நினைவெல்லாம் நியடா இசைவெளியீட்டு விழா. தொகுப்பு. (குங்குமம்) சந்திரசேகர்.

நினைவெல்லாம் நியடா

இசைவெளியீட்டு விழா. தொகுப்பு. (குங்குமம்) சந்திரசேகர்.

ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இப்படம் இளையராஜா இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் கே.ராஜன், ஆர்.வி.உதயகுமார், ப்ரஜன், கேயார், சிநேகன், பேரரசு, கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் :- இன்றைக்கு சினிமாவில் நடிகர் பிரபலமானதும். அரசியல் கட்சி துவங்கி விடுகிறார்கள். விஜயைத் தொடர்ந்து எல்லா நடிகர்களும் ஒவ்வொரும் கட்சி துவங்கிறார்கள். கமல் துவங்கி விட்டார்.இதனால் நிறைய பேர் அரசியல்வாதிகளுக்கு நாம் தேவையானவர்கள் . பல பேருக்கும், வேலை கிடைக்கும். நமக்கும் ஏதா வேலை கிடைக்கும்

நிறைய நடிகைகள் இது போன்ற நிகழ்ச்சி களுக்கு வருவது இல்லை. யார் வரவில்லையோ, அவர்களை பத்தி விமர்சனம் எழுதுங்கள். இந்த நிலை இருக்கிறது. தயவுசெய்து இது போன்ற இசை வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைப்பதை விடுங்கள். மீண்டும் இதுல ஒரே மாதிரியான விஷயங்களைப் பேச வேண்டியதாக இருக்கு

பாடலாசிரியர் சினேகன் :- இது எனக்கு முக்கியமான மேடை. இசைஞானி இளையராஜா இங்கு வந்து அமர்ந்திருக்க வேண்டும். ஆனால், காலத்தின் கட்டாயத்தால் அவர் வரவில்லை மகள் இழப்பிலிருந்து மீண்டு வர வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இந்த படத்தில் நான் மூன்று பாடல் எழுதியிருக்கிறேன்.

 

நான் மூவாயிரம் பாடல்கள் எழுதி இருக்கிறேன். அதுல ஐநூறு பாடலாவது சிறந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன். அதை விமர்சனம் செய்ய போது வருத்தம் இருக்கிறது. நான் சினிமா கதைக்குப் பாடல் எழுதத்தான் சினிமாவுக்கு வந்தவன் .

பட்டுக்கோட்டையார் என்ற கவிஞரை மாதிரி பத்து பாடல் எழுதி விட்டுச் செத்துப் போகலாம். என நினப்பு தான் படத்தில வரும் சில பாடல்கள் இப்படி வருகிறது. என் முதல் படம் பாண்டவர் பூமி. அதுல முதல் பாடலுக்கு அரசு விருது வாங்கிய கவிஞன் என்று பெருமையுண்டு

 

ஏன் ஒரு நல்ல விஷயங்களை இந்த சமூகம் எடுத்து கொண்டாட மறுக்கிறது என்ற வருத்தம் படைப்பாளனாக எனக்கு இருக்கிறது. சில நேரங்களில் சில விஷயங்களைப் பேச வேண்டியதாக இருக்கிறது.

காதல் மரியாதை எதிர்பார்ப்பது இல்லை. எதிர்பார்த்தால் அது காதலும் இல்லை. காதலுக்கு வெற்றி, தோல்வி எதுவுமே இல்லை. அது வாழ்ந்து கொண்டே இருக்கும். அதை கொண்டாடத் தெரியாதவன் சபிக்கப்பட்டவன். காதல் காதலாகவே இருக்கிறது. எல்லா நட்புக்குள்ளும் காதல் இருக்கிறது. மனிதம் காதலைக் கொண்டாட மறுக்கிறது. என்றைக்காவது ஒருநாள் அந்த காதலை கொண்டாடப்படும் நாள் வருமென்று எதிர் ப்பார்க்கிறேன் .என்றார் இயக்குனர் ஆதிராஜன்.