திருவின் குரல் திரை விமர்சனம்

பொதுவாக ஆளுங்கட்சியின், அரசின், அரசுத் துறைகளின் தவறுகளை , குற்றங்களை ஒரு திரைப்படத்தில் கதைப்போக்கிலோ , காட்சியிலோ , வசனத்திலோ வைக்கும்போது,

அதற்காக ஆள்வோர்கள் கோபித்துக் கொள்வார்கள் அல்லது முகம் சுளிப்பார்கள் . அவர்கள் செய்யாவிட்டாலும், செய்வார்கள் என்ற பயமோ தயக்கமோ படைப்பாளிகளுக்கு இருக்கும். அதற்காக அவர்கள் படைப்பில் தாமாகவே சமரசம் செய்து கொள்வார்கள்.

அதனால் படைப்பாளிகள் சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாகச் சொல்ல முடியாமல் போவது உண்டு . படைப்பும் பாதிக்கப்படுவது உண்டு .

அருள்நிதி நடித்து வெளிவந்துள்ள திருவின் குரல் படத்தில்,

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உள்ள லிஃப்ட் ஆபரேட்டர், அட்டன்டர், ஊழியர்கள் பலர் கொடூரமானவர்கள், காமவெறியர்கள், கொலைகாரர்கள், இரவில் ஆள் கடத்தும் பேர்வழிகள் , சைக்கோ ஆட்கள், என்று , ( மருத்துவமனையின் பெயரையும் கட்டிடத்தையும் நேரடியாகக் காட்டியே ) சொல்லி இருக்கிறார்கள்.

படத்தைப் பார்க்கும் யாருக்கும் ‘இனி உடம்பு சரி இல்லை என்றால் அரசு மருத்துவமனைக்குப் போகவே வேண்டாம். காட்டை வீட்டை விற்றாவது தனியார் அரசு மருத்துவமனைக்குப் போய் லட்ச லட்சமாகக் கொட்டுவதே மேல்’ என்றுதான் தோன்றும்.

ஆகவே, இனி வேறு படைப்பாளிகள் ஆளும் அரசை அரசுத் துறைகளை விமர்சித்து, அழுத்தமாக வீரியமாக தைரியமாக படம் பண்ணலாம்.

திருவின் குரல் படத்தின் கதை என்ன

குரலற்ற மாற்றுத்திறனாளியான திரு, தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்கிறான். அக்கா, அக்கா மகள், அப்பா, பாட்டி, அத்தை, அத்தை மகள், அவருடன் விரைவில் திருமணம் என அவரின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கிறது அப்பா பாரதிராஜா சந்திக்கும் விபத்து. அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட, அங்கே பணியாற்றும் வார்டு பாய், லிஃப்ட் ஆபரேட்டர், பிணவறை ஊழியர், செக்யூரிட்டி என நால்வர் கூட்டணியுடன் அருள்நிதிக்கு மோதல் ஏற்படுகிறது. கொலைகாரர்களான அந்த நால்வர் அருள்நிதியைப் பழிதீர்க்க எந்த எல்லை வரை போகிறார்கள், அதை அருள்நிதி எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

திருட்டு, மருத்துவமனைகளில் நடக்கும் குற்றங்கள், அவற்றைச் செய்யும் டாக்டர்கள் பற்றியவைதான் அந்தப் படங்களின் கதையாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அரசு மருத்துவமனையில் கடைநிலை ஊழியர்களாக வேலை பார்க்கும் சிலரை வில்லன்களாகச் சித்தரித்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் பிரபு.

அரசு மருத்துவமனைகளில் அப்படிப்பட்ட ஊழியர்கள் அதிகபட்சமாக 50 ரூ, 100 ரூ என ‘டிப்ஸ்’ வாங்குபவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் அவர்களை கொலைகாரர்களாக, காமவெறி பிடித்தவர்களாக, கொள்ளையடிப்பவர்களாகக் காட்டி பயமுறுத்துகிறார் இல் இயக்குனர். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அரசு மருத்துவமனைகளுக்குச் செல்பவர்கள் கொஞ்சம் பயத்துடனேயேதான்
செல்ல வேண்டும்