இராவண கோட்டம் விமர்சனம்

ஜாதி ஒழிப்பா..ஜாதி தூண்டலா...

ராமநாதபுரம் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன் -இந்த வசனத்தை பெரிய அரசியல்வாதிங்க ,அதிகாரிங்க ,சின்ன அதிகாரிங்கள பார்த்து பேசறத நேர்லயும் ,சினிமாவுலயும் பார்த்திருக்கிறோம் ,
ஆனால் அங்கே வாழும் மக்களின் பற்றி யோசித்து இருக்கோமா

ராமநாதபுரம் தண்ணி இல்லத காடு இல்ல ,கோபிச்செட்டி பாளையம் மாதிரி பசுமையா குளுமையா திரும்பன பக்கமெல்லாம் தண்ணி இருந்தது ,முப்போகம் வெளஞ்ச பூமியா தான் இருந்தது
அது ஒரு காலம்

இன்று
.இப்படி வறண்டு போனதுக்கு என்ன காரணமுன்னு தெரியுமான்னு கேட்டு படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமார் ஆரம்பிக்கும் போது தெற்கு பகுதியில் இருந்து வந்த இன்னொரு அசுரன் ,கர்ணன்,மேற்கு தொடர்ச்சி மலை மாதியான படத்தை பார்க்க போறோமுன்னு
நிமிர்ந்து உட்கார்ந்து
.
சரி கதை என்னானு பாப்போம்னுபார்த்தா

சீமை கருவேலமரம் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுத்துகிட்டதால மாவட்டம் முழுவதும் தண்ணி பிரச்சனை எழுபது வருசமா இருக்கு . மேலத்தெரு ஜமீன் பிரபுவும் ,கீழத்தெரு பெரியவர் இளவரசும் ஒற்றுமையா இருந்து மக்களோடு இணைந்து சீமை கருவேலமரத்தை புடுங்கி சரிசெய்ய முயற்சிக்கறாங்க.இதை பிடிக்காத எம் எல் ஏ அருளதாஸ் ,மினிஸ்டர் தேனப்பன் ,கார்பரேட் முதலாளிகள் சேர்ந்து பிரபுவையும் ,இளவரசையும் கொல்றாங்க .அண்ணன் தம்பிகள் போல இருந்த சாந்தனு ,கீழத்தெரு சஞ்சய்சரவணன் இருவரும் இரண்டு ஊரும் பிரிந்து அடிச்சிக்கிறாங்க ,கொல்லப்படறாங்க கடைசியில் விடிவு கிடைக்காம போகுது .
இந்த கதையில் சந்தனு ,ஆனந்தி காதல், இந்த காதலுக்குள் நுழைந்த சந்தனு நண்பன் சஞ்சய் சரவணன் என தொடர்பில்லாத அதிக காதல் காட்சிகள் படத்தை தொய்வை தந்து ரசிகர்களை மைய கதையில் இருந்து விலக வைக்கிறது .இந்த மாதிரியான கதையில் நடிப்பில் வாழ வேண்டிய நடிகர்கள் ,வெறும் வசனத்தை மட்டுமே ஒப்பிக்கும் ஒண்ணாம் வகுப்பு பிள்ளைகள் போல ஒப்பித்து விட்டு செல்கிறார்கள் .யாருடைய நடிப்பும் ,டெக்னீஷியன்களின் படைப்பும் மனதில் பதியாமலே மறைகிறது ,மனதுக்குள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றிடமாகிறது ..
நல்ல விஷயம் இல்லையா என்று கேட்பது எங்க மைன்ட் வாய்ஸ்ல கேட்குது

இராவண கோட்டம் மிகச் சிறந்த.. சாதி ஒற்றுமையை பேசும் படம் …….

சாந்தனு பாக்கியராஜ் மிகச் சிறப்பாக செங்குட்டுவன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் , மனமார்ந்த வாழ்த்துக்கள் சாந்தனு பாக்யராஜ் ப்ரோ

முதுகுளத்தூர் இராமநாதபுரம் மக்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்

அவர்களை பிரிக்க நினைத்த தீய சக்தி எதுவென வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் … இயக்குனர்
விக்ரம் சுகுமார் சார்

போஸ் பிரபு சார்
(தேவர் ஐயா )
கதாபாத்திரமும்
சித்திரை வேல் (இம்மானுவேல் ஐயா) இளவரசு அண்ணன் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்ட விதம் அருமை

இரண்டு சாதியையும் பிரிக்க நினைத்து இறுதியில் மாண்டு போகும்
மாரி கதாபாத்திரம் அருமை

அவரோடு வரும் சத்யா கதாபாத்திரமும் அருமை சிறப்பாக செய்து இருக்கிறார்

ஒளிப்பதிவு அருமை
இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது

நண்பராக நடித்து இருக்கும் சஞ்சய் மதி கதாபாத்திரத்திரம் அருமை …..

எந்த ஜாதியையும் காயப்படுத்தாமல் இந்த மாதிரி ஒற்றுமையை தூண்டும் படங்கள்
வர வேண்டும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் இயக்குனர்
விக்ரம் சுகுமார்

நிறைகள்

ஒரு ஊர் இந்த மாதிரியான மக்கள் ஒற்றுமையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தாலே நன்றாக இருக்கிறது

படத்தின் வெள்ளந்தி யான மனிதர்களை
பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது

குறைகள்

மேல் ஜாதி கீழ் ஜாதி எல்லாம் கிராமத்தில் பங்காளி என்றும் வாடா போடா என்றும் பேசிக் கொள்வதெல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்காது

பிரபு கார் ஆக்சென்டில் இருந்தபோக
மகன் சாந்தனு அப்பா எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்காமல் கபடி விளையாடிக் கொண்டிருப்பது நியாயமா

காமெடி நடிகை தீபாவுக்கும் சாந்தனுவுக்கு
என்ன உறவு
என்பதை விளக்கி இருக்க வேண்டும்

மொத்தத்தில் ராவண கூட்டம் உயர்ந்து நிற்கிறது