பெண்கள் தினம் தினம் பாலியல் தொல்லை மற்றும் பாதிக்கப்படுகிறார்கள்.
வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்து சட்ட ரீதியான நடவடி இலக்கை எடுத்தாலும், அந்த குற்றவாளிகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைக்கு ஆட்டோ ஓட்டுநரான நாயகன் விமல் தான் காரணம் என்று போலீஸ் அவரை கைது செய்கிறது. ஆனால், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் விமலை விடுதலை செய்கிறது.
அந்த காட்சிகள் நம்பகத்தன்மையற்றது
அதன் பிறகும் இதுபோன்ற கொலைகள் தொடர்ந்து அரங்கேற, குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கும் அந்த நபர் யார்? அந்த கொலைகளுக்கும் விமலுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தான் ‘குலசாமி’ படத்தின் மீதிக்கதை.
விமல், முதல் முறையாக ஆக்ஷன் படத்தில் நடித்திருக்கிறார். நடிப்பை பொருத்தவரை தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை விமல் குறையில்லாமல் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப், கதையோடு பயணிக்கும் கதாபாத்திரம் தன் பங்குக்கு நிறைவாகவே செய்துள்ளார்.
விமலின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனா, கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் வினோதினி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், வில்லனாக நடித்திருக்கும் சூர்யா என படத்தில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிசங்கர் கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து உள்ளார்
வி.எம்.மஹாலிங்கத்தின் இசையமைப்பில் கேட்கும் ரகமாக இருந்தாலும் பழைய ரகமாகவே இருக்கிறது. பின்னணி இசை என்ற பெயரில் அதிகபடியான சத்தம் கேட்கிறதே தவிர அவை காட்சிகளுக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.
நாயகனை மையப்படுத்திய ஒரு ஆக்ஷன் படத்தை, நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா, கதையின் முக்கிய சஸ்பென்ஸை படத்தின் துவக்கத்திலேயே ரசிகர்கள் யூகிக்கும்படி பணியாற்றியிருக்கிறார்.அது ஏமாற்றம்
நடிக விஜய் சேதுபதி தான் வசனம் எழுதியிருக்கிறார்
நன்றாக இருக்கிறது
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்குவதை விட, கொடூரமான மரண தண்டனை தான் சரியானது, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ’குட்டி புலி’ சரவணசக்தி, அதை மக்கள் ரசிக்கும் ஆக்ஷன் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
பாராட்டுக்கள்
தமிழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சரவணசக்தி, அதை சரியான முறையில் படமாக்கியிருக்கிறார் குறிப்பாக ஒரு ஆக்ஷன் படத்தை அதுவும் சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்ஷன் படத்தை சிறப்பாக வழங்கும் வித்தை தெரிந்தவர்
உண்மை சம்பவங்களை மையப்படுத்தி திரைக்கதை அமைப்பதில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் சரவணசக்தி படத்தின் மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார்என்பது புரிகிறது
‘குலசாமி’-யை ரசிகர்கள் கொண்டாடிணார்களாஇல்லையா
ரசிகர்கள் முடிவே நம் முடிவு.
மொத்தத்தில், ‘குலசாமி’ குற்றவாளிகளை மட்டும் கொல்ல வில்லை.