வினோத் சென்னியப்பன் தயாரிப்பில் ஏ எம் ஆர் முருகேஷ் இயக்கத்தில் வினோத்கிஷன் அபிராமி வெங்கடாசலம் ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமி டெல்லிகணேஷ் லீலா சாம்சன் மற்றும் பலர் நடித்துள்ள படம் வான் மூன்று. இசை r2bros
இந்த படத்தில் சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவும் R2bros –ன் இசையும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
இயக்குநர் ஏ.எம்.ஆர் முருகேஷ் மூன்று ஜோடிகளின் வாழ்க்கை பதிவை அழகாக எல்லோரும் ரசிக்கும்படி பீல்குட் மூவியாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.
வான் மூன்று. படத்தின் தலைப்பே கதையை சொல்கிறது. காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நாயகன் நாயகி பார்க்கும் ஒரு வானம்,
40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், இந்த ஜோடி பார்க்கும் இரண்டாம் வானம்,
காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து தங்கள் இளமையை இனிப்போடு களிக்க விரும்பிய கணவன் மனைவி. குழந்தை வந்துவிட்டதோ என்று பயம், பரிசோதிக்க வந்த இடத்தில் மூளை பாதிப்பு என்று தெரிந்து பயம் இவர்கள் பார்ப்பது மூன்றாம் வானம்.
. படத்தின் முதல் காட்சியிலேயே படத்தின் இறுதிக் காட்சி இதுதான் என்று கணித்துவிட்டால் அது ஆகப்பெரிய குறை ஒன்றும் இல்லை. ஆனால் அந்த ஆரம்பப்புள்ளி முடிவுப்புள்ளி இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இடங்களை என்ன மாதிரியான கதையைக் கொண்டு, காட்சிகளைக் கொண்டு கடத்துகிறார்கள் என்பதில் அடங்கி இருக்கிறது, இப்படத்தின் வெற்றி
ஒன்றும் இல்லாத வாழ்க்கை அதற்குள் ஏன் மனிதா இவ்வளவு வேறுபாடுகள். என்பதை அற்புதமான திரைக்கதை உடன் உணர்த்தும் அற்புதமான கதை அதை சொன்ன விதம் ரசிக்க வைக்கிறது.
மூன்று கதைகளும் ஒரே நேர்கோட்டில் ஜீவன் உள்ள காட்சிகளாக விரிவதால் நம்மால் கதைக்குள் நன்றாக பொருந்தி போக முடிகிறது நமது பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவங்களை நேரில் பார்ப்பது போல்
கதை திரைக்கதை எழுதி இயக்குனர் அருமையாக கொடுத்துள்ளார்.
கதை, திரைக்கதை, காட்சியமைப்புகள் இவைகளைப் பார்க்கும் போது எல்லாவற்றிலுமே பட்ஜெட் என்பது தடைக்கல்லாய் இருந்திருக்கலாம், மூன்று மருத்துவமனைகள் .ரோடு. அதன் பிறகு வீடு. இது மட்டும் லொகேஷன் ஆக இருந்தாலும் காட்சிக்கு உயிர் கொடுப்பது இதில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் தான்.
காதல் தோல்வி தவிர்த்து மற்ற இரண்டு கதைகளுமே உயிருக்கு உயிரானவர்களை இழப்பது தொடர்பான வலியைப் பேசும் கதைகள்.
அந்த இரு தம்பதிகளின் பிணைப்பும் பாசமும் எப்படிப்பட்டது என்பதை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.
காதல் தோல்வி ஜோடிக்கு ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி அந்த இருவரின் கண்கள் பேசுகிறது அம்மு அபிராமியின் மௌனம் . காதல் வலி கடந்த காலத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் சோகம் இவை எல்லாம் அற்புதமாக கொடுத்திருக்கிறார். ஆதித்யா காதல் வலியை கடந்து மீண்டும் ஒரு காதல் நுழைவதற்கு அவருக்கு எது உணர்த்தியது என்ற சம்பவத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்,
முதிர்ந்து கனிந்த காதலுக்கு டெல்லி கணேஷ், லீலா சாம்சன் ஜோடி இவர்கள் இருவரும் 40 வருடங்களாக ஒருவருக்கொருவர்
எப்படி உயிர்த்துளி போர்டு அன்பை பரிமாறிக் கொண்டார்களோ அதை திரை வடிவத்திலும் நன்றாகவே காட்டியிருக்கிறார்கள்
லீலா சாம்சன் எதார்த்தமான நடிப்பு தெளிவான பேச்சு இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது
டெல்லி கணேஷ் மனைவியைப் பிரிந்து விடுவோமோ என்று சோகம் எதுவுமே செய்ய முடியவில்லை என்ற கையாலாக தனம் மகனிடம் உதவி கேட்டு சோகமாக திரும்புவது இப்படி ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான அனுபவம் மிக்க முதிர்ந்த நடிப்பை காட்டி இருக்கிறார் அற்புதமான தேர்வு இந்த இரு ஜோடிகள் அடுத்து இளம் கணவன் மனைவிக்கு வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம் ஜோடி இந்த மூன்று ஜோடிகளில். அதிகமாக நம்மை ஈர்ப்பது சீனியர்ஸ் அன்பு தான். லீலா சாம்சன் சஞ்சு சாம்சன் போல் தடுமாறாமல் அடித்து ஆடுகிறார். உணர்வுகளை உடல்மொழியில் படுக்கையில் படுத்தவாறே அழகாக கொண்டு வருகிறார். டெல்லி கணேஷ் நன்றாக நடித்திருக்கிறார் என்பது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதற்கு இணையானது. இந்த இணையின் இன்னுமொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அவர்கள் இருவரின் குரலிலும் இளையோடும் அந்த முதுமையின் தொய்வு.
