ஐமா திரைப்படவிமர்சனம்;-

ஐமா திரைப்படவிமர்சனம்;-

ஆர்.சந்திரசேகர் .

ஐமா எனும் இந்த திரைப்படம் சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலும் கூட இந்த திரைப்படத்தை எல்லா ஆடியின்ஸ்களும் பேமிலி ஆடியன்ஸ்களும்

ரசிக்கும்படிஇருக்கும். இந்த திரைபடத்தின் திரைக்கதைக் காட்சிகள், பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பா அமைந்துள்ளது இந்த திரைபடத்தின் சிறப்பு ஆகும் என்றாலும் தமிழ் சினிமாவுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஐமா திரைப்படம் ஒரு புதுமையான புதுவைகையான அனுபவத்தை, உணர்வையும் கண்டிப்பாக உங்களுக்கு தரும்

புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கும். தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம். ‘ஐமா’. ஏன்றால் இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல.புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள திரைப்படம் ஐமா

ஐமா என்ற சொல் தெய்வசக்தியின் வலிமையை குறிக்கும் பொருள் ஐமா என்ற சொல் இறைவனின் முழுமை சக்தியின் வலிமையை தொடர்பை வித்தியாசமா படத்தில்இயக்குனர் காட்டியுள்ளார்.

எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இருமனிதர்களுக்கு ஏற்படும் தடைகளையும் துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் விளையாட்டின் ஆட்டம் தான்

துரோகங்கள் துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் தடைகள் தடுமாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ளும் அனுபவத்தில் ஆரம்பிக்கும் ஆற்றலின் விளக்கமே

எளிதாக புரியும்படி சொன்னால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு

படத்தை எழுதி இயக்கியவர் ராகுல்.ஆர். கிருஷ்ணா.இவர் தமிழ்,மலையாளத்தில் பணிபுரிந்துள்ளார் ஆருயிரே எனும் குறும்படத்தை இயக்கிவர்.

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ஐமா திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.இந்த கதாநாயகன் யூனஸ், கதாநாயகி எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு கே.ஆர். ராகுல்.இவர் பல விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளார், சில குறும்படங்களிலும் சில மலையாள திரைப்படங்களிலும், இசைஅமைத் திருக்கிறார். இந்த திரைப்படத்தில் அருண்மணியன் பாடல் எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவு செய்துள்ளார் விஷ்ணு கண்ணன்.படத்தொகுப்பு அருண் ராகவ்.

இந்த திரில்லர் திரைப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உண்டு. சண்டைப் பயிற்சி அஷ்ரப் குருக்கள், கலை இயக்குனர் ஜீமோன்.

பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டுவந்துள்ளேன்.படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் நிறைந்த திரைப்படமாகும்

இதுல ஒன்பது கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் சம்பவத்தை க்கொண்டு கதையை சொல்லப்படுகிறது.ஐமா திரைப்படம்