மார்கழி திங்கள்’ இசை வெளியீடு
ஆர்.சந்திரசேகர்.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர் வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன் பேசியதாவது…
நடிகர் கார்த்தி:-
பாரதிராஜா ஐயா அவர்களுக்கு வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா சாரை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இப்போது வரை அவரை முன்மாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறேன்
ஜி. தனஞ்செயன்:-
‘மார்கழி திங்கள்’ டைட்டில் ரொம்ப அற்புதமாக இருக்கும் அலைகள் ஓய்வதில்லை’ போல் இந்த ப்படம் இருக்கும் என்று நினைக்கிறேன் . சுசீந்திரன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் திரு -:
மனோஜ் மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக நல்ல படமாக அமையும் எனவும் வாழ்த்துகிறேன்.
சுரேஷ் காமாட்சி:-
மனோஜ் கட்டாயம் இயக்குநராக ஆவார் என்று நம்பிக்கை இருந்தது , அது இப்ப உண்மையாகியது. சுசீந்திரன் மூலம் இது நடந்தது. பாரதிராஜா அவர்கள் இயக்குநராக இருந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். மனோஜ் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருந்தது .இந்த படத்தின் வெற்றி நிச்சயம் .பி. எல். தேனப்பன் :-
அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி, பாரதிராஜாவிற்காக தான் அனைவரும் வந்திருக்கிறோம். சுசீந்திரன் சார் முதல் படம் தயாரித்திருக்கிறார். மனோஜ் நிறைய படங்கள் இயக்கி வெற்றி பெறுவார் என்று வாழ்த்துகிறேன்.
இயக்குநர் பேரரசு:-
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், சிவகுமார் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் வணக்கம். இசை இளையராஜா இயக்குநர் பாரதிராஜா தான் என்று மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். இளையராஜா மற்றும் பாரதிராஜா மீண்டும் இணைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி.
ஆர்.வி. உதயகுமார் :-
மனோஜ் இயக்குநராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பல வருடங்களாக அவரிடம் இதை நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒரு அற்புதமான இயக்குநராக உருவாக்குவதற்கு மனோஜ் பாரதிராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த திரு சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி.
கதாநாயகி நக்ஷா சரண் :-
‘மார்கழி திங்கள்’ குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா சார் அவர்கள் மிகவும் நட்பாக பேசுவார்கள். எனக்கு வாய்ப்பளித்த மனோஜ் பாரதிராஜா மற்றும் சுசீந்திரன் அவர்களுக்கு மிகவும் நன்றி. படம் மிகவும் நன்றாக வந்துள்ளது.
கதாநாயகி ரக்ஷனா:-
மனோஜ் பாரதிராஜா சார், சுசீந்திரன் சார் மற்றும் ‘மார்கழி திங்கள்’ படத்தின் அனைத்து குழுவினருக்கும் நன்றி..
கதாநாயகன் ஷியாம் செல்வன்:-
மனோஜ் பாரதிராஜா அவர்களால் தான் நான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா மற்றும் இளையராஜா சார் அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் லிங்குசாமி :-
தமிழ் சினிமாவில் இயக்குநர் என்றால் பாரதிராஜா சார் தான். திருப்பாவையில் வரும் முதல் வார்த்தை மார்கழி திங்கள். எனவே இது மிகவும் அருமையான தலைப்பு. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள். டிரைலர் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறேன்.
இயக்குநர் மனோஜ் பாரதிராஜா :-
18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குநராக வந்திருக்கிறேன். சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதைய சொல்லியிருந்தேன். திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு ‘நீங்க படம் பண்ணுங்க’ என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை. கதாநாயகன் ஷியாம் நன்றாக நடித்துள்ளார். ரக்ஷனா மற்றும் இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக என் கஷ்டங்களில் உடனிருந்த மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நன்றி.
ஆர்.கே. செல்வமணி:-
மனோஜ் பாரதிராஜாவிற்கு வாய்ப்பளித்த சுசீந்திரனுக்கு நன்றி. பாரதிராஜாவிற்கு நன்றி. திறமையானவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து கிடைத்துள்ளது. ‘மார்கழி திங்கள்’ என்று அழகான தமிழ் டைட்டில். இதைப் பார்க்கும்போதே மனதுக்குள் சந்தோஷம். மண் வாசனை நிறைந்த படமாக இருக்கும் என்றும் நம்புகிறேன். படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். மனோஜ் பாரதிராஜாவை பத்திரிகையாளர்கள் மிகப்பெரிய இயக்குநராக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்
இசைஞானி இளையராஜா. அவரது திறமைக்கு எதுவும் ஈடாகாது. உலகத்தின் தலைசிறந்த ஓவியராக வரவேண்டியவர் பாரதிராஜா.
நடிகர் சிவகுமார் :-
திரையுலகத்தை சேர்ந்த அனைவரையும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தில் ரொம்ப வருடங்களுக்கு பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். இத்திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா :-
என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை ஜாம்பவான்களுக்கும் நன்றி. நடிகனாக இருந்து இயக்குநராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கு . டிரைலரை, பார்த்தேன் .மிக அற்புதமாக இருக்கு முக்கியமாக நான் நன்றி சொல்ல வேண்டியவர் யார் என்றால் சுசீந்திரன் தான். காதலை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அத்தனை இயக்குநர்களும் என்னை அப்பா என்று தான் அழைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சி. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, கண்டிப்பாக இந்தப் படம் வெற்றியடையும்,