கன்யாகுமரியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த சிறார் திரைப்படங்களில் ஒன்று. இதை இயக்கிய சாது பர்லிங்டனுக்கு இது தான் அறிமுகத் திரைப்படம்.
இவர் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் சர்வம் தாள மையம் போன்ற படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்
இவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட தன் மாவட்ட மக்களுக்காக பணம் செலவு செய்து தன் மண்ணின் வட்டார வழக்கிலேயே பேசி படம் எடுத்துள்ளார்.

திரைப்படத்தின் மையக்கரு கன்யாகுமரி மாவட்டத்தின் பிரத்யேகப் பேச்சு
படம் முழுக்க எல்லோரையும் அந்த மொழியிலேயே பேச வைத்திருப்பது சிறப்பு
வழக்குத் தமிழின் சிறப்பையும் அந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சிறப்பையும் ஒருங்கே முன் வைக்கிறது.
சரி படத்தின் கதை என்ன
90 களில் வாழ்ந்த சாம் மற்றும் ராஜேஷ் எனும் இரண்டு சிறுவர்களுக்கிடையேயான மனதைத் தொடும் நட்பும் இந்தப் படத்தில் பிரதான இடம் வகிக்கிறது.
அஜிதன் விஷ்ணு இந்த இரண்டு குழந்தைகளையும் பல நாட்களாக தேடி நடனமாடும் பள்ளியில் கண்டுபிடித்துக்கூட்டி கொண்டு வந்திருக்கிறார் இவர்கள் நடிப்பு
மட்டுமல்ல
எல்லோரும் நடிப்பும் இயல்பாகவே இருக்கிறது
வட்டார பேச்சு வழக்குத் திரைப்படமான இதில் கன்யாகுமரி வட்டார தமிழுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதன் தொன்மை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
கேமரா கோணம் நன்றாக இருக்கிறது
அலேக்ஷா 65 யில் படம் பிடித்து உள்ளார்
படத்திற்கான தொடக்க வேலைகள் கோவிட் பாண்டிமிக் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாம்.

. பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் சிறுவன் அஜிதன்(சாமுவேல்) கன்யாகுமரி வட்டாரத் தமிழைக் கற்றுக் கொண்டு சிறப்பான நடிப்பைத் தரவேண்டி காரைக்குடியிலிருந்து வாரம் ஒருமுறை கன்யாகுமரிக்கு வந்து செல்ல வேண்டியதாயிருந்ததை மறக்க முடியாது என்கிறார் இயக்குநர் சாது.
இந்த விஷயத்தில் சிறுவர்களின் பெற்றோர்களின் ஒத்துழைப்பு படப்பிடிப்பை முடிக்க மிகுந்த உதவியாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
சிறுவன் சாமுவேல் திரைப்படம், பெய்ஜிங் சர்வதேச சிறார் திரைப்பட விழாவில் ஸ்லோவாகியா, ஜெர்மனி, சிலி, ஈரான், பிரேசில் மற்றும் லிதானியா நாட்டு சிறார் திரைப்படங்களுக்கு போட்டியாக அனுப்பியும் விருது கிடைக்க வில்லை என்கிறார் இயக்குனர்
கன்னியாகுமரி தக்கலையைச் சேர்ந்த இயக்குனர் துணிச்சலாக வரவை பற்றி கவலைப்படாமல் படம் எடுத்திருக்கிறார் எந்த அளவுக்கு மக்களிடம் போய் சேரும் என்பது காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
முயற்சி தயாரிப்பாளரும் இயக்குனருமான சாது அவர்களை பாராட்டியாக வேண்டும்
கிளைமாக்ஸ்
காட்சியில் சிறுவன்
சாமுவேல் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு மனம் வருந்தி அழும் காட்சி மனதை தொடும்
மொத்தத்தில் இந்த சாமுவேல் சாதாரண மானவன் அல்ல
.
படம் ஆரம்பித்த முதல் காட்சியில் இருந்து கடைசி நிமிடம் வரை சீட்டை விட்டு எழுந்திருக்க விடவில்லை படம். கன்னியாகுமரி மாவட்டத்துக்கே சென்று அங்குள்ள சிறுவர்களுடன் சிறுவர்களாக மாறி அவர்களுடன் சில காலம் வாழ்ந்து விட்டு வந்த உணர்வு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஷாமிற்கு ஒரு நல்ல கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும் என்பதுதான் லட்சியம். இதற்காக சிறுக சிறுக பணம் சேர்க்கிறான். சின்னதாக திருடுகிறான். கிரிகெட் வீரர்கள் உருவம் பொறித்த 100 அட்டைகள் கொடுத்தால் பேட் கிடைக்கும் என்கிற தகவலை நம்பி அந்த அட்டைகளை சேகரிக்கிறான்.
அவனுக்கு உதவுகிறான் ராஜேஷ் என்கிற அவனது நண்பன். இந்த போராட்டத்துக்கு இடையில் ஷாம் செய்த ஒரு தவறு ராஜேஷ் தலையில் விழ… அவன் வாழ்க்கை திசை திரு ம்புகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இந்த குட்டி கதையின் மூலம் கன்னியாகுமரி மாவட்ட ஏழை மக்களின் வாழ்வில், அவர்களின் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு, கிரிக்கெட் என்கிற கனவு எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது என்கிற உண்மை, சிறுவர்களுக்கு இடையிலான ஆழமான நட்பு என எல்லாவற்றையும் பேசிச் செல்கிறது படம்.
பட்ஜெட் காரணமாக அமைந்துவிட்ட சில தொழில்நுட்ப குறைபாடுகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’, ‘காக்கா முட்டை’ படங்களின் வரிசையில் வந்து நிற்கும் படம்.
இயக்குனர் சாது ஃபொர்லிங்டனுக்கும், ஷாமாக நடித்த அஜிதன் தவசிமுத்துவுக்கும், ராஜேஷாக நடித்த கே.ஜி.விஷ்ணுவுக்கும் வாழ்த்துக்கள்.