லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘பானிபூரி’. விமர்சனம் பார்க்கலாம் வாங்க
பாலாஜி வேணுகோபால் இந்த ‘பானிபூரி’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
நண்பன், தாண்டவம், மதராசபட்டினம், வேலைக்காரன், லிஃப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலாஜி வேணுகோபால். ஒரு அருமையான இதயத்துக்கு நெருக்கமான இன்றைய காதலர்கள் வாக்குவாதத்தால் பிரியும் கணவன் மனைவிகள் இவர்களெல்லாம் ஒருங்கிணைத்து நல்ல தரமான பானி பூரி ருசி மாறாமல் கொடுத்திருக்கிறார்
இந்தத்தொடரில் லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர் ஆகியோர் நடித்துள்ளனர். அனைவரின் நடிப்பும் எதார்த்தமாகவும் இயல்பாகவும் ரசிக்கும்படியும் இருந்தது பாராட்டுக்குரியது லிங்கா நாயகனாக ஒரு நல்ல காதலனாக. நடித்துள்ளார் இன்றைய ஐடியில் வேலை செய்யும் பெண்களுக்கு வீட்டு வேலை செய்ய நேரமில்லை என்று சொல்லிக்கொண்டுஇருக்கும்பெண்களை அவர் அனுசரித்துப் போவதும் மாமனாரின் முன்னாள் மனைவியை சேர்த்து வைப்பதும் ஒவ்வொரு எபிசோடிலும் லிங்காவின் கதாபாத்திரம் உயர்ந்து கொண்டே போகிறது அதேபோல காதலியாக நடித்திருக்கும் சௌம்பிகா நடிப்பு மிக அருமை கோபக்கார பெண்ணாக தன்னுடைய மேலாளர் இடம் திட்டு வாங்கும் பொழுதும் அப்பாவிடம் எதிர்த்து பேசும் பொழுதும் லிங்காவிடம் கோபப்படுவதும் தோழி தர்ஷனாவிடம் அறிவுரை கூறுவதும் என அற்புதமான நடிப்பைவழங்கி இருக்கிறார் அவர் வரும் காட்சிகளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது அழகான முகம் ஐடி பெண்ணுக்கேற்ற அற்புதமான உருவம் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் அடுத்து இளங்கோ குமரவேல் இவர் நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார் 17 வருடங்களுக்கு முன்னால் தன்னை விட்டு பிரிந்து போன மனைவியின் ஏக்கம் ஒருபுறம் தன் மகளை இயல்பாக பேசி சமாளிக்கும் ஒரு தந்தையாக ஒரு புறம் மகளின் தோழியாக வரும் தர்ஷனாவுக்கு அறிவுரை கூறி கனவருடன் சேர்த்து வைப்பது ஒரு புறம் தனக்கு மருமகனாக வரும் லிங்காவிடம் எதார்த்தமாக பேசி நல்ல நைஸ் மேன் என்று அவருக்கு சர்டிபிகேட் கொடுத்து அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க அவர் எடுக்கும் முயற்சி இந்த வெப் சீரிஸில் உயர்ந்து நிற்கிறார் இளங்கோ குமரவேல் லிங்கா அண்ணியாக வரும் கனிகா அவர் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அன்பு காட்டினால் முயற்சி செய்தால் எல்லோரையும் கவரலாம் என்ற அவரின்நடிப்பு நன்றாக இருக்கிறது திவ்யா என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். லிங்காவை தேடி வினோத் வீட்டுக்கு வரும் அவர் கடைசியில் தன் தங்கையின் கணவனாக வினோத் வருவது கண்டு ஆனந்தம் அடைகிறார் அவரின் கணவர் ஐபிஎஸ் ஆக வருவதும் அந்த கட்சியும் ரசிக்க வைக்கிறது லிங்காவும் அவர் அண்ணன் ஐபிஎஸ் அதிகாரியும் பாசமாக இருக்கும் காட்சிகள் நன்றாக இருக்கிறது துரு என்ற கதாபாத்திரத்தில் வரும் ஐடி இளைஞர் சரியான வில்லத்தனத்தை காட்டுகிறார் தர்ஷனாவாக நாயகியின்தோழியின் நடிப்பு நன்றாக இருக்கிறது ஆரம்பத்தில் காமெடியாக செல்லும் இந்த வெப் தொடர் பிறகு ரிலேஷன்ஷிப்பில் உள்ளே புகுந்து அப்பார்ட்மெண்டுக்குள் போன பிறகு ஜெட் வேகத்தில் பறக்கிறது ரோபோ ஜினோ காட்சிகள் குழந்தை களை கவரும் அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரி கோபால் நடிப்பு அலப்பறை அந்த மலையாள மொழி பேசும் அவர் இந்த கதாபாத்தில் இரண்டு நிமிடம் கேட்பது காமெடி எல்லாம் ஒன்று சேர்ந்து கலகலப்பாக கூட்டிச் செல்கிறது ஆணும் பெண்ணும் ஒரு ரூமுக்குள் இருந்தால் கூத்தடிப்பார்கள் என்றெல்லாம் இல்லாமல் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் காதலன் காதலி என்றால் கச்சிதமாக நடந்து கொள்வார்கள் என்பதை இந்த தொடர் நிரூபிக்கிறது இந்த தொடரின் முக்கிய நோக்கமே கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் என்று வந்துவிட்டால் பேசி தீர்த்துக் கொள்ளலாம் காதலன் காதலிகள் பிரேக் என்று வந்துவிட்டால் பேசி தீர்த்துக் கொள்ளலாம் பேசினால் முடியாது எதுவும் இல்லை என்ற மையத்தை வைத்து இருக்கிறார்கள் ஒரு அருமையான தொடர் பார்த்து ரசிக்க வேண்டிய தொடர் 8 எபிசோடு சென்றதே தெரியவில்லை அவ்வளவு நமது இதயத்துக்கு நெருக்கமாகவும் வந்து போனது இந்த தொடர் இந்த தொடரில் இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு அற்புதமாக அமைந்திருக்கிறது வினோத நடிப்பு நன்றாக இருக்கிறது லிங்காவை காட்டிக் கொடுக்க முடியாமல் அவர் தவிர்க்கும் தவிப்பு நன்றாக இருக்கிறது மொத்தத்தில 15 நாளில் படப்பிடிப்பைநடத்தி முடித்த இந்த பட குழு பாராட்ட வேண்டியது நிச்சயம் நீங்கள் காணலாம் நிச்சயம் இது உங்களை ரசிக்க வைக்கும்
நவீன் சுந்தர் இசையும் பிரவீன் பாலு ஒளிப்பதிவும் மெருகேற்றும்
ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள, 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) என்ற தளத்தில் வெளியாகிறது.
ஒரு குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீடு காரணமாக ஒரு ஜோடி தங்கள் உறவில் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் இந்த ‘பானிபூரி’ பேசுகிறது. மொத்தத்தில் பாணி பூரி சுவை அதிகமாக இருக்கும்