டாம் குரூஸ் நடிப்பில் மிரட்டும் ‘மிஷன்: இம்பாசிபிள்’ டெட் ரெகனிங் விமர்சனம்

டாம் குரூஸ் நடிக்கும் ‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெகனிங் (பாகம் 1)’ (Mission: Impossible Dead Reckoning

ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் தற்போது வெளியாகிஉள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7-ம் பாகத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காரணம் நாயகன் டாம்

கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டி உள்ளார் டாம் க்ரூஸ்.

‘மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ என பெயரிடப்பட்டு உள்ள இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இரண்டாம் பாகம் 2024-ம் ஆண்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மிஷன் இம்பாசிபிள் ஹாலிவுட் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது
அதே போல் இந்த படம் நிச்சயம் வசூலுக்கும் குறைவிருக்காது சாதனை படைக்கும்
[உலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் டாம் குரூஸ் . அவரது வெற்றிக் கதை பலருக்கு ஊக்கமளிக்கும் அவர் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார் மற்றும் உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

குரூஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்ஸ் ஆபிஸை ஆட்சி செய்து வருகிறார்.இருப்பினும், அவரது நட்சத்திரப் பயணம் கஷ்டங்களால் நிறைந்தது. அந்த அனுபவத்தை இந்த படத்தில் பார்க்கிறோம்
[மிஷன்: இம்பாசிபிள் – ஃபால்அவுட் (2018)’ படத்தின் தொடர்ச்சியாகவும், இப்படத் தொடரின் ஏழாவது படமாகவும் வந்துள்ளது.

‘இந்தபடத்தில், ஈதன் ஹன்ட்டும், அவரது IMF குழுவும், உலகையே அச்சுறுத்தும் புத்தம் புதிய, பயங்கரமான ஆயுதம், கெட்டவர்கள் கையில் கிடைக்காமல் தடுக்கும் மிக கடினமான பணிக்குப் புறப்படுகிறது. எதிர்காலத்தின் கட்டுப்பாடும், உலகின் தலைவிதியும் ஆபத்தில் இருக்க, ஈத்தனின் இருளடர்ந்த கடந்த காலம் நெறுக்க, உலகம் முழுவதும் பயணிக்கும் ஆபத்தான சாகம் தொடங்குகிறது. ஒரு மர்மமான, சர்வ வல்லமையுள்ள எதிரியை எதிர்கொள்ளும் ஈதன், தனது பணியை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று கருத வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகிறார். அவர் மிகவும் அக்கறை கொண்டவர்களின் வாழ்க்கையை விடவும் கூட இந்தப் பணி அதி முக்கியத்துவமானதாக மாறுகிறது ஈதனுக்கு.

டாம் இப்படத்தில் படப்பிடிப்பில், கடற்பரப்பை விட 1200 நார்வேயின் ஹெல்செட்கோபன் மலையில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரமான ஒரு செங்குத்து பாறையில், ஒரு சரிவு மேடை யில் மாற்றியமைக்கப்பட்ட ஹோண்டா CRF 250 பைக்கை ஓட்டுவதைக் பார்க்கும் போது சிலிர்க்க வைக்கிறது பின் 4000 அடி குறுகிய மலையிடுக்கில் பைக்குடன் குதித்து, தரையில் இருந்து 500 அடி தூரத்தில் பாராசூட்டைத் திறந்து தரையிறங்கும் காட்சியும் சிறப்பாக இருக்கிறது இதற்காகப் படத்தின் முன் தயாரிப்பின் பொழுது, ஒரு வருடம் ஒத்திகை பார்த்துள்ளார்.கள் கேமரா வைத்து இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன், 500 ஸ்கை டைவ் (skydive)-களையும், 13000 motocross jumps-களையும் பயிற்சிக்காகச் செய்து முடித்து, அதி பயங்கர ஸ்டன்ட் காட்சிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இப்படியான அர்ப்பணிப்பால், டாம் க்ரூஸ் மீண்டுமொரு முறை வெள்ளித் திரையில் ஜொலித்திருக்கிறார். மிஷன் இம்பாசிபிள் – டெட் ரெகனிங்’ படத்தின் மூலம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலையும் புயல் போல் கவரும் என்பது உண்மை.

“‘ இப்படத்தில் டாம் க்ரூஸோடு MI6 அதிகாரியாக நடித்திருக்கும் சக நடிகை ரெபேக்கா பெர்குசன். “இந்தப் படம், அதிரடி சாகசங்களுக்காக அதிகம் பேசப்படும் அதிலும் குறிப்பாக, மோட்டர்பைக் ஜம்ப்பிங் ஸ்டன்ட் சிலாகிக்க வைத்தது. பல வகையிலும், படத்தில் பணி புரிந்த இத்தகைய பொக்கிஷமான தருணங்கள்இயக்குநர் க்றிஸ்டோபர் மெக்குவாரி. “என்னம்மா உழைத்திருக்கிறார் மனுஷன் ஒவ்வொரு காட்சிக்கும் செம மெனக்கிட்டு இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சி பரபரப்பாக இருக்கிறது

ஒளிப்பதிவு – Fraser Taggart ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பரிமாணத்தில் தொழில்நுட்ப கட்டமைப்பு தெரிகிறது இத்தாலி ‘நார்வே.ஆஸ்திரேலியன் மலைப்பகுதியில் அற்புதமான ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது
இசை – Lorne Balfe படத்தில் உயிரோட்டமாக இருக்கிறது
படத்தொகுப்பு – Eddie Hamilton
சிறப்பாக இருக்கிறது

மொத்தத்தில் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும் வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினி