ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு.

 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு.

தொகுப்பு. ஆர்.சந்திரசேகர்.

 

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ் .ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2ம் பாகம் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

முதல் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இரண்டாவது பாகத்தை எடுத்திருக்கிறார்.

இரண்டாம் பாகம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தலைப்பில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொழிகளின் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லார்ஸ் , எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளனர். தற்போது வெளியாகி உள்ள மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கக் கூடிய நிலையில் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தையும் விரைவாக வெளியிடப்படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா காமினேஷன் பாகம் ஒன்றைப் போல பாகம் இரண்டிற்கும் வெற்றி தேடித் தரும் என்று படக்குழுவினர் கருதுகின்றனர். மேலும் தற்போது படத்தினுடைய இறுதி கட்டப் பணிகள் நடப்பெற வருவதால் இந்த வருடம் கடைசியில் படத்தை வெளியிட படக் குழுவினர் விரைவில் ஆலோசனைச் செய்து வருகின்றனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் மாமதுர ப்பாடல் காட்சி அன்றைய தினம் வெளியாகியுள்ளன.

இதுல ராகவாலாரஸ் கேங்ஸ்ட்டாகவும் எஸ்.ஜே. சூரியா சினிமா இயக்குன்ராகவும் நடித்திருக்கிறார்கள் .இருவரும் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள் எஸ்.ஜே .சூரியா இந்த படத்தில் தனிரகமான ஸ்டைல் மற்ற படங்களை விட இந்த படத்தில் வேறுப்பட்ட நடிப்பா இருக்கும் . இந்தபடம் 1975 –ல் நடக்கும் சம்பவத்தை மையமா வைத்து எடுக்கப்பட்ட படமா ஜிகர் தண்டா திபாவளி திரு நாளில் வெளி வருமேன எதிர் பார்க்கிறோம் .