இல்லையென்றால் கூஜா தூக்க வேண்டியதுதான் அந்த காலத்திலேயே இது விதிவிலக்கல்ல டி ஆர் மகாலிங்கம் சொந்த படம் எடுத்து மாளிகை போன்ற வீட்டை விட்டு கார்களை விட்டு அமைதி பெற்றதும் பத்திரிகைகளில் வெளிவந்தது
நகைச்சுவை நடிப்பில் நடனத்தில் பாடுவதில் கொடி ஏற்றி பிறந்த சந்திரபாபு மாடி வீட்டு ஏழை என்று படம் தயாரித்து ஏழையாகி மாறிப் போனார் படுக்கும் பெட்ரூமுக்கு கார் போவது போல கட்டி வைத்திருந்தார். கால் சீட்டு விஷயத்தில் எம்ஜிஆருக்கும் சந்திரபாபுவிற்கு ஏற்பட்ட மோதலால் படமே நின்று போனது இது ஊர் அறிந்த கதை.
சாவித்திரி பிராப்தம் என்ற படத்தை 5 லட்ச ரூபாயில் தயாரித்தார் அப்போது படம் பிளாப்பாகவே அவரை நம்பி படத்தை ரிலீஸ் செய்தவர்கள் அவரை நெருக்கவே வீட்டை விட்டு காரை விற்று செட்டில் செய்தார் அவர் செய்த தவறு அவருடைய உதவியாளர்கள் மேனேஜர்கள் பிளாங்க் செக்கில் கையொப்பம் வாங்கிக்கொண்டு அவரை ஏமாற்றி விட்டார்கள் என்றும் அப்பொழுது பேசப்பட்டது. நடிகர் ஜெமினி கணேசன் நான் அவன் இல்லை என்ற படத்தை தயாரித்து இருந்தார் அந்த படம் மற்ற பிளாப் ஆகவே ரசிகர்களை செம்மறி ஆடுகள் என்று அவர் வன்மையாக கண்டித்தது அந்த காலத்தில் பத்திரிகை செய்தியாக வந்தது