ஜெயிலர் வெற்றி சாதனை படைக்கும். வாழ்க்கையை தெளிவா உணர்ந்த ஒரு மனிதனோட பேச்சு…”நாம என்ன மகானா ரிஷியா?” அந்த உணர்வு….
அது தான் ரஜினி….
ரஜினியோட கழுகு கதையில் அவர் தான் கழுகு. பியூட்டி என்னன்னா ரஜினியே ‘கழுகு’ன்னு ஒரு படதத்தலைப்பில் நடிச்சு 80களிலேயே தான் கழுகுன்னு தீர்க்கதரிசனம் பண்ணியிருப்பது ஆச்சர்யமான விஷயம்.
ரஜினியின் கேரக்டர்கள் தொடக்க காலத்தில் கிடைத்ததை செய்தார். ஆனா எந்தகேரக்டர் கிடைத்தாலும் அதில் தன்னோட பர்ஃபெக்ஷனை உணர்ந்து செய்பவர்னு நமக்குத்தெரியும். பரட்டைன்னு நாலைந்து சீன் வந்தாலும், ஸ்ரீதர் போன்ற பெரிய இயக்குனர் படத்தில் நடித்தாலும் தனக்கானதை செய்யும் திறமையின் மீது அதீத நம்பிக்கையை பெற்றிருந்தார். அது தான் அவர் துரியோதனனாக நடித்ததாக சொன்ன செய்திகளில் வெளிப்பட்டது.
இந்த திரையுலகம் எத்தனையோ ஒரு பட ஹீரோக்களை சந்தித்திருக்கிறது. ஒரே படம் ஹிட்டாகி அதன் மூலம் சில படங்களில் நடிப்பார்கள். உதாரணத்துக்கு ராஜ்கிரண், ராஜேந்தர், சங்கர், பிரேம் மேனன், அர்ஜுன் போன்றோர்.
அவர்களைப்போல முதல் படத்திலேயே ஹீரோவாக உயர்ந்தவர் அல்ல ரஜினி. படிப்படியாக தன் தனித்துவத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தவர் அவர். அவர் தலையெழுத்தும் அப்படித்தான் இருந்திருக்கிறது.
சிவாஜியின் மாபெரும் வெற்றிப்படமான திரிசூலத்தின் வெற்றி விழா மதுரையில் நடக்கிறது. எல்லா நடிகர்களும், ரஜினி உட்பட கலந்துகொண்டார்கள். ஆனால் அடுத்தநாள் பேசப்பட்ட செய்தி ரஜினி ஏர்போர்ட்டில் செய்த தகராறு. இப்படி நிகழவேண்டும் என எழுதி இருக்கிறது.
பைத்தியம், லூசு என்றெல்லாம் 80 தொடக்கத்தில் வெறுக்கப்பட்ட ரஜினி மாயாஜாலம் செய்து அதே மக்களின்இதயத்தைப் பிடித்தது என்பது ஆச்சர்ய செய்தி.
அவரும் சிறப்பாக தன் கெரியரைக் கட்டமைத்தார். எம்.ஜி.ஆர் வென்றதும் அவரது அமைச்சரான ஆர்.எம்.வியின் சத்யா மூவீஸ் தயாரிப்பான ராணுவ வீரன் படத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான தேவர் பிலிம்சுக்கு எம்.ஜி.ஆர் இல்லாத நிலையில் தாய் மீது சத்தியம் படத்தில் நடித்து அந்தக்கம்பெனிக்கு உயிருட்டினார்.
ஏழூ வருடங்களாக படம் தயாரிக்காத ஏவிஎம்முக்கு முரட்டுக்காளை நடித்துக்கொடுத்து அடுத்த இருபது வருடங்கள் வெற்றியாக வலம் வரச்செய்தார்.
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலச்சந்தர், தனக்காக கதைகளை உருவாக்கிய பஞ்சு இவர்களை தயாரிப்பாளர்களாக்கி கவிதாலயா, பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ் கம்பெனிகளை வளர்த்து விட்டார்.
இடையில் சிவாஜிக்காக சிவாஜி புரொடக்ஷன்ஸ் படங்களிலும், முக்தா என்கிற பழைய வெற்றி தயாரிப்பாளருக்கும் நடித்துக் கொடுத்தார். பாலாஜிக்காக சுஜாதா புரொடக்ஷன்ஸில் ரஜினியின் பில்லா, தீ என நடித்துகக்கொடுத்தார்.
தானே திட்டமிட்டுச்செய்தாலும் இடையில் நட்புக்காக கே.ஆர்.விஜயாவின் நான் வாழ வைப்பேன் படத்திலும், தேவருக்காக சஷ்டி விரதம் படத்திலும், தாணுக்காக யார் படத்திலும், அபஸ்வரம் ராம்ஜிக்காக உருவங்கள் மாறலாம் படத்திலும், உதவி இயக்குனர் செந்தில் நாதனுக்காக பெரிய இடத்துப்பிள்ளை படத்திலும், முக்தா சுந்தருக்காக கோடைமழை படத்திலும் கௌரவ வேடம் செய்த வேறு நடிகரை பார்க்க முடியுமா?
ரஜினியை அல்டாப்பு என கிண்டலடித்த மாற்று நடிகர்களின் ரசிக நண்பர்கள் எனக்கு 80களில் இருந்தார்கள். அவர்கள் கூட இன்று ரஜினியை ரசிக்கிறார்கள் என்பதில் எனக்கு சந்தோஷமே..
ரஜினியின் பேச்சின் தரம் இப்போது அழகாக மிளிர்கிறது. எந்த வீட்டிலும் நாடகம் சினிமா என்றால் அடி விழும். ஆனால் ரஜினியின் முதல் நாடகம் நடித்து வீட்டுக்குப்போன போது காத்திருந்து ஆரத்தி எடுத்த அவரது அண்ணியாரும், கட்டிப்பிடித்துக்கொண்ட அண்ணனும் நெஞ்சில் காட்சியாக திரும்பத்திரும்ப வந்து கொண்டேயிருப்பது நிஜம்.
இது இது இப்படித்தான் நிகழ வேண்டுமென எழுதி வைத்தாற்போல் நடந்திருப்பது ரஜினி வாழ்க்கையில்….
அழகான ஆக்கம் ரஜினி…. ஜெயிலர் நிச்சயம் மிரட்டும் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி மட்டுமே என்பதை ஜெயிலர் உறுதி படுத்தும்