“ஹார்ட்டின்” திரைப்பட விமர்சனம்…

 

“ஹார்ட்டின்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :-
சனத்,மடோனா
செபாஸ்டியன் இமயா, வாட்ஸ் அப்

மணி, டெப்னிதா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
கிஷோர்குமார்.

மியூசிக்:-
ராஜேஷ் முருகேஷ்

ஒளிப்பதிவு:-
முருகேஸ்வரன்.

படத்தொகுப்பு:-
பரத் விக்ரமன்.

கலை இயக்குனர்:-
ஜி. துரைராஜ்.

தயாரிப்பாளர்:-
என்.எஸ் அஸ்ரப்

ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் ஓட்டலில் பணியாற்றும்

நாயகன் சனத்தும், ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் பெண்ணான

இமயாவும் பழகின கொஞ்சம் நாட்களில் நண்பர்களாக ஆகுகிறார்கள். சனத் மீது

இமயாவுக்கு காதல் மலர்கின்றன. ஆனால், அவரது காதலை சனத் ஏற்க

மறுக்கிறார். அதற்கான காரணமாக தனது

முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் அனுபவிக்கும் சக்தி

எனக்கு இல்லை என்கிறார். அவரது முன்னாள் காதல் பற்றி அறிந்துக் கொண்ட பிறகும்

அவர் மீது காதலுடன் இருக்கிறார். இமயாவை சனத்தும் காதலிக்கிறார்.

இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு

திரும்பிய சனத், விபத்து ஒன்றில் ஏற்பட்டது மூலம்

தலையில் அடிபட்டுவிட, தனது 6- வருட

நினைவுகளை அனைத்தும் இழந்து விடுகிறார்.

இதனால், இமயா மற்றும் அவரது காதலை மறந்து

விடுவதுடன், தனது காதலை முறித்துக்கொண்டு

தன்னைவிட்டு பிரிந்து சென்ற முன்னாள்

காதலியின் பிரிவு சம்பவத்தையும் மறந்துவிடுகிறார்,

பழைய நினைவுகளுடன் தன்னுடைய முன்னாள்

காதலி மரோனா செபாஸ்டியனை சந்திக்க செல்கிறார்.

மறந்த நினைவுகள் திரும்பவும் வந்தவுடன்,

அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணிக்கிறார்.

இமயாவின் காதல் வெற்றி பெற்றதா? அல்லது முதல்

காதல் முறிவு பற்றி தெரியாமல் பிரிந்து சென்ற காதலியை

தேடிச் செல்லும் சனத்தின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கிறார் சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட்

மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இல்லாமல், ஒரு (அம்னிஷியா) என்ற மறதி நோயில் நினைவிழப்பு நோயாளியாக

கதாபாத்திரமாகவே வலம் வந்திருக்கிறார்.

முதல் காதலியை உருகி உருகி காதலிப்பவர்,

அவரது பிரிவால் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், இமயா

உடனான காதலுக்குப் பிறகு மகிழ்ச்சியான

மனநிலைக்கு மாறுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

அறிமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி

தைரியமாகவும், தன்னம்பிக்கை
யுடனும்

நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு அவரது

கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

மடோனா செபாஸ்டியன், காதலருக்கு

இணையாக தன்னால் காதலில் நேர்மையாக இருக்க

முடியாத நிலையை எண்ணி மனவருந்திகிற காட்சியிலும், தான் நிராகரித்த காதல்

மீண்டும் தன்னை தேடி வரும்போது, தடுமாறும்

காட்சியிலும் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கிறார் வாட்ஸ்-அப் மணி

குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்து சில காட்சிகளில் சிரிக்க

வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கிறார்.

டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
படம் “ஹார்டின்”
பார்த்தத்தில்

இரண்டு காதல் செய்தது விபத்து ஒன்று அன்றைய தினத்தில் இருந்து இரண்டாவது

காதலை மறந்து முதல் காதலித்த காதலி மீது ஞாபாகம்

வருகிறது முதல் காதலி இதனால் தவியாய்

தவிக்கிறார். இதன் முடிவுகள் வெண்திரையில் கண்டு களியுங்கள்.