DD Returns விமர்சனம்

பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரோகித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிடி ரிட்டர்ன்ஸ் படம் முன்னதாக சந்தானம் நடித்து வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தின் 3வது பாகமாகும். இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம். படத்தின் பட்ஜெட் 15 கோடி என்கிறார்கள் அதில் பேய் வரும் அந்த பங்களாவுக்கு கோடிக்கணக்கில் செட் போட்டு இருக்கிறார்கள் இந்த வாரம் வந்த அத்தனை படங்களிலும் முதன்மையான இடத்தை தக்க வைத்திருக்கிறது இந்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் முழுக்க காமெடி வயிறு வலிக்குது என்று சொல்பவர்கள் அதிகம் குழந்தைகள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள் சரி வாங்க இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா.. அங்கே சூதாட்டத்தை தொழிலாக கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் குடும்பத்தினர் ஊர் மக்களால் எரித்து கொல்லப்படுகிறார்கள். அந்த ஆரம்பக் கட்சி திகிலாவும் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பையும் மனதில் எழவிட்டு ஒரு ஆவலை தூண்டி இயக்குனர் ஆரம்பக் காட்சியிலேயே வெற்றி பெற்று விட்டார் என்று சொல்லத் தோன்றியது
அடுத்து 2023 இல் நடக்கும் கதையில் சந்தானம் கோஸ்டி ராஜேந்திரன் கோஸ்ஸ்டி ஸ்டன்ட் மாஸ்டர் விஜயின் கோஷ்டி முனீஸ்காந்த் அடிக்கும் லூட்டி கிங்ஸ்ளியின் காமெடி எல்லாமே படத்துக்கு பலமாக அமைந்துள்ளது நிகழ்காலத்தில் நடக்கும் கதையில்

பாண்டிச்சேரியின் ஊர் பெரிய மனிதர் பெப்சி விஜயனிடம் இருந்த பணம், நகை உள்ளிட்டவை பிபின், முனிஷ்காந்த் குழுவால் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த பக்கம் பிபின் போதைப்பொருள் பிசினஸில் சம்பாதிக்கும் பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குரூப் முயல்கிறது. மறுபுறம் சுரபியை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற சந்தானத்துக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் பிபின் குழு கொள்ளையடித்த பணம், நகை மொட்டை ராஜேந்திரன் குழுவால் கைப்பற்றப்படுகிறது. அடுத்த நிமிடமே அது சந்தானம் வசமாகிறது. அவரும் சுரபியை மீட்கிறார்.

இதற்கிடையில் போலீஸூக்கு பயந்து மீதமுள்ள பணம், நகைகளை சந்தானத்தின் நண்பர்களான மாறன், சைதை சேது இருவரும் அந்த பங்களாவில் கொண்டு போய் வைக்கின்றனர். பேராசை மனிதர்கள் பேய்களாக அலையும் அந்த பங்களாவில் கேம் விளையாடி வென்றால் பணம்.. இல்லையெனில் மரணம் என நிலை இருக்கிறது. இதனை சந்தானம் தொடங்கி மொட்டை ராஜேந்திரன் வரை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் அந்த பங்களாவுக்குள் ஒவ்வொரு கோஷ்டி நுழையும் போது அங்கு நடக்கும் காமெடி செம கலகலப்பு

நடிப்பு எப்படி? நடித்திருக்கிறார்கள்

ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம் என்பதால் அதில் அசால்டாக வெற்றி பெற்றுள்ளார்கள். சந்தானம், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பிபின் என பலரும் காமெடி காட்சிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். வித்தியாசமான பேயாக வில்லன் நடிகர் , பிரதீப் ராவத் கவர்கிறார். சுரபிக்கு பெரிய அளவில் படத்தில் வேலையில்லை என்றாலும் கதையின் போக்குக்கு பயன்படுத்தப்பட்டுள்ளார். டைமிங் காமெடி படம் முழுவதும் அள்ளி தெளித்து இருக்கிறார்கள் அது நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது ஒவ்வொருவரும் பேசும்போதும் கைதட்டல் அரங்கம் அதிர்கிறது தல என்று சொல்லாதே ஏகே என்று சொல்லு என்று சொல்லும் பொழுதும் சந்தானம் அடிக்கும் ஒவ்வொரு கவுண்டருக்கும் விசில் சத்தம் பறக்கிறது

தியேட்டருக்கு சென்று பார்க்கலாமா? லாஜிக் மீறல்கள் இல்லையா?

பேய் படத்தில் லாஜிக் பார்க்க்கூடாது என்ற விதி உண்டு. அதனை மறந்து விட்டு படம் பார்த்தால் சிரிப்பு சரவெடி தான். ஆங்காங்கே டைமிங் டயலாக்குகளும் அப்ளாஸ் அள்ளுகிறது. சந்தடி சாக்கில் அரசியல்வாதிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பகடி செய்கிறார்கள். பேயிடம் சென்டிமென்ட் பாடல், பக்தி பாடல் போட்டு காட்டுவது, யூட்யூப் விளம்பரத்தை நக்கலடிப்பது என காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறார்கள். லாஜிக் எல்லாம் பாக்காதீங்க நம்பி வாங்க சந்தோஷமா போங்க இதுதான் படக்குழுவின் வேதம் அதை கச்சிதமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் காட்சி அமைத்த விதம் மேக்கிங் தரமான உழைப்பு இயக்குனருக்கு பாராட்டுக்கள்

படத்தில்
பயமுறுத்தும் பேய் என சென்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை என்றாலும் , காமெடி காட்சிகளுக்கு சிறப்பாக பயன்பட்டிருக்கும். 90ஸ் கிட்ஸின் பேவரைட் நிகழ்ச்சியாக “Takeshi’s Castle” நிகழ்ச்சியிலான விளையாட்டு உள்ளிட்டவை கவர்கிறது. படத்திற்கு பாடல்களே தேவையில்லை. பின்னணி இசை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது குழந்தை நட்சத்திரமாக வரும் இந்த மானசிகா சிரமப்பட்டு நன்றாக நடித்திருக்கிறார் கிங்ஸ்லி மாற்றி மாற்றி பேசுவது ரசிக்க வைக்கிறது தீபா காமெடி தங்கதுரை காமெடி எல்லாமே வெடி.
சுரபி நடிக்கும் நன்றாக இருக்கிறது

ஆக மொத்தம் பேய் கான்செப்டில் சந்தானம் மீண்டும் ஒரு சூப்பரான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இது ஒரு வெற்றி படம் அரண்மனை 1 2 3 போல டி டியும் ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு என்று வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது சந்தானத்திற்கு நல்ல குழு அமைந்திருக்கிறது அவர்கள் ஒத்துழைப்போடு தொடர்ந்து வெற்றிப்படம் கொடுக்கலாம் டிடி ரிட்டன்ஸ் நிச்சயமாக பணத்தை திருப்பிக் கொடுக்கும் வெற்றியை அள்ளும் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்
சந்தானம் ரிட்டர்ன்ஸ்