ராகவா லாரன்ஸ் பேய் இல்லாமல் ஒரு சமூக அக்கறையோடு ஒரு கதையை தேர்வு செய்திருக்கிறார் அதுதான் ருத்ரன் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்
அப்பா அம்மா நண்பர்கள் காதலி என மகிழ்ச்சியாக வாழும் ருத்ரனின் குடும்பத்தின் மேல் ஒரு பெரிய கடன் வந்து விழ, அதிலிருந்து மீள வெளிநாட்டில் ஐடி வேலைக்குச் செல்கிறார் ருத்ரன்.
அங்கு செல்லும் அவரின் வாழ்க்கை திசை மாற ருத்ரனின் மொத்த குடும்பமும் வில்லன் ‘பூமி’யால் கொல்லப்படுகிறது. வில்லன் பூமி யார், அவர் ஏன் ருத்ரனின் குடும்பத்தைக் கொன்றார், பூமியை ருத்ரன் பழிவாங்கினாரா என்பதை எளிதில் யூகிக்கும் படியாக
இருந்தாலும் ரசிக்கும்படி வரிசையாக அடுக்கி, திரைக்கதை அமைத்திருக்கிறார் கே.பி.திருமாறன், அதற்குத் திரையில் உயிர் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரேசன். வாழ்த்துக்கள்
ருத்ரனாகராகவா லாரன்ஸ், டான்ஸிலும் சென்டிமென்ட்டிலும் அடித்து ஆடினாலும், ரொமான்ஸிலும் சண்டைக்காட்சிகளிலும் ஓவர் டோஸாகவே பெர்ஃபாமென்ஸ் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் எல்லாம் பழங்கால தெலுங்கு சினிமாக்களுக்கே டஃப் கொடுக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அவரின் மேனரிஸம் இதுவரையிலான ராகவா லாரன்ஸ் படங்களின் பார்த்துப் பழகிய ரியாக்ஷன்களையே நினைவுபடுத்தினாலும் மனுஷன் அம்மா சென்டிமென்ட் காட்சி யில் மின்னுகின்றன.
கதாநாயகி பிரியா பவானிஷங்கருக்கு முதற்பாதியில் எந்த வேலையும் இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை நகர்விற்குக் கைகொடுக்கும் கதாபாத்திரம். அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். கர்ப்பிணியாக விலங்கு போன்ற வில்லன்களிடம் சிக்கி உயிரிழக்கும் பொழுது அனுதாபத்தை அள்ளிச் செல்கிறார்
ருத்ரனின் அம்மா, அப்பாவாக வரும் பூர்ணிமா பாக்யராஜ் – நடிப்பு இந்த படத்தில் நல்ல மெச்சூரிட்டியாக தெரிகிறது. நாசர், சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
நண்பராக வரும் காளி வெங்கட், கதாநாயகனுக்கு உதவும் காவலராக வரும் இளவரசு என அனைவருமே அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்கள்.
துறைமுக தாதாவாகவும், கொலைகார கும்பலின் தலைவனாகவும் வருகிறார் சரத்குமார். தோற்றம், உடல்மொழி போன்றவற்றில் மிரட்டுகிறார் அவர் ஆரம்ப கால கட்சியில் எப்படி ரவுடியாக இருந்து கேங்ஸ்டராக மாறினார் என்பது தணிக்கதை புதுக்கதை அது ரசிக்கும்படி உள்ளது
வழக்கமான வில்லன் கதாபாத்திரம் செய்யும் அதே பன்ச் டையலாக், அதே மிரட்டல், அதே கோபம் எனப் படம் முழுவதும் மாற்றங்களின்றி செய் துள்ளார். இனி நிறைய படங்களில் ஒரு வில்லனாக காணலாம் செம ஆக்ஷனில் பட்டையை கிளப்புகிறார் சரத்குமார் கிளைமாக்ஸ் காட்சியில் லாரன்ஸ் உடன் போதும் அந்த சரத்குமார் பழைய சரத்குமாரை ஞாபகப்படுத்துகிறார்
ரெடின் கிங்ஸ்லி தன் அறிமுக காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ், தரண் குமார் கூட்டணியின் பாடல்களில் ரசிக்க வைக்கிறது.
அஃப்ரோ இசையில் முதல் பாடலாக வரும் ‘ஜொர்தாலயா’ பாடல் மட்டும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் சாம் சி.எஸ் இரண்டாம் பாதிக்கு வலுசேர்த்திருக்கிறார்.
கலர் ஃபுல்லான முதல் பாதிக்கும், விறுவிறுப்பான இரண்டாம் பாதிக்கும் தேவையான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.
வெளிப்புற படப்பிடிப்பு அருமையாக முயற்சி செய்து உள்ளார் ஒளிப்பதிவாளர்.
சி.ஜி. உருவாக்கத்திலான ‘வெளிநாட்டு’ காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலா
மோ என எண்ணம் ஏற்படுகிறது.
முதற்பாதியில் தவறவிட்ட பணியை இரண்டாம் பாதியில் ஓரளவிற்குச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி. திரைக்கதை கைவிட்ட இடங்களை தன் படத்தொகுப்பால் சரி செய்ய முயன்றிருக்கிறார்.
வீட்டிற்குச் செல்லப் பிள்ளையான துடிப்பான கதாநாயகன், கருணை வடிவான கதாநாயகி, கதாநாயகனின் கண்டதும் காதல், ஓப்பனிங் சாங், கதாநாயகியைப் பார்த்த மூன்றாவது காட்சியில் டூயட், அதிரடி ஆக்ஷன், வில்லனின் அடியாட்களை ஸ்கெட்ச் போட்டுக் கொல்லும் கதாநாயகனின் ஹீரோயிஸம், கதாநாயகனைத் தேடும் வில்லன் என முழுக்க முழுக்க இன்றைய காலகட்டத்தின் சினிமாவாகவே செல்கிறது முதற்பாதி. அயர்ச்சியான முதற்பாதியை முடிந்தளவிற்கு தன் வழக்கமான மேனரிசத்தால் காப்பாற்ற படாதப்பாடுபடுகிறார் ராகவா லாரன்ஸ்.
கதாநாயகனின் பின்கதை, வில்லனின் பின்கதை, இருவருக்கும் இடையிலான தொடர்பின் பின்கதை, கதாநாயகன் வில்லனை நெருங்கும் படலம் என இரண்டாம் பாதி சற்றே வேகமாகப் பயணிக்கிறது. அந்த பாணியிலேயே படத்தின் முழு கதையும் சொல்லி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
ஆனால், எல்லாம் எளிதில் யூகிக்கும்படியான காட்சிகள்! வில்லன் பூமி எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என்ற காரணத்தில் கொஞ்சம் புதுமை இருக்கிறது,
படத்தில் உள்ள மொத்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மட்டுமல்ல, அக்கதாபாத்திரங்களின் முடிவுகளுமே பார்த்துப் பழகிய திருப்பங்களாகவே உள்ளன. அப்பா – மகள் சென்டிமென்ட்டிற்கு நிதானமான, அழுத்தமான காட்சிகள் இல்லாததால், அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.
எளிதில் யூகிக்கும்படியான திருப்பங்கள், லாஜிக் மீறல்கள் எனப் போய்க்கொண்டிருக்கும் திரைக்கதையில், ராகவா லாரன்ஸின் துக்கத்தையும், பதற்றத்தையும் கடத்தும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் ஆறுதல் தருகின்றன.
மொத்தத்தில் இந்த ருத்ரன் கவனிக்கப்பட வேண்டியவர்