ஆஸ்திரேலியா-ரிட்டர்ன் ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி அஜித்துடன் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்த காதம்பரியுடன் இணைந்து நடிக்கும் ‘நாயாடி’ இப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
*கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லர் ‘நாயாடி
தமிழ்நாட்டை சேர்ந்தவர் இவர் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் ஆதர்ஷ் மதிகாந்தம், ‘நாயாடி’ என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனமான நாயாடிகளின் (வேட்டைக்காரர்கள் என்று பொருள்) கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லரான படம் . பிரபல யூடியூபரான ஃபேபி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திகில் திரைப்படங்களுக்கு என உள்ள வடிவத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்தும் அவர்கள் வரலாறு குறித்தும் இப்படம் பேசுகிறது
பல்லாண்டுகளாக துயரங்களை அனுபவித்து வரும் நாயாடிகள், கடந்த காலத்தில் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பில்லி சூனியம் மற்றும் வூடு எனப்படும் மாந்திரீகங்களை கற்று அதை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும், இப்படம் விளக்கமாக சொல்கிறது. படம் ஆரம்பித்து முடியும் வரை செம விறுவிறுப்பு ஆனால் இவர்களது வரலாறு இதுவரை திரையில் சொல்லப்படவில்லை. ‘நாயாடி’ திரைப்படம் இதை பூர்த்தி செய்து ள்ளதஉ இன்று கூட இந்த இனத்தின் மக்கள் வாழ்கின்றனர் மற்றும் இப்படத்தில்
மாளவிகா மனோஜ், அர்விந்த்சாமி, நிவாஸ் எஸ் சரவணன் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அருண் ‘நாயாடி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இசை படத்திற்கு பலம் திகிலான காட்சிகள் எல்லாம் இசை பயமுறுத்துகிறது ஒளிப்பதிவை மோசஸ் டேனியல் செய்துள்ளார். வீட்டுக்குள் அமானுஷ்யத் தை காட்டுவதாகட்டும் காட்டுக்குள் அந்த குழு சிக்கிக்கொள்ளும் போதும் கேமரா விளையாடிஉள்ளது படத்தொகுப்பை சி எம் இளங்கோவனும் செய்துள்ளனர். கச்சிதமாக இருக்கிறது புரூஸ் லீ ராஜேஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சண்டைகள் ஒவ்வொன்றும் விறு விறுப்பைப்பைக் கூட்டுகிறது
ஆத்விக் விஷுவல் மீடியா, வாரியர் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா மற்றும் ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ் சார்பில் ஆதர்ஷ் மணிகாந்தம் தயாரித்து, இயக்கி மற்றும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார் . அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது கிளைமாக்ஸ் கட்சியில் நாயாடிகளகன் வஞ்ச சூழ்ச்சியால் சிக்கிக் கொள்ளும் பொழுதும் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் படத்தில் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது அதை சொன்னால் படத்தின் சுவராஸ்யம் குறைந்துவிடும் எனவே படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் படத்தின் ஆரம்பத்தில் நையாடி களின் வாழ்க்கை எப்படி ஆரம்பமானது அவர்களுக்கு முடிவு எப்படி ஏற்பட்டது என்பதை சொல்லும் காட்சி சிறப்பாக இருந்தது. காட்டுக்குள் ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருவதும் தலை வேறாக முண்டம் வேராக ஒவ்வொருவராக சாகடிக்கும் அந்த காட்சிகள் திகில் ரகம் சஸ்பெண்ட் திகில் படம் பார்ப்பவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆவலை தூண்டும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கு உள்ளார் இயக்குனர் அவருக்கு நமது பாராட்டுக்கள்