சித்தார்த் நடிப்பில் வெளிவந்த டக்கர் கோடைக்கால கும்மாளம்தான்படம் எப்படி என்பதை கீழே பார்க்கலாம் வாங்க
கதைக்களம்
வேலை தேடல் உடன் பயணிக்கும் சித்தார்த்
பணம்தான் வாழ்க்கையில் முக்கியம், பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நம்பும் நாயகன் (சித்தார்த்), பணத்தினால் தான் வாழ்வில் எல்லா பிரச்சனையும் வருகிறது என நம்பும் நாயகியும் (திவ்யான்ஷா) ஒரு கட்டத்தில் ஒன்றாக சேர்ந்து பயணிக்க நேர்கிறது. இந்த பயணம் அவர்களுடைய வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது, என்பதே ’டக்கர்’ படத்தின் கதை.இதன் இடையே நாயகி யை கடத்தும் வில்லன் ஒருபுறம் நாயகியை திருமணம் செய்ய நினைக்கும் வில்லன் ஒருபுறம் கார் ஆக்சிடெண்ட் ஆனதால் கார் ஓனரிடம் மாட்டிக் கொண்டு ஏழு வருடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய ஒப்பந்தம் போட்ட சித்தார்த்அப்படி அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியா விட்டால் சித்தார்த் தங்கையை கூட்டிக் கொண்டு போய் விடுவேன் என்று பயமுறுத்தும் வில்லன் ஒரு புறம் ஏழு முறை தற்கொலை செய்ய முடிவு எடுக்கிறார் அதன் பிறகு நாயகி யைசந்திக்கிறார் இவர்களுக்கு இடையே மலரும் காதல் எப்படி பயணிக்கறதுஎன்பது டக்கர் படத்தின் கதை
நடிப்பு
சித்தார்த் தன் வழக்கமான Suttle நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சாக்லேட் பாயாகவே நாம் பார்த்த பழகிய சித்தார்த்தை, ஆக்சன் ஹீரோவாக பார்ப்பதற்கு சற்று ரசிக்க வைக்கிறது ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நாயகியான திவ்யான்ஷாவிற்கு நடிப்பை விட கிளாமர் காட்சிகள் சிறப்பாக ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. அவர் பெட்ரூம் காட்சிகளில் அறையும் குறையுமாக படுத்துக் கிடக்கும் காட்சிகளும் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் மது அருந்தும் கும்மாளமும் சித்தார்த்துடன் படுக்கையறை காட்சியில் சவால் விடும் காட்சிகளும் கொண்டாட்டம் தான் அழகாகவும் இருக்கிறார் ஸ்டைலாக சிரிக்கிறார் ஒரு கோடீஸ்வரி பெண்ணாக அருமையாக நடித்திருக்கிறார் அவர் புன்னகை ஒன்று போதும் இளசுகளை கிளீன் போல்ட் ஆக்கிவிடும்யோகி பாபு, வரும் காட்சிகள் செம கலகலப்பு வில்லன் டென்ஷனாக இருக்க இவர் பேஸ்புக் பார்த்து நக்கல் அடிப்பது கலாய்ப்பது எல்லாமே செம காமெடிமுனீஷ்காந்த்வரும் காமெடி காட்சிகள் ஓரளவுக்கு பலம்
இயக்கம் மற்றும் இசை
முதல் பாதியின் திரைக்கதை ஓரளவிற்கு விறுவிறுப்பாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் திரைக்கதை, படத்திற்கு தூக்கி நிறுத்துகிறார்கள் இயக்குனர் நிவாஸ் பிரசன்னாவின் இசை படத்தை ஓரளவிற்கு காப்பாற்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய பின்னணி இசை, படத்தின் வேகத்தை கூட்டியிருக்கிறது. பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகமாக அமைந்திருப்பது சிறப்பு.
படம் எப்படி ?
படத்தின் தொடக்கத்தில் இருக்கும் விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் அடுத்தடுத்து விறுவிறுப்பாக முடிகிறது. ஒரு சில ஆக்சன் காட்சிகள் தெறிக்கிறது. குறிப்பாக கார் சேசிங் காட்சிகள் வேற லெவல். ஹீரோயின் கிளாமர் காட்சிகள் இளைஞர்களை தியேட்டருக்கு வரவழைக்கும்
மொத்தத்தில் டக்கர் கதையில் சற்று ரொமான்ஸ்,ஆக்சன் காமெடி ஆகியவற்றை கலந்து நம்மை Entertain செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாராட்டுக்கள்
டக்கர் இளைஞர்கள் கொண்டாடுவார்கள் ஏழையாக இருந்தாலும் முயற்சி செய்தால் பணக்காரர் ஆகலாம் என்ற தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது சித்தார்த்தின் லுக்கும் நாயகியின் கிக்கும் படத்திற்கு ஊக்கம் அளிக்கிறது கோடை காலத்துக்கு ஏற்ற குழுமையான சுற்றுலா போல் இளசுகள் குவிவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது டக்கர் டாப் டக்கர் ஆக வர கிளாசிக்சினிமா வாழ்த்துகிறது ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் படம் வேண்டும் என்றால் ஜாலியாக டக்கரை பார்த்து ரசிக்கலாம். சித்தார்த் க்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்தது டக்கர்
“