேகரன்,நதியா சோமு,சுஜன்,
அம்ரிஷ், பிரதாப்,
கோகுல்,குணா, சுந்தரம் வேல், கார்த்திக் ஸ்மித்,
ராஜா, டாக்டர் இவின், ராஜ் குமார், கலைவாணி,
லிங்கேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
அருண்குமார் சேகரன்.
மியூசிக்:-
சரவண தீபன்.
ஒளிப்பதிவு:-
வினோத்குமார்.
படத்தொகுப்பு:-
ஸ்ரீராம் விக்னேஷ்.
தயாரிப்பாளர்கள்:-
சஙகமித்ரன்.மற்றும்அம்மன்ஆரட்ஸ்கிரிஸ்யேஷன்
சார்பில் நாராயண நாகராஜ் மற்றும் அருண்குமார் சேகரன்.
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் பணியாற்றும்
நாயகன் அருண்குமார் சேகரனும், கல்லூரி
மாணவியான நாயகி நதியா சோமுவும் மனசார காதலிக்கிறார்கள்.
அருண்குமார் சேகரனுக்கு ஏற்கனே மது குடிக்கும் பழக்கம் இருப்பதை
தெரிந்த கொண்ட நதியா சோமு, இனி மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்,
என்று அவரிடம் சத்தியம் வாங்குகிறார்.
ஆனால், இருந்தும் சில நாட்களில் காதலிக்கு செய்த
சத்தியத்தை மிறி அலசிப் படுத்தி ஃப்ரெண்ட்ஸ்
களுடன் சேர்ந்து
அருண்குமார் சேகரன் மது குடிக்கிறார். இதை
தெரிந்த வேதனையுடன் நதியா சோமு, காதலனுடன்
பேசுவதை நிறுத்தி விட காதல் பிரிவால் இதனால் அருண்குமார் சேகரன் தொடர்ந்து மது அருந்துகிறார்.
விஷயம் தெரிந்த அருண்குமார் சேகரனை பார்த்து
மறுபடியும் சமாதானப்படுத்திய நதியா சோமு,
அவரை திருமணமும் செய்துக் கொள்கிறார்.
காதல் ஜோடி தம்பதியராகிய மகிழ்ச்சியாக வாழ்ந்துக்
கொண்டிருக்கிறார் அவர்களது மகிழ்ச்சி சந்தோஷ்த்தில்
நதியா சோமு கர்ப்பமடைகிறார். இதையடுத்து தம்பதிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட,
அருண்குமார் சேகரனின் பரிசோதனை முடிவு,
அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறார்.
காதலில் வெற்றி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, அப்பவாகப் போகும்
மகிழ்ச்சி என வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்த பெரும் மகிழ்ச்சியில்
இருக்ககிற நாயகன் அருண்குமார் சேகரனின் மருத்துவ முடிவு, வாழ்க்கையில்
அவருக்கு படிபடியாக கிடைத்த அனைத்து மகிழ்ச்சியையும்
சற்று நேரத்தில் விழுந்து விடுகிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை
என்னவானது ?, என்பதை அவரது மருத்துவ முடிவின் பின்னணி என்ன ? என்பதை அறிய
எளிமையான காதல் கதையுடன் வலிமையான தகவலை சொல்வது தான் “ப்ராமிஸ்” திரைக் கதைக்களம்.
நான் கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்ற வேண்டும், என்று செய்த சத்தியத்தை
நிறைவேற்ற
வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னவெல்லாம்
நடக்கும் என்பதை, கமர்ஷியல் திரைப்பாணி மக்களுக்கு அறிவுரை சொல்லும்
படமாக இயக்கியிருக்கிறார் அருண்குமார் சேகரன்.
படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அருண்குமார் சேகரன், எளிமையான கதாபாத்திரத்தில்
பொருத்தமாக நடித்திருக்கிறார்.
எல்லோருக்கும் புத்திமதி சொல்வதை விட, என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும், என்ற
குணத்தால் அவரது உடல்மொழி மற்றும் அளவான நடிப்பில்,
அருண்குமார் சேகரன் என்ற நடிகர் அடையாளத்துடன்
சங்கமித்ரன் என்ற கதாபாத்திரமாக பார்வையாளர்கள் மனதில் எளிதில்
நிற்க வைத்து விடுகிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கிறார். நதியா சோமு, சமூகத்தில் ஒரு வீட்டு பெண்ணாக எளிமையான முகத்துடன், அழகுடன் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பில காதலருக்கு நடந்த பாதிப்பில் கணவர் பற்றிய உண்மை தெரிந்து அவரை பிரிய முடிவு செய்வது, தன் கொடுத்த சத்தியத்தால் ஏற்பட்ட எண்ணி வருந்துவது, போன்ற அழுத்தமான
கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக
நடித்துள்ளார் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல், கார்த்திக்
ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார், கலைவாணி ஆகியோர்
புதுமுகங்கள் என்ற அடையாளமே தெரியாதவாறு நடித்திருக்கிறார்கள்.
அதேபோல், கதாநாயகனின் நண்பர்களாக
நாயகனின் தாய் தந்தை, நாயகியின் தாய் தங்களுக்கு
கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். கொடுத்த
வாக்கையும் சத்தியத்தை நிறைவேற்ற
இரண்டு காதலர்கள் பாடுபடுகிறார்கள் அவர்களை பாராட்டுவோம்.
அனவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…