ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘பீட்சா 3 தி மம்மி’ படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீட்சா 3 தி மம்மி’. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் மூன்றாவதாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது ஒரு வெற்றி பட்டியலில் இந்த படம் இடம் பிடிக்கும்
இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் (அஷ்வின் காக்குமானு) என்ற கதாபாத்திரத்தில் பீட்சா கடை வைத்து இருக்கிறார்.. அர்ஜுன் பவித்ரா (பவித்ரா மாரிமுத்து) என்ற அமானுஷ்ய புலனாய்வாளருடன் இணைந்து மம்மியையும் அதன் தோற்றத்தையும் விசாரிக்கிறார். இருவரும் காதலிப்பது போலீஸ் அதிகாரியான கௌரவ நாராயணனுக்கு பிடிக்காது”. தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை அரவிந்த் இறந்து போக அந்த பழியும் அஸ்வின் மீது விழுகிறது இதுவும் கௌரவ நாராயணனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதன்பிறகு கிரானைட் தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபர் கொல்லப்படுகிறார் அதுவும் அஸ்வின் மீது பழி விழுகிறது அடுத்து கோகுலம் அப்பார்ட்மெண்டில் வாட்ச்மேனாக இருக்கும் வாட்ச்மேன் கொல்லப்படுகிறார் அதுவும் அஸ்வின் கண் முன்னாலே நடக்கிறது இது எல்லாம் ஏன்? நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க துப்பு துலக்குகிறார் அஸ்வின் அந்த விசாரணையில் மிகப்பெரிய உண்மை தெரிய வருகிறது அது அஸ்வினுக்கு சம்பந்தம் இருக்கிறதா அவரும் ஏன் பாதிக்கப்படுகிறார் அவருடைய பீட்சா கடையில் இருந்த காளி வெங்கட். மற்ற இரண்டு காமெடி யண்கள் அவர்களும் பேயால் தாக்கப்பட அப்படி என்றால் என்ன நடந்தது இரவில் மட்டும் பேய் வந்து அஸ்வினை மிரட்டுவது ஏன் என சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கும் பொழுது நிறைய உண்மைகள் தெரிய வருகிறது ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரை இடை வேளை க்கு பிறகு சூடு கதைபிடிக்கிறது அனுபமா பரமேஸ்வரன் நல்ல தாயாக வந்து நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார். அவர் மகளாக நடித்திருக்கும் கயல் வெப் தொடரில் நடித்த அந்த சின்ன சிறுமியும் அழகாக அனுதாபத்தை பெறுகிறார். படத்தில் வலுவான நடிகர்கள் உள்ளனர், அஸ்வின் காக்குமானு அர்ஜுனாக ஒரு தனித்துவமான நடிப்பை வழங்கியுள்ளார் படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்களும் சுவாரஸ்யமாக உள்ளன, மேலும் மம்மியே உண்மையிலேயே திகிலூட்டும் வகையில் உள்ளது
படத்தின் கதைக்களம் சில நேரங்களில் சற்று யூகிக்கக்கூடியது, ஆனால் அது இன்னும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன படத்தின் , மேலும் படம் சஸ்பென்ஸை உருவாக்கி ஒரு நல்ல படத்தை தந்துள்ளார் இயக்குனர்
சஸ்பென்ஸ் நிறைந்த ஹாரர் த்ரில்லர், இது படம் ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும்.
அர்ஜுனாக அஸ்வின் ககுமானு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அவர் கதா பாத்திரத்திற்கு நிறைய பொறுப்பு தீவிரத்தையும் கொண்டு சேர்த்துள்ளனர் மேலும் அவர் கதாபாத்திரத்தின் பயணத்தை உண்மையை அறிகிறார்
பவித்ராவாக பவித்ரா மாரிமுத்துவும் சிறப்பாக நடித்துள்ளார். அவர் கதாபாத்தில் புத்திசாலி மற்றும் சமயோசிதமானவராகாட்டப்பட்டு மேலும் அவர் அர்ஜுனுக்கு ஒரு சிறந்த துணையாக வருகிறார்
கௌரவ் நாராயணன் மற்றும் அபிஷேக் ஷங்கர் இருவரும் தங்கள் துணை வேடங்களில் நன்றாக நடித்துள்ளார் கள்
சிறப்பு படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பிரமிக்க வைக்கிறது. மம்மியே உண்மையிலேயே திகிலூட்டும் உயிரினம், சிறப்பு மேலும்சஸ்பென்ஸ் நிறைந்த ஹாரர் த்ரில்லர், இது ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும்.மாயவன் படத்தில் சிவி குமாருக்கு உதவிய இயக்குனர் மோகன் கோவிந்த், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “இது ஒரு தீவிரமான திகில் படமாக இருக்கிறது பிட்சா 1 இறுதியில் ஒரு கான் திரைப்படமாக மாறியது, இது ஒரு உணர்ச்சிகரமான திகில் படமாக இருக்கும். வணிகத்திற்காக எந்த நகைச்சுவை காட்சிகளையும் சேர்க்கவில்லை. என்பதை பாராட்டியே ஆக வேண்டும். ஹாலிவுட்டில் தி கன்ஜுரிங் அல்லது தி எக்ஸார்சிஸ்ட் எப்படி இருக்கிறது என்பதைப் போலவே, பீஸ்ஸா 3 திகில் வகையை முழுமையாக ஒரு பேய் படமாக வந்துள்ளது அதில் பிளாஷ்பேக் காட்சியில் மனித நேயமும் மெமரி லாஸ் என்ற கருத்தும் புதிய வகையில் புகுத்தப்பட்டுள்ளது படத்தில் ஒவ்வொரு காட்சியும் திகிலாவும் இருக்கிறது என்ன நடந்தது என்பதை நாயகனுக்கு தெரியும் வரை கதைகள் நல்ல சஸ்பென்ஸ் நல்ல சேர்ந்து இயக்குனராக திரைக்கதை அமைத்து இருக்கிறார். இசை நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது கலை அரங்கம் நன்றாக இருக்கிறது இதில் பணிபுரிந்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடித்த நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் பீட்சா அடுத்த எபிசோட் வருவதற்கு இயக்குனர் லீடுகொடுத்திருக்கிறார். வந்தாலும் ரசிக்கலாம். பீட்சா 3 மனித நேயமும் மிரட்டலும்