லீலாவின் குரலில் சற்றே கம்பீரம் தொனித்தாலும் அதையும் ரசிக்க முடிகிறது. அன்பு தான் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது பணம் தேவை தான் ஆனால் அன்புக்கு முன்னால் அது ஒரு பொருட்டே அல்ல என இந்த காதல் ஜோடியில் முதல் இடத்தை பிடிக்கிறார்கள்..
இவர்களுக்கு அடுத்ததாக ஸ்கோர் செய்வது வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம் ஜோடி தான் தனக்கு மீள முடியாத நோய் இருக்கிறது என்பதை கேட்கும் அந்த நொடியில் அபிராமி வெங்கடாசலத்தின் கண்களில் துளிர்க்கும் கண்ணீரில் அத்தனை வெம்மை, அதே வெம்மை உடற்கழிவுகள் உடை நனைத்து வெளியேறும் போதும். வினோத் கிஷன் அபிராமியின் அப்பாவை சந்திக்கும் இடத்திலும் டெல்லி கணேஷுடன் உரையாடும் இடத்திலும் இயல்பாகத் தெரிகிறார். கல்லூரி வாசலில் கைகோர்த்து திரிந்த அந்த கனமான ஈரப்பசை மனதில் நிற்க கணவனிடம் எனக்கு மீண்டும் அப்படி ஒரு சந்தர்ப்பம் வேண்டும் என்று கேட்பது கதையின் கனமான காட்சி கணவனும் மனைவியை காப்பாற்ற துடிக்கும் அந்த போராட்டமும் மாமனாரிடம் சென்று மல்லுக்கு நின்று யோவ் உன் மக செத்துப் போய் விடுவாயா வந்து பாருய்யா என்று கெஞ்சும் காட்சிகளில் உயர்ந்து நிற்கிறது நடிப்பு அதேபோல அபிராமியின் நடிப்பு வானுயர்ந்த நிற்கிறது நாம் இறந்து விடுவோம் என்பது தெரிந்த பிறகும் ஒன்றிப்போய் கணவனிடம் காட்டும் அன்பு அந்த உருக்கமான பார்வை ஆகச் சிறந்த கதாபாத்திரம்
நன்றாக நடிப்போம் என்பதை ஏற்கனவே நிருபித்துவிட்ட அம்மு அபிராமிக்கும் ஆதித்யாவிற்கு இங்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது ஆஸ்பத்திரி தான் கதைக்களம் என்று இந்த ஜோடிகளுக்கான பிறகு கைவீசி நடப்பதற்கு இடம் இல்லாவிட்டாலும் கண்களால் பேசி நடந்து இருக்கிறார்கள் நமது இதயத்தை கடந்து இருக்கிறார்கள் இவர்கள் இருவரும் காட்சிகளில் அவ்வளவு இளமைத்துள்ளல். என்னதான் அரசு மருத்துவமனையில் பொது ஜெனரல் வார்டு என்று காட்டிவிட்டு நான்கு பேரை மட்டும் வைத்துக் கொண்டு இவர்தான் நோயாளிகள் என்று சொல்வதெல்லாம் டூ மச் இயக்குனர் அரசாங்க மருத்துவமனைக்கு சென்று இருக்காரா அங்கு பெண்களுக்கு என்று தனி வார்டு ஆண்களுக்கு என்று தனி வார்டு இருப்பது இயக்குனருக்கு தெரியாதா. இதில் கொஞ்சம் லாஜிக் மீறல்கள் அம்மு அபிராமியின் அம்மாவாக வரும் அவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மகள் பழைய காதல் நினைவுகளில் இருந்து மீண்டு வர அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகத்தை சொல்லும் போது படம் பார்ப்பவர்களுக்கு கண்ணீர் கண்களில் மின்னி மறைகிறது. இயக்குனர் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் ஷார்ட் பிலிம் எடுத்துவிட்டு திரைத்துறைக்கு வந்துள்ளார் அவர் நினைத்திருந்தால் ஒரு ஆக்ஷன் மசாலா படத்தை கொடுத்து பத்தோடு 15-ல் ஒருவராக காணாமல் போய் இருக்கலாம் ஆனால் ஜீவன் உள்ள ஒரு கதையை உயிரோட்டமான ஒரு கதையை பல காலம் நினைத்து பார்க்க வைக்கும் ஒரு கதை கொடுத்ததற்காக அவருக்கு பாராட்டுக்கள். இயக்குனர் வசந்த் இயக்குனர் ருத்ரய்யா இயக்குனர் கே. பாலசந்தர் இவர்கள் படங்களை பார்த்தால் எப்படி மனதுக்குள் ஒரு தாக்கம் ஏற்படுமோ அது போல இந்த படமும் ஏற்படுகிறது வான் 3 வெற்றிகாரமான ராக்கெட்டை நிறுவி இருக்கிறது