விக்ரம் பிரபுவின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கிறது பாயும் ஒளி நீ எனக்கு. இப்படத்தை கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். மேலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தனஜெயன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பாயும் ஒளி நீ எனக்கு படம் பக்கா கமர்சியல் படமாக வெளியாகி உள்ளது. அதாவது அதிகப்படியான வெளிச்சத்தில் மட்டும் தான் கண் தெரியும் என்றும் குறைந்த ஒளியில் குருட்டுத் தன்மை என்பதை மையமாக வைத்து இப்படம் எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை நன்றாக உள் படத்தில் முக்கிய பிளஸ் ஆக ஒளிப்பதிவு உள்ளது. பாயும் ஒளி நீ எனக்கு படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். வாணி போஜன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஈடு கொடுத்துள்ளார்.
அரவிந்த் என்கிற காமன்மேனாக வருகிறார் விக்ரம் பிரபு. பிறவியி லிருந்தே இயல்பான வெளிச்சத்தில் அவருக்குக் கண்கள் தெரியாது. இயல்புக்கு மாறான அதிக வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவரது கரு விழிகள் விரிந்து வேலை செய்யும். அப்படியொரு சிக்கலான பிரச்சினையைக் கொண்டவர் நாயகன். அவரது கடந்த கால வாழ்க்கையின் தொடர்ச்சி நிகழ்காலத்துடன் மோதுகிறது. அவருடைய எதிரிகள், அவரை மிச்சமிருக்கும் எச்சம்போல் ஏளனமாக நினைத்து அவரை நெருங்குகிறார்கள். அப்போது அவருக்கு ஒளியைப் பாய்ச்சுவது யார், அதில் நாயகன் தனது வலிமையை உணர்ந்து என்ன செய்தார் என்பதுதான் கதை.
நாயகனுடைய பிரச்சினை இல்லாமல் வேறொரு சமூகப் பிரச்சினையும் படத்தில் உண்டு. அதில் நாயகன் எப்படிச் சம்பந்தப்படுகிறார் என்பது திரைக்கதையின் முக்கிய அம்சமாக இருக்கு அரவிந்த் ஒரு அபூர்வக் கதாபாத்திரமாக இருக்கிறது
.வாணி போஜன் கதாநாயகி. பாடலுக்கு முன்பும் பின்பும் வந்து போகிற கதாநாயகி அல்ல; கதாநாய கனுடன் கடைசிவரை வருகிறார்.
ஆண்களின் உலகில் அவர்களுக்குப் பின்புலமாக, சமமான பலமாக எல்லாக் காலத்திலும் பெண்களே இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
கதாநாயகனுக்கு ‘பாயும் ஒளி’யாக இவர் எப்படி, எந்தச் சூழ்நிலையில் மாறுகிறார் என்பது கதையின் நகர்வில் ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு மாற்றும்.
வில்லனாக ‘புஷ்பா’ புகழ் தனஞ்ஜெயா நடித்திருக்கிறார். வில்லனுக்கென்று ஒரு வாழ்க்கைப் பயணம் இருக்கிறது. அது படத்தில் முழுமையாக இருக்கிறது
அவருடன் மோதி அரவிந்த் மீள முடியுமா என்கிற மன அழுத்தம் ரசிகர்களுக்கு உருவாகிறதே
வேல.ராமமூர்த்தி இதுவரை நடித்துள்ள கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்டு, தன் வயதில் பின்னோக்கிச் சென்று ஒரு கடலோடித் தலைவர் கதாபாத்திரம் செய்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத் திரமும் தனக்கு வரும் பிரச்சினையைத் தங்கள் வழியில் எப்படி ‘டீல்’ செய்கின்றன என்கிற அடிப்படையில் இதை கதாநாயகனின் கதையாக மட்டும் சொல்லாமல் கதாபாத்திரங்களின் கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்
பாயும் புலி நீ எனக்கு ஒரு தன்னம்பிக்கை மிகுந்த படம் பார்வையற்றவர்களை துச்சமாக நினைத்து அவரை சாய்த்து விடலாம் என்று நினைக்கும் எதிரிகள் கடைசியில் சாய்ந்து போகிறார்கள் பார்வையற்றவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை எட்டு சண்டை காட்சிகளுடன் பல செண்டிமெண்ட் காட்சிகளுடன் பலவித புதிய விதிகளுடன் இயக்குனர் இயக்கி இருக்கிறார் மொத்தத்தில் வெற்றி காய்ச்சல் பாயும் புலிக்கு
பாயும் ஒளியாய் உண்டு