ஜாதி தான் காதலை அழிக்கிறது என்பதை ஆனிதரமாக சொல்லி உள்ள படம் அழகிய கண்ணே

இயக்குனர் ஆர். விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படலம் “அழகிய கண்ணே”.
இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “அழகிய கண்ணே”. இப்படத்தில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

மேலும் சிங்கம்புலி, ராஜ்கபூர், காதல் சுகுமார், ஆன்டிருவ்ஸ், அமுதவானன் உள்ளிட்ட பலர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் தயாரிக்க என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் கதை என்ன திண்டுக்கல் மாவட்டம் சிறுமலர் கிராமத்தை சேர்ந்தவர் நாயகன் லியோ சிவகுமார் அதே ஊரைச் சேர்ந்தவர் சஞ்சிதா ஷெட்டி இவர் இவர் பிராமண வகுப்பு சார்ந்தவர் நாயகன் வேறு வகுப்பை சேர்ந்தவர் இருவரும் காதலித்தால் சமுதாயம் சம்மதமா இதுதான் படத்தின் ஒன்லைன்
[: நாயகன் லியோ சிவகுமார் இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார் முதல் படம் என்பது போல இல்லாமல் நன்றாக நடிப்பை காட்டியிருக்கிறார் உதவி இயக்குனராக மக்கள் விழிப்புணர்வு மன்றம் வைத்திருப்பதாக நல்ல தாய்க்கு மகனாக தங்கைக்கு அண்ணனாக நண்பர்களின் தோழனாக நன்றாகவே நடந்திருக்கிறார் இவருக்கு காதல் நன்றாக வருகிறது அதனால் சமயம் சண்டை காட்சிகள் சிறப்பாக போடுகிறார் எதிர்காலத்தில் நல்ல ஒரு நாயகனாக வர இவருக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது
நாயகி சஞ்சிதா ஷெட்டி இந்த படத்தில் தலையை வாரி முடித்துக் கொண்டு அசல் கிராமத்து பிராமண பெண்ணாக அச்சு அசலாக பொருந்தி போகிறார்.
அப்பாவிடம் காதலை சொல்லும் போதும் சித்தியிடம் எதுத்து பேசும் போதும் நாயகனிடம் ரொமான்ஸ் பண்ணும் போதும் எல்லா இடங்களிலும் இவர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனின் நிலை கண்டு எடுத்து அழுகின்ற அந்த காட்சி கண்ணீரில் நீரை கண்களில் நீரை வர வைத்து விடுகிறார் நாயகனின் தோழனாக அமுதவாணன் ஆட்டத்தில் பிண்ணி எடுத்திருக்கிறா இசை என் ஆர் ரகுநந்தன் நான்கு பாடல்களை மெலோடியாக போட்டு மனதை வருடியிருக்கிறார: ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது கலர் கரெக்ஷன் நன்றாக இருக்கிறது சண்டைக் காட்சிகளில் நாயகனுக்கு நன்றாக பயிற்சி கொடுத்து வெலுத்து வாங்கி இருக்கிறார் சண்டை பயிற்சியாளர் ராதிகாவின் நடனம் ரசிக்க வைக்கிறது மொத்தத்தில் இந்த அழகிய கண்ணே காதலுக்கு எதிரி ஜாதி தான் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறது காட்சியில் கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது ஒரு நல்ல படத்தை கொடுத்த இயக்குனர் விஜயகுமார் பாராட்டுக்குரியவர் கதையை எந்த இடத்திலும் விலகாமல் நேர்கோடாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனருக்கு இதுதான் முதல் படம் என்றாலும் முத்திரை பதித்துள்ளார் மொத்தத்தில் இந்த அழகிய கண்ணே ரசிக்கலாம் பார்க்கலாம்