சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம் தொகுப்பு ( குங்குமம் ) ஆர் சந்திரசேகர்.

சிக்லெட்ஸ் திரைப்பட விமர்சனம் தொகுப்பு ( குங்குமம் ) ஆர்

சந்திரசேகர்.

நல்லது, கெட்டது என எதையும் சிந்திக்காமல் மனதுக்கு தோன்றுவதையெல்லாம் செய்துவிட ஆசைப்படுகிற துணிச்சலான டீனேஜ் பருவப் பெண்கள் மூன்று பேர். அவர்களுடைய மனதுக்குப் பிடித்தமான ஃப்ரெண்ட்ஸ் களோடு நெருங்கிப் பழகுவது.அவர்களோடு தேடி, போகிறார்கள்.

 

அந்த விவரம் அந்த பெண்களின் பெற்றோர்களுக்கு தெரியவருகிறது. அவர்களை துரத்திப் பிடித்து தப்புத்தண்டா நடப்பதற்குள் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

 

 

அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா இல்லையா என்பதே கதையோட்டம். இயக்கம் ‘திறந்திடு சீசே’ முத்து

 

 

சுதந்திரப் பறவைகளாக வாழ விரும்புகிற மூன்று பெண்களாக நயன் கரிஷ்மா, அம்ரிதா, சுரேகா மூவரும்தங்களது இளமை ததும்புடன். கதைக்களத்தை பலப்படுத்தியிருக்கிறார்கள்!

 

அந்த மூவரின் காதலர்களாக வருகிற சாத்விக் வர்மா உள்ளிட்ட மூன்றுபேரும் சூடேறி இளமைத் துடிப்போடு வெளிப்படுத்தும் நடிப்பு கச்சிதம்!

 

பெண்ணின் அம்மாவாக வருகிறவரின், ‘மகள் தவறான பாதையில் போய்விடக்கூடாது’ என்ற தவிப்பும், மகளை அவளது காதலனோடு பார்த்து பக்குவமாய் திரும்பி நடப்பதும் மனதில் நிற்கும் காட்சிகள்!

 

இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என உருவாக்கத்தில் உறுதுணையாக இருந்தவர்களின் பங்களிப்பு பரவாயில்லை ரகம்.

 

 

படம் முழுக்க கிளிகிளப்பு வைத்து இயக்குநரின் புத்திசாலித்தனம். அந்த புத்திசாலித்தனத்தை வைத்து சிக்லெட்ஸ் என்ற பேரை‌‌ வைத்து ஆறு கதாநாயகர்களை அடுத்தடுத்து திருந்த வைத்து நல்ல படத்தை எடுத்த‌ இயக்குனருக்கு வாழ்த்துகள்!