காடப்புறா கலைக்குழு விமர்சனம்

சக்தி சினி புரொடக்ஷன்ஸ் சார்பாக டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், ராஜா குருசாமி எழுத்து, பாடல் & இயக்கத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள படம் “காடப்புறா கலைக்குழு”.
எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

இந்த படத்தின் கதை online பார்க்கலாம்…

முனிஷ்காந்த் காடப்புறா கலைக்குழு என்னும் கிராமிய கலையான கரகாட்ட குழுவை நடத்தி வருகிறார்.

இவரது குழுவில் காளி வெங்கட், டெலிபோன் ராஜ், ஸ்வேதா ரமேஷ், அந்தகுடி இளையராஜா ஆகியோர் உள்ளனர். முனிஷ்காந்தின் தம்பி ஹரி கிருஷ்ணன் தன்னுடன் கலைக் கல்லூரியில் படிக்கும் பென்சில் மீசை பெருமாள் (சூப்பர் குட் சுப்ரமணி) தங்கை ஸ்வாதி முத்துவை காதலிக்கிறார்.

இந்த காதல் நிறைவேறியதா இந்த காதலர்களை முனீஸ்காந் கரையேற்றினாரா தன்னை நம்பியுள்ள கலைகளுக்கு கௌரவம் சேர்த்தாரா அவரை லட்சியமான இலவச நாட்டுப்புற கலைகளை சொல்லித் தருவதற்கு ஒரு இடம் வாங்கினாரா அந்த இடத்தில் இலவசமாக பயிற்சி தொடங்கினாரா 40 வயது ஆகியும் திருமணமாகாத அவருக்கு திருமணம் நடந்ததா பஞ்சாயத்து எலெக்ஷனில் மைம் கோபியை வீழ்த்தினர..?

காளி வெங்கட்டின் குழந்தை உயிருக்கு போராடும் போது அதற்கு என்ன உதவி செய்தார் என்பதை கலகலப்பாகவும் காமெடியாகவும் சொல்லியுள்ளது இந்த கலை குழு

இரக்க குணமும் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட முனிஷ்காந்த் அந்த ஊரில் உள்ள அனைவராலும் நேசிக்கப்படுகிறார். இந்நிலையில் மைம் கோபிக்கு எதிராக பஞ்சாயத்தில் நிற்கும் ஆறுமுகத்தை ஆதரிக்கிறார் முனிஷ்காந்த்.

இதனால் ஆத்திரம் அடைந்த மைம் கோபி முனிஸ் காந்த் மற்றும் அவரது தம்பி காதலை பிரிக்க முயற்ச்சிக்கிறார் காதலர்கள் கை கூடினார்களா? திருமணமாகாத முனிஷ்காந்த் வாழ்கை? என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

முனிஷ்காந்த் கதையின் நாயகனாக நடிப்பிலும் கரகாட்டகாரராக நடனத்திலும் அசத்தியுள்ளார்.

அசத்த முயற்சி செய்துள்ளார் காளி வெங்கட், ஶ்ரீலேகா ராஜேந்திரன், மைம் கோபி, சூப்பர் குட் சுப்ரமணி, ஹரி கிருஷ்ணன், ஸ்வேதா ரமேஷ், ஸ்வாதி முத்து, லீ கார்த்திக் ஆகியோர் தனது காதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல சிறப்பாக நடித்துள்ளனர்.

ஸ்ரீலேகா வரும் அந்த போர்ஷன் நன்றாக இருக்கிறது. முன்பின் தெரியாத வயதான பெண்மணி மீது முனீஸ்கான் கொள்ளும் பாசம் அதைக் கண்டு அவரது மருமகளே பொறாமைப்படும் விதம் பின்னாளில் அந்த பாசத்துக்கு எதிர்பாராத விதமாக அவரது கலைக்குழுவுக்கு ஸ்ரீலங்கா எழுதி தரும் பத்திரம் மனதை தொடுகிறது

கதை, திரைக்கதை, வசனம், பாடல் & இயக்கம் ராஜா குருசாமி சிறப்பாக வடிவைமத்துள்ளார். இசை ஹென்றி பாடல்களின் இனிமை சிறப்பு.

அந்த ஆகாயம் டூயட் பாடல் ரசிக்க வைக்கிறது ரிஸ்க் வைக்கிறது கரகாட்டக்காரன் படத்தில் வரும் அந்தமான் என்ற பாடலை ஞாபகப்படுத்துகிறது

மொத்தத்தில் காடப்புறா கலைகுழு குடும்பத்துடன் மகிழ்சியாக பார்க்கலாம்.

கரகாட்டக்காரர்கள் நையாண்டி காரர்கள் கலைக்குழு நடத்தினாலே அதிலே ஆபாசம் நிறைந்திருக்கும் பக்கத்தில் பக்கத்தில் இருந்து எடுத்துக் கொள்வார்கள் முகம் சுளிக்கும் வண்ணம் பேசுவார்கள் என்ற காலங்காலமாக இருக்கும் தத்துவத்தை இந்த காடை புறா கலைக்குழு தகர்த்தெறிந்துள்ளது அவர்களிலும் மனிதநேயமிக்கவர்கள் நல்ல குடும்பப்பாங்கானவர்கள் ரசிகர்களின் மனதை அறிந்தவர்கள் ஒழுக்கமான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த படம் வலியுறுத்துகிறது இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மிகுந்த ரசனை கூறியவர் அதனால் தான் இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் மேலும் பல படங்களை அவர் கொடுக்க வேண்டும் கரகாட்டக்காரன் படத்தை ஞாபகப்படுத்தினாலும் அது வேறு சாயல் இது வேறு சாயல் காலத்திற்கேற்ப வந்துள்ள கலியக

கரகாட்டக்காரன் தான் இந்த காடப்புறா புறா கலைக்கு