எனக்கு எண்டேகிடையாது. விமர்சனம்
தொகுப்பு. ஆர்.சந்திரசேகர் .

கதையின்நாயன் விக்ரம் ரமேஷ் ஆரம்பத்தில் கேப் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் போது சேகருக்கு ஒரு நாள் இரவு கால் வருகிறது. பிறகு சேகர், ஊர்வசி பெண்ணை வீட்டிற்கு கொண்டுப் போய் ,டிரப் செய்யும் இடமான ஊர்வசியின் வீட்டிற்கு வருகிறார், அங்கு ஊர்வசி வீட்டினுள் அழைத்து வந்து என்னுடன் சரக்கு அடிக்க கம்பெனி கொடுக்கும்படி ஊர்வசி, சேகரிடம் கேட்கிறார். சிறிதுநேரம் கழித்து, எனக்கு நிறைய வேலை இருக்கு மேடம் காரை கொண்டு போய் ஆபிஸ்ல விடவேண்டும். அப்படி விடவில்லை என்றால் எனக்கு கால் மேல் வரும், என் டூட்டியில க்ரைக்டா இருக்கணும். என்று தன் கம்பெனி ரூல்சை சொல்ல விருப்பம் இல்லாமல் சேகர் மது‌ குடிக்க ஒத்துக்கொள்கிறார்.
இருவரும் வீட்டினுள் செல்கின்றனர், ஊர்வசியின் வீடு ஒரு பிரமாண்டமான வீடாகும். அங்கு சி.சி டிவி, கதவுக்கு பாஸ்வேர்ட் என அனைத்தும் வித்தியாசமாக இருக்குறது, வீட்டினுள் சென்ற பிறகு சேகரும், ஊர்வசியும் டக்கீலா முறையில் குடிக்க ஆரம்பிக்கின்றனர். சிறிது நேரம் கழித்து சேகருக்கு சில விஷயங்கள் தெரிய வருகிறது. அங்கிருந்து வெளியேற நினைக்கும் சேகருக்கு வெளியே செல்ல பாஸ்வேர்ட் நம்பர் தெரியவில்லை, கடைசியில் அங்கு இவர் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன என்பதும், சேகர் அங்கிருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் விக்ரம் ரமேஷ் இயக்கியுள்ளார்.
கால் டாக்ஸி டிரைவரான நாயகன் விக்ரம் ரமேஷ், நாயகி சுவயம்சித்தாவை பிக்கப் செய்து அவருடைய வீட்டில் ட்ராம் செய்யும் போது, அவரின் அழைப்பின் பேரில் அவருடன் உட்கார்ந்து மது அருந்தி போதையாகிறார். போதை தெளிந்து அங்கிருந்து கிளம்பும் போது ஒரு அறையில்,
ஊர்வசி கணவர் பாத்ருமிள் ரத்தககரையோட மயங்கிநிலையில் இருக்க சேகர் பாத்ரூமில் பார்த்து அதிர்ச்சியடைகிறார்
ஒரு ஆண் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைய, மறுப்பக்கம் சுவயம்சித்த திடீரென்று மயக்கமடைந்து விழுகிறார். அதே சமயம், அந்த வீடு டிஜிட்டல் லாக் சிஸ்டம் என்பதால், அவரால் கதவை திறக்க எழும் போது
ஒரு ஆண் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைய, மறுப்பக்கம் சுவயம்சித்த திடீரென்று மயக்கமடைந்து விழுகிறார். அதே சமயம், அந்த வீடு டிஜிட்டல் லாக் சிஸ்டம் என்பதால், அவரால் கதவை திறக்க முடியாமல் வீட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார்.
இதற்கிடையே, அந்த வீட்டுக்குள் திருடுவதற்காக கார்த்திக் வெங்கட்ராமன் நுழைய அவரை தொடர்ந்து எம்.எல்.ஏ-வான சிவகுமார் ராஜுவும் பணத்துடன் நுழைகிறார். இப்போது மூன்று பேரும் அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொள்ள அவர்கள் தப்பித்தார்களா?, இல்லையா?, சுவயம்சித்தாவுக்கு என்ன நடந்தது?, ஆண் சடலம் யார்? போன்ற கேள்விகளுக்கான பதிலை பரபரப்பாக சொல்வது தான் ‘எனக்கு எண்டே கிடையாது’.
அறிமுக நடிகர் விக்ரம் ரமேஷ், முதல் படம் போல் அல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். சுவயம்சித்தாவை அவர் பார்க்கும் விதம், அவருடன் சேர்ந்து மது அருந்துவது பிறகு அப்படி இப்படி என்று இளைஞர்கள் மனதில் வசீகரம் தரும் வகையில் நடித்திருக்கிறார்.
எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் சிவகுமார் ராஜு, திருடனாக நடித்திருக்கும் கார்த்திக் வெங்கட்ராமன் இருவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கலாச்சரனின் இசையில் ஆட்டம் போட வைப்பதோடு, கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறது. ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும், அந்த உணர்வே தெரியாதபடி, பல்வேறு கோணங்களில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம்,.
படத்தொகுப்பாளர் முகன்வேல் நேர்த்தியான படத்தொகுப்பு படத்தை வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறது.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் ரமேஷ் தான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை மிக சுவாரஸ்யமாக அதே சமயம் பரபரப்பாக சொல்லிய விதம் வியக்க வைக்கிறது.
முழு படமும் ஒரு வீட்டுக்குள், மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையே நடந்தாலும், எந்த இடத்திலும் போராடிக்காதவாறு சில பல விசயங்களை வைத்து ரசிகர்களை கொண்டாட வைத்திருப்பவர், முழுமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தை ஜாலியான படமாகவும் கொடுத்திருக்கிறார்.