வில் வித்தை விமர்சனம்

நடிகர் அருண் மைக்கேல் டேனியல் நடிப்பில் இயக்குநர் ஹரி உத்ரா இயக்கிய வில் வித்தை படம் எப்படி இருக்கு வில் வித்தை திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு உத்ரா புரொடக்ஷன்ஸ், ஐ கிரியேசன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிக்க இந்த படத்தில் அருண் மைக்கேல் டேனியல், ஆராதயா, குணா, வைஷ்ணவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அலிமிர்ஷாக் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிக்க வைக்கிறது மெலோடியாகவும் நன்றாக இருக்கிறது

இந்த படத்தின் நடிகர் நடிகைகள் அருண் மைக்கேல் ஆரத்யா கோபாலகிருஷ்ணன் வைஷ்ணவி நாயக் சிறப்பாக நடித்துள்ளனர். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

படத்தின் கதை. இன்று குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு பள்ளியில் நடக்கும் பாலியல் தொந்தரவு பஸ் டிரைவர் ஆசிரியர் வாட்ச்மேன் இப்படி எல்லா இடங்களிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண் மாடியில் இருந்து இறந்துவிட அந்த குழந்தையின் தந்தை அல்லது பக்கத்து வீட்டிலிருந்த ஒருவர் தன் குழந்தைகளுக்கும் அப்படி ஒரு பிரச்சனை வரும் என்று சைக்கோவாக மாறி அது பாதிக்கப்பட்ட குழந்தையை சீரழித்தவர்களை கொள்வதுதான் கதை இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கதைகள் நாயகன் இரட்டை வேடத்தில் மிரட்டி இருக்கிறார் நல்லவனாகவும் வில்லனாகவும் அந்நியன் பாணியில் ஒவ்வொருவரையும் மதம் செய்வது மிரள வைக்கிறது. யாருக்கோ எதுவோ நடக்கிறது நமக்கு என்ன என்று நினைப்பவர்கள் இந்த படம் பார்த்து திருந்துவார்கள் நியாயத்தை தட்டிக் கேட்பார்கள் நாயகி நன்றாக எடுத்து இருக்கிறார் அழகான முகபாவம் நாயகனின் குழந்தையை சுமந்து தாயாக முடியாமல் தத்தளிக்கும் அந்த காட்சி சிறப்பாக இருக்கிறது

நகரில் வரிசையாக கொலைகள் நடக்கிறது இதை கண்டுபிடிக்க போலீஸ் களம் இறங்குகிறது.பிறகு என்ன ஆனது எதற்காக கொலை நடந்தது கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடித்தார்களா?இல்லையா? என்பதே திரைக்கதை.

+Points

1.படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் சூப்பர் ஆக்ஷன் காட்சிகள். நடிப்பு நன்றாக இருக்கிறது. பாடல்கள் நன்றாக இருக்கிறது திரைக்கதை டிவிஸ்ட் அபாரம்

2.படத்தின் இன்டர்வெல் டுவிஸ்ட் அரைமணி நேரம் மிரட்டுகிறார் இயக்குனர்

3.நடித்தவர்கள் அனைவருமே நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார் கள்

4.திரைக்கதை நகர்வு சுவாரசியமாக இருக்கிறது. அதை கொண்டு சென்ற விதம் சிறப்பு

இன்றைய சமுதாயத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு திரைப்படம். பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம்.

சின்ன சின்ன பட்ஜெட்டில் தரமான படம்

வில் வித்தை ஒரு வெற்றி வித்தை